தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

50 வெள்ளி

பீலி
கையில நூறு பணமும்!
கறிச்சோறு பொட்டலமும்!
கொடுத்து ஆள் சேர்த்து!
கூட்டத்தை கூட்டுவதெல்லாம்!
கட்சி மாநாட்டிற்காக!
கைத்தடிகள் செய்யும் வேலை!
சிங்கை!
தரமான தமிழ் நிகழ்வுகள்!
தருவதுதான் வரலாறு!!
தமிழ் கேட்க கூலி – அது!
தன்மான கோளாறு!!
தமிழ் கேட்க அழைத்து!
தராதீர்கள் வெள்ளி! – அது!
தமிழ் தாக உணர்வுக்கு!
வைக்கின்ற கொள்ளி!!
தாய்ப்பால் பருகிட!
தருகின்ற கூலி – அது!
தாய் சேய் உறவுக்கு!
தடைபோடும் வேலி!
தமிழ் என்றால்!
வருவோமே ஆர்வத்தோடு!
தமிழ் என்றும்!
வாழட்டுமே கர்வத்தோடு!!
!
- பீலி

பிரத்யேக தோழியாய்

வே .பத்மாவதி
முதல் நாள்!
என் இருக்கையின் அருகே!
நீ அமர்ந்திருந்த போது!
கவனித்தேன்!
உன் கிழிந்த சட்டையை!
என் கைக்குட்டை கொடுத்தேன்!
அதை மறைக்க!
என்!
அம்மாவிடம்!
அடம் பிடித்து!
நான் வங்கி வந்த!
சாக்லேட்டை பாதியை!
உனக்கு உடைத்து கொடுத்தேன்!
நான் பரிட்சையில்!
பெற்ற முதல்!
மதிபெண்ணுகாக!
தந்தை பரிசளித்த சைக்கிளை!
தொலைத்ததாக!
சொல்லி வைத்து!
உன் பிறந்த நாள்!
பரிசாக்கினேன்!
ஒளித்து!
ஒளித்து!
வைத்து எல்லாமே!
உன்னிடம் மட்டுமே!
சொல்ல விழைந்தேன்!
புது உடையில்!
என்னை!
சோபித்துக் கொண்டு!
வரும் போதெல்லாம்!
என் உருண்டோடும்!
கண்களால் கேட்பேன்!
அழகா இருக்கா!
உனக்கு!
ஆங்கிலம்!
சொல்லிகொடுக்க!
நான் பிரயத்தனம்!
செய்யும் போதெல்லாம்!
நமக்குள்!
சர்ச்சைகள் எத்தனிக்கும்!
முதன் முதலில்!
யாரோ ஒருவன்!
எனக்கு காதல் கடிதம்!
எழுதிய போது!
நீ மீசை முறுக்கி கொண்டு!
சண்டை செய்தாய்!
பத்தாம் வகுப்பில்!
என்றே நினைக்கிறன்!
நீ!
ஏதோ!
கல்விச் சுற்றுல்லா!
செல்ல பத்து!
நாட்கள் என்னை!
பிரிந்த போது!
ஆர்பரிக்கும்!
காய்ச்சல் என்னை!
அவதிகுள்ளக்க!
வெட்சி மலர் போன்ற நான்!
வதங்கி கிடந்தேன் .......!
கடைசியாக!
நீ!
எனக்கு!
பிரியா விடையளித்து!
அன்பளிப்பாய் கொடுத்த!
சாவிக் கொத்து!
என் குழந்தையின்!
கையில் அகப்பட்டு!
கிழே விழுந்தபோது!
இந்த நினைவுகள்!
சிதறியது

யாழ்ப்பாணத்து இரவுகள்

இராகவன்
ஊரடங்குச் சட்டத்துடன்!
தொடங்குகின்ற!
யாழ்ப்பாணத்து இரவுகள்!
படைக்கலங்களுடன்!
நகர்ந்து செல்கின்றன!
கருணையற்ற விதத்தில்.!
!
நத்தின் அழுகையை!
வண்டின் ரீங்கரிப்பை!
வெட்டுக்கிளியின்!
கிறிச்சிடலை!
சாமக்கோழியின் கூவுதலை!
நாயிடும் ஊளையை!
அனுமதிக்காமல்!
வேட்டொலிகளால் முழுமையாகத்!
தம்மை நிரப்பிக்!
கடந்தேகுகின்றன!
சவ ஊர்வலத்தைப்போல!
தமக்குரித்தான எந்த!
ஒலிப்பிலும்!
பீதியைக் கிளப்பி!
மரண ஒத்திகை நிகழ்த்துவதைத்!
தவிர!
யாழ்ப்பாணத்து இரவுகளிடத்தில்!
எதிர்பார்க்க யாதுமில்லை.!
புதுமுறையிலான கொள்ளையிடலையோ!
அல்லது!
கொலைப்பாதகம் மற்றும்!
கூட்டான வன்புணர்வையே!
ஊரடங்கின் வழியே!
அனுமதிக்கின்ற!
யாழ்ப்பாணத்து இரவுகள்!
சதிகாரர்களைப்போல்!
பல்லிளித்துக் குதிக்கின்றன.!
இந்தப் பல்லிளிப்பை!
மின்வெட்டு நிழற்படமாக்கி!
ஊடகங்களில் விதந்துரைக்க!
இன்னும் நிமிர்ந்து!
செல்கின்றன!
யாழ்ப்பாணத்து இரவுகள்.!
-இராகவன்

அழகு மணல்.. முகமிழத்தல்

வேலணையூர்-தாஸ்
அழகு மணல் வெளிகளிலும் பொழி..முகமிழத்தல் !
01.!
அழகு மணல் வெளிகளிலும் பொழி!
-----------------------------------------!
காற்றிறங்கி கடுமின்னல் சேர்த்து!
பொழிகின்ற கார்த்திகையின் கடைசி கன மழையே!
அலையடிக்க கரையேறி!
நண்டூரும் எனதூரின் அழகு மணல் வெளிகளிலும் பொழி.!
ஓங்கி நெடிதுயர்ந்து நிமிரும்!
நீண்ட பனை வெளிமீது நனை.!
இருள் சேர்ந்த ஒரு நாளில்!
ஓங்கியடித்த போர் காற்றில்!
பொலிவிழந்து போனதென் கிராமம்!
நீண்ட தலைமுறையாய் வாழ்ந்தோர்!
இடம்பெயர தனித்து தவித்தெம் பூமி!
உறவுகளை தேடி சலித்து களைத்த மண் களை தீர!
காற்றோடு சேர்ந்து கன மழையாய் ஊற்று.!
அன்னியன் கால் படிந்த தடங்கள் அழித்து!
ஒழுங்கையெல்லாம் ஓடையாய் ஓடு!
மார்கழி பாடல் பாடி தலமுழுகும் குளங்களிலே!
குளிர்நீராய் சேர்!
சங்கோலம் செய்யும் வயல் வெளிகள்!
எம் கோவில் சூரன் போர் செய்யும் திடல்!
மணியாரன் வெளி எல்லாம் வெள்ளமாய் நிறை.!
மழையே தெம்மாங்குப்பாடல் தெவிட்டாத இன்கலைகள்!
திருவிழா கொண்டாட்டம்!
எல்லாம் கண்டு மீண்டும் நிமிரும் எம் தேசம்!
அதுவரைக்கும் பூண்ட சாபம் போக கழுவி!
புது மழையாய் பொழி.!
02.!
முகமிழத்தல்

உரிமையின்மை தொடக்கம்

தேனு
இருள்சூழ் வீடு!
சுருண்டு கிடந்தன!
அகமும் புறமும்!!
அன்னையா?!
வளர்க்கத் தெரியுமா?!
வளர்த்தால் போதுமா?!
வினாக்கள் வலுத்து!
மருமகள் சீற்றம்!!!
வசையினது விசை!
சற்று ஆழமாக...!
கருகும் மலர்கள்!
துடிப்பு தொடர்ந்தது!!!
அன்று!
பிடியாது கூட்டுடுனே!
பயணிக்க எத்தனித்தேன்!
இன்றோ!
அத்தொடற்பயணம்!
தடங்களுடன் தயக்கம்!!!!
சுரக்க மறுத்ததில்லை!
அதரங்கள் துடிக்கின்றன!
மெய்யுரைக்க,!
சுரக்கவே இல்லை!!!!
என்றுமன்றி இன்று!
கால் சலங்கை!
கனலாக உறுத்தியது

எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்

முகில் தினகரன்
தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…!
வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….!
இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….!
குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!!
ஆம்!!
கன்னித் தமிழும் கணிணித் தமிழும்!
கைகோர்த்து நிற்க, !
அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்!
அரவணைத்து நடக்க,!
சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்!
சம காலத்தைச் செழிப்பாக்கிட,!
சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்!
மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,!
தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்!
தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,!
மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்!
மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,!
கொங்குத் தமிழும் குமரித் தமிழும்!
செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,!
செந்தமிழ் சீர் பெற..!
தனித்தமிழ் தரம் பெற…!
நற்றமிழ் நயம் பெற…!
முத்தமிழ் முழங்கியெழ…!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!..........!
ஆற்றுப் படைகளை!
சேற்றுப் படைகளாக்கி!
அந்தாதிகளைப் பந்தாடி!
ஏலாதிகளை ஏலம் கூவி!
நிகண்டுகளை நிர்வாணமாக்கும்!
சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த!
வித்தைத்தமிழரை விரட்டியடித்து!
வீரத் தமிழரின் விலாசங் கூற!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!..........!
சொல்லை அறிந்து…அதன்!
பொருளை அறிந்து!!
தூய்மை அறிந்து….இடத்!
தன்மை அறிந்து!!
பயனுறுத்தும் பாவலரும்!
நயனுறுத்தும் நாவலரும்!
தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!............ .!
அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை!
அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!!
அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்!
வார்த்துத் தந்த வள்ளலாரும்!!
எழுதுகோலில் நெருப்பை நிரப்பி!
கனல் கவி கக்கிய பாரதியும்!!
மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்

அவனை மட்டும் காணவில்லை

ஜோதி - த.ஜெயபால்
பெற்றோம் வளர்த்தோம்- !
பிள்ளைகளை !
பள்ளி செல்லும் !
அவரழகைப் !
பார்த்து தினம் ரசித்தோம் !
அந்தோ இன்று !
பூ முகம் பார்ப்பதற்கும் !
முகம் தடவி !
பூ முத்தம் சொரிவதற்கும் !
சாம்பல் கூட கிடைக்கவில்லை !
சண்டாளா !
சுடலைமாடா !
சுட்டெரித்தாயோ சுடர்களை !
தங்கத் தாமரை மலர்களை.. !
பூசிக்கொள்ளும் சாம்பலுக்கு !
பூ மழலைகள் தான் கிடைத்தாரா !
காலைமாலை கையெடுத்தோம் !
கஞ்சிக்கு வழி இல்லை ஆனாலும் !
படையலிட்டோம். !
ஆனால் நீயோ !
மழலைகளைக் கொலை செய்தாய் !
மானிடர் வாழ்வைச் சிதையிலிட்டாய் !
மழலைகளின் விழி அழகை !
ஊமையான மொழி அழகை !
பெற்றோரின் கனவை !
கொடுஞ் சிதையில் இட்டெரித்தாய். !
!
சீருடையில் பள்ளி சென்ற !
செப்புக் கை கால் பிள்ளைகள் !
கையசைத்த அழகு !
கரிக்கட்டை ஆனதய்யோ !
எழுதிக் கற்ற பள்ளி அறை !
தலையெழுத்தை எழுதிடுச்சே.. !
!
பள்ளிக்கூட தலைமை !
பார்த்து பார்த்து சொல்லித் தரும் !
ஆசான்கள் பறந்தாரே.. !
யார் மேல் குத்தம் சொல்ல? !
எங்கள் குலம் அழிந்ததைய்யோ.. !
!
கோயில்கள் நிறை கும்பகோணத்தில் !
நீ ஆடிய ஊழிக்கூத்தில் !
அலறி துடித்த குரல் கேட்கலையா !
அழகு எரிகற்கள் !
எரிந்து விழுந்தது தெரியலையா !
எரியும் பூக்கள் உயிர்காக்க !
ஏனோ நீ வரவில்லை !
அணிஅணியாய் அஞ்சலிகள் !
தலைவர்கள் தொண்டர்கள் !
தாய்மாரின் கதறல்கள் !
பெற்றவனின் கூக்குரல்கள் !
பிள்ளைகளைத் தீண்டிய தீ யவனை !
தண்டிக்கும் சாபங்கள் !
உயிர் பிழைத்த பிள்ளைகளின் !
பூக்குவியல் அஞ்சலிகள் !
கவிதைகள் கண்ணீர் ஊர்வலங்கள்.. !
உலகமே கூடியது !
மழைக்காணா குடந்தை நகர் !
மக்கள் கண்ணீரால் நனைந்தது !
அநியாயக்காரன் அவன் !
அவனை மட்டும் காணவில்லை.. !
- ‘ஜோதி’ !
(த.ஜெயபால்) !
--------- !
T.JEYAPAL M.A., B.G.L., DHBM (Homoeopathy) 1258, 16th Street Poompuhar Nagar !
Chennai-600099

ஏனிந்தப் பிரிவினை?

பவித்திரா
கனடாவிலிருந்து பவித்திரா !
அன்புசால் தமிழினமே! அமைதிசற் றடைந்திடுக! !
ஆறறிவை எமக்கிங்கு ஆண்டவன் அளித்தமை !
இன்புற வாழ்வுதனை இனிது களித்தற்கே! !
இடருடன் துயரும் இடையிடையே வருதல்தான் !
மன்னுமிவ் வையகத்தே மாண்புறு உயிர்கட்கு !
மீட்சியிலா நிகழ்வன்றோ? மேதினியில் இயல்பன்றோ? !
என்புருக உளம்நோக எதிர்கொண்ட செய்திகள்தாம் !
ஏக்கம்தனை யளித்து எமைவாட்டி நிற்பனவே! !
கண்ணெனப் போற்றிடும் மாவீரர் கனவுகளும், !
கதிரோனாம் தம்பியவன் கனிவான நினைவுகளும், !
நுண்ணிய ஆற்றலுடை மறவர்தம் கொடைகளும், !
நோன்பிரு தமிழன்னை மாதவப் பேறதுவும், !
மண்ணிழந்து மரபிழந்து மானம்தனைத் தொலைத்து, !
மகிழ்வின்றி வாழ்ந்திடும் மாந்தர்தாம் சொரிந்திட்ட, !
கண்ணீரும் செந்நீரும் களங்கமிலா வாழ்வுமங்கே !
காத்திடுமெம் நாடுதனை! கலங்காதீர் தெளிவடைவீர்!!
களத்தினிலே இடமளித் தணைத்த எம்தலைவன் !
கருணா என்கின்ற கனிவான பெயர்கொடுத்துத் !
தளத்தினிலே பெருந்தலையாய்த் திகழ்ந் திட வேயங்கு !
தக்கநல் பதவியும் தருணத்தில் வழங்கினான்! !
வளமிகு நாடுகட்கு வாழ்த்தியே அனுப்பிநின்றான்: !
வாஞ்சையுடன் சந்தித்து வருடிக் கொடுத்திருந்தான்! !
அளவிலா வாய்ப்புக்கள் அத்தனையும் பெற்றிருந்தும்,!
அறிவிலியாய்ப் போனதன் ம+மம்தான் பு£¤யவில்லை!!
போரியல் வரலாற்றில் புதிதல்ல இவையொன்றும், !
புல்பூண்டு நெல்வயலிற் களைதலென அவைகளையும்!
நேரகாலம் பார்த்திருந்து நீக்கிடுவார், பொறுத்திடுக! !
நீசர்கள் வாழ்வங்கு நிர்மூல மாகுமன்றோ? !
பாரதிர வந்ததுயர் பனியென விலகிவிடும்! !
பகலவனாம் தலைவனவன் ஒளிபட் டுருகிவிடும்! !
தூரமில்லை! தாயகத்தின் விடிவங்கு தெரிகிறது! !
துணையான மறவர்கள் தோள்களும் துடிக்கின்றன! !
!
வதந்திகளை நம்பாதீர்! வார்த்தைகளை அளவிடுவீர்!!
வடக்கெனவும் கிழக்கெனவும் பிரிவினைகள் பேசாதீர்! !
சுதந்திரமாய் நாமங்கு சுற்றிவந்த காலங்கள், !
சொந்தமெனப் பந்தமெனத் துணைநின்ற கோலங்கள்!!
இதந்தரு வாழ்வுதனை இன்றுநாம் மறக்கலாமா? !
ஏனிந்த வேறுபாடு? எவரிதன் மூலகர்த்தா? !
பதந்தரு வேளைதனில் பறித்திட வந்தவரைப் !
பகுத்தறிந்து புறம்தள்ளப் பக்குவமாய்ச் செயற்படுவீர்!!
திருமணங்கள் புரிந்ததும் சீர்வரிசை பேணியதும் !
சிறப்புற வாழ்வுதனைச் செம்மைப்ப டுத்தியதும் !
திருவிழா நாட்களிலே திசையெதிராய்ப் பயணித்து !
தித்திக்கும் விருந்துண்டு திரைகடல் எழில்கண்டு !
பருவமழை காத்திருந்து பயிர்செய்ய உதவிநின்று !
பயனுடனே விடுமுறையை நட்பிற்காய்ப் பேணிநின்று!
பெருமனதாய் நாமன்று பிணைந்துவாழ்ந் திருந்தோமே! !
பிரிவினைகள் பேசுகின்ற பாதகரை விலக்கிடுவீர்! !
ஆனையுடன் மோதவரும் ஓநாய்கள் அவரன்றோ? !
அழகியவெள் ளாடொன்று செம்மறியாய் மாறியதோ?!
மானமிகு சூரியனின் மஞ்சட்கதிர் தெறித்து !
மாய்ந்திடும் விட்டில் களாவாரி வரன்றோ? !
கானகத்து வேங்கையுடன் குள்ளநரிக் கூட்டமொன்று!
காலநேரம் பார்த்திருந்து கபடம் புரிகிறதோ? !
சேனைபல புடைசூழச் செந்தமிழர் திசைவந்த !
சிங்களமும் ஆரியமும் அடைந்தகதி மறந்தனரோ? !
ஒற்றுமையே பலமெனும் உயர்வாய்க் கியம்தனை !
ஒவ்வொரு தமிழ்மகனும் உணர்ந்து வாழ்ந்திருப்பின் !
இற்றைவரை வாட்டிடும் இனவேறென் றசொல்லும் !
என்றோ தொலைந்திருக்கும்! எம்தேசமும் விடிந்திருக்கும்! !
நற்றரையில் ஊர்ந்திருக்கும் சிற்றெறும்புக் குழுகாணீர்! !
நறைசேர் குளவிக் கூட்டம்தனை நோக்கிடுவீர்! !
மற்றையதம் மினத்தோடு மகிழ்ந்திருந் துறவாடி !
மனமுவந்து பகிர்ந்துண்ணும் காக்கைதனைக் கண்டிடுவீர்! !
பொறுமையுடன் எம்புலிகள் புரிகின்றார் சாதனைகள்! !
புவிதனிலே சந்தித்தார் பொல்லாத சோதனைகள்! !
நிறுவிடுவார் விரைவினிலே தாயகக் கோட்பாடு! !
நீதியுடன் நாம்வாழ நற்பணிக ளாற்றிடுவார்! !
மறம்காத்த தமிழினத்தின் சரித்திரத்தை முன்நோக்கி,!
மாறுபட்ட வேற்றுமையால் விளைந்த துயரறிந்து, !
உறவினருக்கும் நண்பருக்கும் ஊரிலுள்ள அனைவருக்கும் !
ஒற்றுமையின் மகத்துவத்தை ஒன்றிணைந் தெடுத்துரைப்பீர்

அழிய மறுக்கும்

றஞ்சினி
குப்பைக்காடாய் !
குவிந்துகிடக்கும்!
நினைவுகளை!
எரிக்கநினைக்கையில்!
அழுது விழுந்து !
ஆர்பரிக்கிறது !
உனது நிழல்!
சிறிது தளர்ரும் மனதை!
இறுகப்பூட்டி!
கவனமாக!
தொடங்கியதிலிருந்து !
முடிந்ததுவரை!
சேர்த்து!
எரிக்கும்போது!
ஆவியாகி மீண்டும் என்னுள் நீ!
!
-றஞ்சினி

பருந்துகளும் என் வீட்டு

கவிதா. நோர்வே
க்கோழிக்குஞ்சும்!
-----------------------------------------------------!
பலம் படைத்தவன்!
பூமியில்!
பாவம் மண்புழு!
கொத்தித் தின்றது கோழி!
ஓடும் மீன்!
ஒற்றைக் காலில் கொக்கு.!
எங்கள் பின்முற்றத்தில்!
காணாமல் போனது!
என் கோழிக்குஞ்சு!
உயரத்தில் பருந்து.!
தொலைவில் வேட்டுச்சத்தம்!
தொப்பென்ற விழுச்சத்தம்!
அது வேட்டைக்காரன்.!
விழுந்தது பருந்து.!
மரங்களும் புதர்களும்!
முயல்களும் மான்களும்!
பாய்ந்தது சிங்கம்!
மிருகச்சாலைகள்!
கூண்டடைபட்டு சிங்கம்!
பக்கத்தில் யானை!
ஈழத்தமிழர் உரிமை இழப்பு!
இலங்கையரசின் இறைமை,!
இந்தியா, சீனா,!
இன்னும் சொல்லாம்!
எல்லாத்துக்கும் சேர்த்து!
ஒரு அமெரிக்கா... போதாதா?!
எனக்குப் புரிந்து போனது!
ஜனநாயகம்!
- கவிதா நோர்வே