பாரதி.. எங்கிருந்து வந்தாய்.. ரெத்தம் - வல்வை சுஜேன்

Photo by Tengyart on Unsplash

பாரதி கவிச்சாரதி.. எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய் .. ரெத்தம்!
01.!
பாரதி கவிச்சாரதி!
-----------------------!
எண்ண மெனும் தேரில் வண்ணம் மாறா!
வாழ்வில் நீ வாழ்கிறாய் கவியே நீ வாழ்கிறாய்!
கட்டவிழ்ந்த நதியிடத்தும் காடு மலை!
மேட்டிலும் சொட்டு மலர் தேனிலும் நீ!
வாழ்கிறாய் கவியே நீ வாழ்கிறாய்!
கொஞ்சுங் கிளியாள் கூண்டுக்குள்ளே பஞ்ச!
வர்ணம் கலையக் கண்டு நெஞ்சத் தீ!
நெடுவளர்த்து மஞ்சத்திரை மாற்றியவா!
நீ வார்த்த புதுமை பெண்ணாள் எமதீழத்திலே!
வேல் விழியில் தீ வழர்த்து தீயவரை!
தான் அழித்து உன் இறப்பை மீட்டெடுத்து!
தமிழீழத் தாய் மண்ணுக்கே உயிர் கொடுத்து!
தசையினை தீ சுடினும் சுடட்டும் என்றே!
வங்கத்து அலைமேலும் வாகை சூடி!
நல் தர்மம் நிலைத்திட பரிசளித்தாள்!
விஜையனுக்கு பார்த்தன் போல் பாமரர்க்கும்!
சாரதி நீ பாப்பா பாட்டின் பாரதி நீ!
புவி ஈர்ந்த கவியே புயல் சாயா மதியே!
கள்ளிருக்கும் பூவிலும் உள்ளிருக்கும் தேனிலும்!
உனை காண்கிறேன் நான் உனை காண்கிறேன்.!
02.!
எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய் !
-------------------------------------------------!
உயிரே எங்கே செல்ல போகிறாய் நீ!
சாய்ந்த கூட்டின் ஓரத்தில்!
ஒரு விழித் துளியின் கேள்வி !
கருவறையில் குடிபுகுந்தேன்!
உருவெடுக்க உயிரானாய்!
உலக பந்தில் சின்ன பாதம் பதித்தேன்!
வாழ்க்கை படகில் கூட்டி சென்றாய் !
கிழையிலே துளிராக இலையிலே!
நரம்பாக ஊருக்கும் துணையானேன்!
என் வாழ்விற்கு வரப்புயர் நீர் வார்த்தாய் !
நெல்லுக்குச் செல்லும் நீரோடையில் !
புல்லுக்கும் கசிந்துருகி எண்ணச் சிறகு !
விரித்து பட்டாம் பூச்சியாய் பறந்தேன்!
புவி வாழ்வின் தீ மேலே விட்டில் தான் யாவரும் என இன்று உணர வைதாய் !
நாலு கால் தவழ்ந்து இரு கால் நடந்து!
மூன்று காலூன்றி நான்கு தோழ்களின் !
துணையோடு விடை பெறும் நேரம் இது!
விழித் துளியின் கேள்விக்கு!
விடை என்ன தரப்போகிறாய்!
எங்கிருந்து வந்தாய் நீ எங்கே போகிறாய்!
சொல்லாமல் சொல்லிவிடு நிச்சயமாய் !
யாரிடமும் சொல்ல மாட்டேன். !
03.!
ரெத்தம்!
-------------!
உன்னில் என்னில் சுரக்கிது ரெத்தம்!
ரெத்த மிடுக்கில் நடக்கிது யுத்தம்!
ரெத்தம் செத்தால் யுத்தம் இல்லை!
யுத்தம் என்றால் ரெத்தம் ஏழை!
நிறங்க ளென்றும் ஜாதி என்றும்!
தரம் பிரிக்கும் உயர்ந்த மனிதா!
உன் ஜாதி என் ஜாதி என்று!
பிரிவேதும் இருக்கிறதா!
ரெத்த வங்கியில்!
ஜீவன் வாழ சுரக்கும் குருதியை!
சாக்காட்டில் எரித்துவிடாதே!
தானத்தில் தலை சிறந்தது!
ரெத்த தானமே!
நீ இறந்தாலும்!
இன்னொரு உயிர் காத்து!
உயிர் வாழும் உன் ரெத்தம்
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.