தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சாபமல்ல

பாண்டித்துரை
என் வாழ்வில் !
எனக்கு கிடைத்தது !
கிடைக்கப்போவது !
எதுவுமே !
சாபமல்ல! !
படைத்த பிரம்மன் !
பார்த்துப் பார்த்து !
கொடுத்த வரம்! !

துயரிசை

விசித்ரா
மயானக் குருவியின் இசைக்குறிப்பில்!
எனது குரலின் துடிப்பு !
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது!
அது !
துயரங்களை அள்ளிவந்த காற்றின்!
இழையறுத்து சுதியும் லயமும் சேர ஆலாபிக்கிறது!
நெஞ்சுக்குள் எரியும் நெருப்பும்!
மீள மீள உயிர்க்கும் துயரங்களுமே!
பாடுபொருளாகின்றன!
கிளைவிரிந்த எனது மன வெளிகளில்!
இன்னும் ஒளியெறிக்கவில்லை!
காற்று வீசவில்லை!
இலட்சிய விம்பமும் !
துன்பியல் சாயமிடப்பட்ட காதலும்!
எண்ணிமுடிக்க முடியாத தோல்விகளுமே!
வாசனையோடு பூத்திருக்கின்றன!
எந்தச் சாமியும் இந்தப் ப+க்களை!
பூசைக்கு ஏற்கவில்லை!
என் வாலிபத்தோடு வலிகளே நெருக்கமாயின!
வலிகளைத் தாண்டி புறப்படும் நேரம்!
மயானத்தின் வெளிகளிலெல்லாம்!
இசைவிரிகிறது!
துயரம் நிறைந்த எனது குரலின் துடிப்புகளோடு!
- விசித்ரா

முதல்வன்… எச்சில் மனிதர்கள்

கிளியனூர் இஸ்மத் துபாய்
1. முதல்வன்…!
ஆதிமனிதன் ஆதமே!
அகிலத்தின் முதல் மனிதன்!
அதனால்!
ஆண்டவன் சொல்கிறான்!
ஆதமேஆதி முதல்வனென்று…!
வாழ்க்கையை பலர்!
போட்டிகள் நிறைத்து!
பேட்டிகள் கொடுத்து!
வாய்மையை குலைத்து!
பொய்யன்பை வளர்த்து!
போலிபுன்னகையுடன்!
வாழ்வை வென்றதாய்!
நகைக்கும் இவர்கள்!
நவிலலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
நாட்டை ஆள்பவர்களும்!
நடனம் ஆடுபவர்களும்!
நளினமாக இருப்பவர்களும்!
சொல்லலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
கற்றதை கற்ப்பிப்பவர்களும்!
கல்லூரி மாணவர்களும்!
விற்பனை விற்பண்னர்களும்!
கற்;பனை கலைஞர்களும்!
கதைக்கலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
அருள் வழங்கும் சாமியார்களும்!
பொருள் குவிக்கும் குபேரர்களும்!
இருள்மொழி அரசியல் வாதிகளும்!
மருள்மொழி வழங்கலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
முகத்திரை விலக்கினால்!
அகத்திணை மலரும்!
முதல்வனாய் முகடம்சூட!
முன்னுரை வேண்டும்…!
முதல்வன் - அவன்!
முழுமணி மதியானவன்!
மனிதர்களில் மனிதனாக!
வாழ்பவன்!
மனித நேயத்தை சுவாசிப்பவன்!
தான் யாரென்ற மெய்யறிவு!
நிறைந்தவன்!
மதம் பேதம் இல்லாமல்!
பதமை நிறைந்த இதயவன்!
சோதனைகளை!
சாதனையாக்குபவன்!
எண்ணத்தில் ஏழையாகுபவன்!
தர்மத்தை தர்மம் செய்பவன்!
அன்பை விளைவிப்பவன்!
அவனே சம்பூரண மனிதன்!
அவன் தான்!
இந்த அகிலத்தில் முதல்வன்…!!
2.எச்சில் மனிதர்கள்!
!
சேற்று மனிதர்கள்!
வீட்டின் வாசல்வரை!
நேற்றைய்ய துளசி!
பூஜையறை வரை!
உண்டதுபோக!
மிச்சத்தை கொடுப்பதிற்கில்லை!
அவர்கள்!
எச்சத்தைக் கொடுக்கும்!
எச்சில் மனிதர்கள்!
இடுப்பில் துண்டு!
அடுப்பில் கஞ்சி!
உழைப்பில்லா சோம்பேறிகளா!
இல்லை!
இல்லை!
இவர்கள் இயந்திர மனிதர்கள்…!
உற்பத்தியாகும் பொருளுக்கு!
முகவரி கொடுத்துக் கொள்வது!
முதலாழித்துவம்!
இயந்திரமல்ல!
சுயத்தை அறியாத சுப்பிகள்!
மனிதநேயம் பேசுவது!
மேடையில்சோடா குப்பிகள்!
சமத்துவம் பேசும்!
அவத்தம்வாதிகள்!
இன்னும் தேவைப்படுகிறது!
ஜாதிச் சான்றிதல்கள்!
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்!
விழுக்காடுகள் கூடலாம்!
மாறாது சுடுக்காட்டுக் குடிசைகள்!
கருவறிந்த மனிதர்கள்!
அருவறிந்த புனிதர்கள்!
அரசியல் களம் காணும்போது!
சுயமறிந்த சூரிய்ய வாழ்க்கை!
தலித்க்களுக்கு மட்டுமல்ல!
தன்னையறிந்த!
மனிதர்களுக்கு…!!
-கிளியனூர் இஸ்மத்

விடுதலை

மு. பழனியப்பன்
மு. பழனியப்பன்!
யாருக்காகவும்!
பணிந்து போகத் தேவையில்லை!
பதவிப்பிரியர்கள்!
பதவியைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
பதவி முடிந்த அடுத்தநாளில்!
யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று!
தேம்பி அழுகிறார்கள்!
பணப்பிரியர்கள்!
பணத்தைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
நாளைக்கே பணம் வற்றிப்போனால்!
கையேந்தக் கூட ஆளில்லாமல் போகலாம்!
சுயப்பிரியர்கள்!
தன்னைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
தன் காற்று மாற்றி வீசினால்!
சுயம் காணாமல் போகலாம்!
எது எப்படியானாலும்!
பதவிக்காகவோ!
பணத்திற்காகவோ!
சுயத்திற்காகவோ!
மற்றவர்கள் பணிந்து போகவேண்டும் என்று!
எண்ணுவதில்தான் சிக்கல் இருக்கிறது.!
யாருக்காகவும் எதற்காகவும்!
பணிந்து போகாதவர்கள்!
யாரையும் பணிந்துபோகக்!
கட்டாயப் படுத்த மாட்டார்கள்

உரிமையில்லை

கார்த்திக் எல்
பிறப்பில்!
இருந்து இறப்பு வரைக்கும்!
எங்கும் குடுக்க வேண்டும்!
லஞ்சம் !!!!
மாக்களின் உணவில்!
இருந்து - விஞ்ஞான!
கண்டுபிடிப்பு வரை!
சர்வமும் ஊழல் மயம் !!!!
பள்ளி சேர்க்கையில்!
இருந்து!
கடவுளின் கருவறை வரை!
எங்கும் தேவை!
சிபாரிசு !!!!
ஓட்டுக்கும்!
காசு - நம் உரிமையை!
அடகு வைத்தப் பின்!
லஞ்சத்தை கேள்வி!
கேட்க உரிமையில்லை!
நமக்கு

மாணவ பிள்ளைதாச்சிகள்.. கள்ளன்

வி. பிச்சுமணி
மாணவ பிள்ளைதாச்சிகள்..கள்ளன் போலீஸ் !
01.!
மாணவ பிள்ளைதாச்சிகள்!
-----------------------------!
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்!
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்!
குந்த இடமில்லாமல்!
முதுகில் புத்தகத்தை சுமந்து!
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் !
முதுகு பைகள் கர்ணகவசம்!
கழற்றி வைக்கப்படுவதில்லை!
குந்திகளின் மூக்கை அறுக்கும்!
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும் !
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்!
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்!
கூட்டம் அதிகமாக இருந்தாலும்!
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் !
இந்த கர்ணர்களை கண்டால்!
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்!
இறக்கி கையில் வைக்க சொன்னால்!
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் !
முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென!
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது !
!
02.!
கள்ளன் போலீஸ் !
------------------------- !
நிலவும் நானும்!
கள்ளன் போலீஸ் விளையாடினோம்!
நான் போலீசாக!
நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும்!
நிலவு போலீசாக!
நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன்!
இப்படி மாறி மாறி!
இரவெல்லாம் விளையாட்டு!
சூரியன் தன்னையும் விளையாட்டில்!
சேர்க்க சொல்லி சண்டையிட!
எங்கள் விளையாட்டை கலைத்தோம்!
மற்றொரு நாளில்!
விளையாடுகையில்!
நிலவு மேகத்தில் மறைந்து!
போக்கு காட்டியது!
அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
போதும் விளையாட்டு!
வெளியே வா என அழைக்க!
நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது!
நிலவு வடித்த கண்ணீர்!
எங்க ஊரு முழுவதும் மழையாக

தோல்வி

இரா சனத்
மாணவனுக்கு பரீட்சையில் தோல்வி!
மன்னனுக்கு ஆட்சியில் தோல்வி!
மங்கையருக்கு காதலில் தோல்வி!
மடையனுக்கு மகிழ்ச்சியும் தோல்வி!
அலட்சியத்தால் இலட்சியத்துக்கு தோல்வி !
அமைதியால் ஆணவத்துக்கு தோல்வி !
அடிமைத்தனத்தால் வீரத்திற்கு தோல்வி !
அறியாமையினால் அறிவுக்கு தோல்வி!
காலை பொழுதினிலே கங்கை கரையினிலே!
கன்னியர்கள் கவர்ச்சியாக நீராடுவதை கண்ட!
கதிரவனுக்கு முகில் கூட்டத்தால் தோல்வி!
முன்நோக்கி செல்வதற்கு முனையாமல்!
பின் நோக்கி நகர்வதற்கு முனையும்!
வீரத்தன்மையற்ற படைவீரர்களுக்கு !
போர்களத்தில் தோல்வி நிச்சயம் !
மக்கள் தேவையை நன்கு அறிந்து!
மக்களுக்கு சேவையாற்ற தவறும்!
அதிகாரமுடைய அமைச்சர்களுக்கு!
தேர்தலில் படு தோல்வி நிச்சயம்!
அன்னையை மதிக்காமல்!
ஆண்டவனை துதிக்காமல்!
அலட்சியமாய் வாழ்பவனுக்கு!
தொட்டதெல்லாம் தோல்வியாகும்!

அமெரிக்கன் பேபி

ஜான் பீ. பெனடிக்ட்
ஆகாயத்தில் பறந்து!
ஆயிரமாயிரம் மைல் கடந்து!
அப்பனும் ஆத்தாளும்!
அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால்!
அமெரிக்கன் சிட்டிசன்!
ஆனாயே நீ தானே!
அயல் தேசம் பிறந்ததனால் - நீ!
அத்தை மாமா அறியலையே!
அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு!
ஆடிப் பாடவும் முடியலையே!
அம்மாயி அப்பத்தா!
அவர்களின் புருஷன் உன் தாத்தா!
அணைத்து மகிழும் வாய்ப்பு ஒன்றை!
அவர்கட்கு நீயும் அளிக்கலையே!
அன்பாய் வளர்த்த பசு மாடு!
ஆறாவதாய் ஈன்ற கன்று ஒன்று!
அன்னை மடியை முட்டி முட்டி!
ஆர்வமாய்ப் பால் குடிக்கும்!
அழகை நீயும் காணலையே!
ஆண்டுக்கு ஒரு முறை!
அமர்க்களமாய் ஊர்த் திருவிழா!
ஆட்டுக் கிடா வெட்டி!
அய்யனாருக்கு விருந்து படைக்கும்!
அதிரடியை நீயும் அறியலையே!
குளுகுளு சீசனிலே!
குற்றாலமலை அருவியிலே!
குளித்து மகிழும் பாக்கியம்!
குழந்தை உனக்குக் கிட்டலையே!
ஆட்டுக் குட்டியை தூக்கிக்கொண்டு!
ஆடு மாட்டை ஓட்டிச் சென்று!
அருகம் புல்லை மேயவிட்டு!
அந்தி சாய வீடு திரும்பும்!
அற்புதம் உனக்கு வாய்க்கலையே!
ஆற்றங்கரையில் நடை பயின்று!
ஆல விழுதில் ஊஞ்சலாடி!
அரப்பு தேய்த்து ஊற வைத்து!
அம்மனமாய் குளியல் போடும்!
ஆனந்தம் உனக்குக் கிடைக்கலையே!
அன்பு மகனே மகளே!
அறியாத வயது உனக்கு!
அனுபவித்து இழந்ததனால் எழுதுகிறேன்!
அப்பன் நான் ஒரு கிறுக்கு

அக்சய திருதியை

சித. அருணாசலம்
நாளெல்லாம் நிகழ்வுகளில் !
நல்லதே வேண்டுமென!
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது!
புல்லைத் தின்ன சொல்லிப்!
புலியை மல்லுக்கட்டுவது போலாகும்.!
நல்ல நாட்களில் அதைச்!
சொல்ல வரும் போது!
நினைவினில் அகலாது !
நீங்காமல் நிறைந்திருக்கும்.!
தங்க வியாபாரத்திற்காக!
தந்திரமாய் அதை மாற்றி!
வாங்குங்கள் தங்கத்தை!
பெருக்குங்கள் செல்வத்தை - என!
உணர்வுகளைச் சாதகமாக்கி!
உல்லாசமாய் வியாபாரம் பெருக்கி!
மனிதனைச் சிந்திப்பதிலிருந்து!
மழுங்கடிக்கச் செய்வதையும்,!
கூட்டத்தை வரவழைத்துக் !
கொள்ளை லாபம் ஈட்டுவதையும்,!
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!
உள்ளத்தில் தூய்மை ஒன்றே!
உலகத்தில் சிறக்குமென்பதை!
உணர்ந்திட வேண்டும்.!
-சித. அருணாசலம்

நான்கு இறக்கைகள் கொண்ட

ஏ.கே.முஜாரத்
அவன் மனசு!
------------------------------------------------!
அல்லாஹ்விற்கே உரித்தான நான் என்கிற!
சொற்பெறுமானத்தை சகோதரனான அவன்!
காக்கை இருளுக்குள் களவாடி!
வெள்ளை சீலைத் துண்டுகளால் துடைத்து!
பௌடர் இட்டு முத்தமிட்டு!
கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறான்.!
பெரும் சனத்திறல்களிலும்!
அச்சிறகுகளை உயர்த்தி பொம்மைக் குட்டி போல!
வடிவம் காட்டுகிறான்!
இன்னும் வானம் பூமிக்கு!
இடைப்பட்ட தூரம் கேட்கும் படியாக!
அ+க்காண்டியாகவும் பருந்தாகவும்!
அல்லது கழுதையாகவும் தேவைப்படின் நரியாகவும் மாறி!
உரத்து ஒலமிடுகிறான்!
நான் என்கிற அச்சொற் பெறுமானத்தை ஆணவத்தோடு!
தலைக்கு மேல் தூக்கி வைத்து!
கொண்டாடும் அவன் நாளை!
பிர்அவ்னாகவும் மரணிக்கக் கூடும்