பிறந்த மண்ணில் சுதந்திரமாக!
பறந்து திரிந்த பறவைகளுக்கு!
வெள்ளை பருந்துகள் புதிய அறிமுகம்!
பிறந்த மண்ணை விட்டு!
வெள்ளா பருந்துகளின் ஈர்ப்பில்!
தொடர்ந்தன......சுவர்னபூமியை நோக்கி!
வந்து சேர்ந்த பறவைகளுக்கு!
சுவர்னம் கிட்டவில்லை!
வெள்ளை பருந்துகள் காட்டியதோ துயரம்!!
குரல் எழுப்பின மற்ற இனப் பறவையோடு!
கூட்டணி சேர்ந்தது பறவைகள்!
சுவர்ன பூமியை மீட்க!
போரட்டம் நடந்தது!
நம்மினத்து பறவைகளின் பங்கு......மேலானது!
சுவர்ன பூமி மீட்கபட்டது!
அதே வேளையில் ந்ம்மினத்து பறவைகளின்!
உரிமை மறுக்கப்பட்டண...........!
அரவணைப்பு புறக்கணிக்கத்தான்!
என்று பறவைகள் அறியவில்லை!
பரிதாபம்......... பரிதாபம்......... பரிதாபம்.........!
அரை நூற்றான்டுகள் ஆயின!
இன்னும் சுவர்னம் கிட்டவில்லை!
உரிமை குரல் மீண்டும் எழுப்பின!
நம்மினத்து பறவைகள் புதிய கூட்டணியோடு!
பறவைகள் தந்த சிறகுகளால்!
வெற்றி இலக்கு கிட்டியது!
இந்த கூட்டணியாவது சுவர்னத்தை!
காட்டுமா என்று ஏங்கிகொன்டிருக்கிறது!
நம்மினத்து பறவைகள்....இன்று வரை

பிரான்சிஸ் சைமன்