கைவளைக்கும் இல்லை கணிவு - அகரம் அமுதா

Photo by Tengyart on Unsplash

காமன் வதைபட கட்டில் முறிபட!
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்!
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!!
சட்டெனமா மன்பிரிந்த தால்!!
கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;!
ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்!
மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்!
தேனினிய சொல்திக்கு தே!!
மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்;எண்!
சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்!
வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்!
தோளிரண்டில் தொத்தாதக் கால்! !
வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்!
எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்!
ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்!
காணேனே கண்ணொடுகொண் கன்!!
கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்!
கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்!
என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்!
கண்ணருகில் காட்டானோ கண்டு?!
வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்!
சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல!
மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்!
கைவளைக்கும் இல்லை கணிவு!!
!
-அகரம்.அமுதா
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.