தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே

எசேக்கியல் காளியப்பன்
தமிழுக்கே உயிரென்று தண்டவாளம் மேல்படுத்தோர்!
உமிழ்ந்திட்ட தெல்லாமும் ஒருமொழிமேல் விடமன்றோ?!
அமிழ்தென்றே கூறியவர் அதைப்பாட மொழியாக்க!
உமிழ்ந்தாரோ ஒருசொல்லும்? ஊர்,ஏய்ப்பே எல்லாமும்!!
வேற்று மொழிபடித்து வெளிநாட்டு வேலையையே!
போற்றி அவர்தொடரப் போவதுவும் அதனாலே!!
தூற்றி அதனால்தான் தூயதமிழ்ப் பெயர்சொல்லார்!!
சேற்றில் இறக்கிவிட்டச் செம்மல்களை நினையுங்கள்!!
தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே!!

அந்த மழைநாளில் .. உன் பெயரை

அ. ஜெயபால்
அந்த மழைநாளில்,, உன் பெயரை மட்டும் சொல்லும்!
01.!
அந்த மழைநாளில் !
------------------------------!
இது கார்கால மழைக் காலம்!
கண்டிப்பாய் நனைந்தாக வேண்டும்!
நாம் நடந்த வீதிகளில்!
இன்று மீண்டும் நான் நடக்கத் தொடங்கினேன்!
தனிமையில்!
நடையில் வேகத்திற்கேற்ப!
தூறல் என்னை நனைக்கத் தொடங்கிற்று !
துவட்டிக் கொள்ளத் துணிந்தவனாய்!
கை வீசி நடக்கிறேன்.!
தெருக் கோடி மூளையில் உன் உருவம்!
மழைச் சாரலில் மின்னல் வெளிச்சத்தில் !
சட்டென மறைந்து போனது !
ஒரு வேளை!
என் கண்ணிலிருந்து மறைக்கப் பட்டிருக்கலாம் !
ஊரார் தூற்றுவது மெல்ல !
என் காதில் பெரு இடி சத்தத்தின் ஊடாக !
ஒலிக்கிறது.!
நீஎன்னுள் !
பேயாய் குடி கொள்ளத் தொடங்கி விட்டாய்!
ஆடி தீர்ந்த பின்.!
நினைவு தட்டி மீண்டேழுகிறேன்!
உடல் குளிரில் நடுங்கத் தொடங்கிற்று.!
ஓடுது வெள்ளம் தடையற்று.!
அடித்துச் செல்கிறது என்னையும்!
அணை போட யாருமில்லை.!
அழுது தீர்க்கிறேன்!
அடை மழையோடும்!
ஆனந்தக் கூத்தோடும்!
யாருக்கும் தெரியாமல்.!
!
02.!
உன் பெயரை மட்டும் சொல்லும்

பாழ்படும் சித்திரம்

ராம்ப்ரசாத், சென்னை
இயல்பை கீழே தள்ளி!
ஏறி மிதித்துவிட்டு ஓடுகின்றன!
செயற்கைகள்...!
வாழ்க்கைக்கூடத்தில்!
உணர்வுகளை கொண்டு!
விளையாடுவதெப்படியென்று மட்டுமே!
சொல்லித்தரப்படுகிறது...!
எதுவும் தன் இயல்பில்!
இருப்பதில்லை,!
இயல்பு உட்பட....!
அழிக்கமுடியாத ஒரு மாபெரும்!
கருப்புப் புள்ளியில்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
சிறிதளவேனும் வெளுப்பு!
தெரிந்தால் அது காட்சிப்பிழை!
என்று எண்ணத் தோன்றுவதில்லை...!
அழகான சித்திரமொன்றை!
பாழ் செய்வதெவ்வாறென்கிற‌!
முறை மட்டுமே இறுதியில்!
தொக்குவது விசித்திரம்...!

வலி உணரும் தோல்கள்

ரசிகவ் ஞானியார்
தவித்த வாய்க்கு ...!
தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!!
தாகம் தீருமுன்...!
தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?!
நாங்கள்!
தண்ணீர் கேட்டால்!
இரத்தம் தருகின்ற...!
உங்கள் பெருந்தன்மைதான் என்னே!!
!
நாற்காலிகள்!
நகர்ந்துவிடக்கூடாதென்றா!
அருவியின் வெள்ளத்தில்...!
அணை கட்ட முயல்கின்றீர்கள்?!
!
நீங்கள் தண்ணீர் சேமிக்க…!
நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!!
நாங்கள் கண்ணீர் சேமிக்க…!
நீங்கள் அணை கட்டுகின்றீர்கள்!!
!
தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்!
உங்களிடம்…!
அனுமதி கேட்டால்,!
எங்கள்!
தலைமுறைகள்...!
பட்டுப்போய்விடும்!!
!
கடந்து சென்ற காலத்தையும்…!
கடந்து வந்த நீரையும்…!
திருப்பி எடுக்க!
எவனும் பிறக்கவில்லை!!
யாருடைய மொழி சிறந்தது!
என்பது!
இன்னொரு பக்கம் இருக்கட்டும்!!
ஆனால்!
வலி உணரும் தோல்கள்தான்!
இருவருக்கும்!!
!
-ரசிகவ் ஞானியார்
--------------------------!
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

s.உமா
சீக்கிரமாய் விட்டுவிட்டதால்!
பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு!
வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'!
சீடையும் முறுக்கும்!
'ஸ்பெஷல் பாக்' வாங்கிக் கொண்டு!
அரைலிட்டர் பால் பாக்கெட்டோடு!
உள்ளே நுழைந்தது!
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி...!
கண்ணா ஷுவை ஓரமாய் வை..!
குளி,யூனிபார்ம் மாற்று என்ற!
வழக்கமான அர்ச்சனையோடு!
ஆரம்பமானது பண்டிகை...!
பிஞ்சு விரல்களால் நெற்றியிலிட்ட விபூதி!
கண்ணக்குழிவிலும் மூக்கு நுனியிலும் சிதற!
குழந்தைக்கண்ணன் ரெடியாகி விட்டான்...!
அவனுக்குத் தெரியும்!
இன்று விசேஷமென...!
பள்ளியிலிருந்து திரும்பும் சாயங்கால வேளைகளில்!
வீட்டில் அம்மாவும் சூடான பாலும் டிபனும்!
விசேஷம் அவனுக்கு...!
அரைடம்பளர் காபியோடு!
அவசரக் கோலமும் குளியலும் முடிந்து!
'ஆண்டவா' என நின்றப் போது!
கோபந்தான் அவன்மேல் சிறிது!
அழித்து விட்ட ஒரு கம்சனைப்போல்!
அழிக்காதுவிட்ட ஆயிரம் கம்சன்களுக்காக!
எந்த யுகத்தில் தான் நீ சம்பவிக்கப்போகிறாய்!
என அரை மனதில் யோசித்தாலுமா!
எங்கள் வீடுகளில்!
குட்டி குட்டிக் குழந்தைகளாய!
என்றும் அவதரித்து!
புதிது புதிதாய் குறும்பு செய்யும் அவனை!
கோபிக்கவும் முடியாமல்!
'நெட்டில்' தேடி பிடித்து!
மகாராஜபுரம் சந்தானமும்!
உண்ணிக்கிருஷ்ணணும்!
உருகி உருகி!
'ஆடாது அசங்காது வா...கண்ணா....'!
என்றழைக்க!
என் மடியில்!
எங்கள் வீட்டு குட்டிக்கிருஷ்ணன்!
மூடிய கைகளில்!
முறுக்கும் சீடையுமாய்..!
அம்மா 'ஓவரா சாப்பிடலாமா' என கேட்க!
கண்ணனுக்கு நைவேதியமும் ஆனது..!
S.உமா

நம்பிக்கை.. கலியுக மணிமேகலை

மு.கோபி சரபோஜி
01.!
நம்பிக்கை!
--------------------!
வில்லும்!
கல்லும்!
வனமும்!
கவிதையும்!
வந்து கொண்டே இருக்கின்றன.!
ஒரு இராமனாவது!
வாழ்வான் என்ற நம்பிக்கையில்!!
02.!
கலியுக மணிமேகலை !
----------------------------------!
பிச்சை பாத்திரத்தில்!
அன்னம் ஏந்தி வந்தாள்!
சமண மணிமேகலை.!
பிள்ளை ஏந்தி வருகிறாள்!
கலியுக மணிமேகலை

நன்றி சொல்லும் நேரம்

சம்பூர் சனா
…!
-----------------------------!
நான் பிறந்ததால்!
“நீ”!
இறந்தாய்..!
நீ இறந்ததால்!
“நானும்”!
இறந்தேன்.. !
மீண்டும் ஓருயிரென!
ஆனாயோ..?,!
என்னை இன்று!
வாழ்த்துகிறாய்… !
உன் ஒரு வாழ்த்துக்காக!
காத்திருந்தேன்!
பல நாள்.., !
இன்று என்னை வாழ்த்துகிறாய்!
“நான்” உயிர் நீத்த!
பின்னால்… !
“நன்றி” சொல்ல!
“நான்” இல்லை..,!
ஆனாலும் சொல்லுகிறேன் -!
“கல்”லாய் உள்ளம் ஆகினாலும்!
இதயம் இன்றும் துடிப்பதனால்…!!
என் அன்பு வாழுமிடம்!
உன் இதயம்!
என்பதனால்!
“நான்” இறந்து போனபோதும்!
உனக்குள் வாழ்வேன்!
இதயத்துடிப்பாய்…!!
உன் வாழ்த்தின் ராகதாளம்!
கேட்கும் போது!
சிலநேரம்!
என்னிதயம் துடிக்கத் தொடங்கும்!
சுயமாய்…!!!
மனிதனென்போன் வாழ்த்துகிறான்!
பிறந்த பின்னால்…,!
நீயோ “மாமனிதன்” -!
உன் வாழ்த்தின் பின் பிறக்கின்றேன்!
அதனால்…!!!
நான் நன்றி சொல்லும் வார்த்தை!
உனக்குக் கேட்பதில்லை..,!
நான் இன்று மழழை…!
என் பாஷை -!
அழுகை!
அல்லது சிரிக்கும் ஓசை…

ஆண்டவனும் உள்ளாரோ

வேதா. இலங்காதிலகம்
வண்ண இயற்கைத் துறைமுக மென்று!
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.!
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று!
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.!
நல்ல பொருளாதாரத் திட்டம் என்று!
சில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை!
பல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,!
கையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.!
முன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்!
பின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை!
பென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து!
சின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.!
கொல்லும் வெறி கொண்ட தலைமை!!
நல்ல போர் நெறியற்ற இராணுவம்!!
எல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,!
சொல்லும் தரமன்று! இல்லையொரு தர்மமங்கு!!
வல்லுறவுப் பாலுறவு! வயது முதிர்ந்;தோர்,!
செல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார். கல்லுளிமங்கனையும் கரைக்கும் நிகழ்வுகளங்கு!!
செல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்!!
பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது!!
ஊரங்கு அழியுது! உயிரங்கு பிரியுது!!
யாரங்கு கேட்பது! ஆண்டவனும் உள்ளாரோ!!
சீரற்ற நாடகம் அரங்கேறி ஆடுது

பயணம் தொலைத்தல்

சத்யஜீவா
பயணம் தொலைத்தல்!
----------------------------!
நிழலாடும் கதவருகில் நெடுநேரம்!
கால்கடுக்க நின்றிருந்தேன்.!
வியாபாரக்கூடை குடைபிடிக்க!
உஷ்ணப் பெருமூச்சுடன்!
வியர்வை பிசுபிசுக்க வந்து நின்றாள்.!
தலைச்சுமை இறக்குகையில்!
இத்தனை நேரமாயென கடிந்து பார்க்க!
சும்மாட்டுத் துணியில் முகம் துடைத்தவாறே!
வெறும் நமட்டுச் சிரிப்பினால் வாயடைத்தாள்.!
வழிநெடுக என் இரவுகூத்தை ரசித்தபடி வந்தாளாம்.!
கலக்கியெடுத்த கடைசி கருவாட்டுத் துண்டை பறிமாறுகையில்!
உதிர்த்த் கள்ளப்பார்வையில்!
கமகமத்தாள்.!
வெகுதூரப் பயணம்சொல்லி புறப்படுகையில்!
கசிந்துயென் காதருகில்!
விட்டுபோவதற்கா இப்படி காத்திருந்தாயென!
கைபிடித்துழுத்து மடிமீதுயெனை கிடத்திக்கொண்டு!
ஒரு நிமிடம் ஒரு நிமிடமென!
அறைநாளினை கடக்கச் செய்து!
நொடிக்கொரு முத்தமிட்டாள்.!
கைகோர்த்து விழிநோக்கி!
வியர்வைதுளிகள் மிணுமிணுக்க!
இருவரும் விண்மீண்கள் திரியும் வீதியில்!
நிலவின் மடியில்!
பயணம் தொலைத்தோம்

வரலாற்றை வாழ்தல்

வே.தினகரன், பத்தனை
வெளிப்படையில்லா!
விரோதத்துடன்!
முகம் நோக்க முடியா!
முகங்களுடன்!
நமை கடக்கின்றோம் நாம். !
உன் பிள்ளைக்கு நானும்!
நம் பிள்ளைகளுக்கு நாமும்!
துணையாய் இருந்தது பற்றி!
சிந்திக்க வேண்டாம். !
எனது மனைவியின் பிரசவத்திற்கு!
உனது மனைவியின்!
தாலியை அடகு வைத்து!
உதவியது பழைய கதையாக!
இருந்து விட்டு போகட்டும். !
வெசாக் தோரண மகிழ்வில்!
நம் குழந்தையர் கூடி!
மகிழ வேண்டாம். !
ஹனிபாவின் குழந்தை!
பூச்சூடி அழகு பார்த்ததை!
நாம் கூடியிருந்து மகிழ்ந்ததை!
மீட்டவும் வேண்டாம். !
நத்தாரில் அந்தோணி குடும்பம்!
அளிக்கும் இனிப்பும்இ பரிசும் பற்றி!
முடிந்தால்!
ஓரு காலத்தில்….. என!
பேரர்களுக்கு கதை கூறுவோம். !
நாட்டின் பேரால்!
தேபக்தியின் பேரால்!
இன மதத்தின் பேரால்!
பகிர்வை பகிர்வு செய்து விடுவோம். !
பலகாரமும் பாற்சோறும்!
வட்டிலாப்பமும் கேக்கும் செய்து!
நாம் நாமே தனித்தனியாய்!
சாப்பிட்டுக் கொள்வோம். !
கூட்டு வாழ்வை உடைத்து!
குழந்தைகட்கு கொடுத்திருக்கும்!
விளையாட்டுத் துப்பாக்கிகளை!
மீளப் பெறவேண்டாம். !
விட்டுக் கொடுப்பிலா!
வேலிச் சண்டைகளுக்கு!
வீரர்களை தயார்படுத்த!
வெறும் பழி நமக்கு வேண்டாம். !
வரலாறு நமை!
தண்டிக்கவும் வேண்டாம்!
நமை இழந்த துயரால்!
நமக்குள் இருந்து!
வாழ்ந்து விடவும் வேண்டாம்