தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அரசியல் விலங்கு

நடராஜா முரளிதரன், கனடா
எங்கும் எல்லாமே!
எனக்கு நேரம்!
தாழ்த்தி விடுகின்றது!
ஒரு கவிதையை!
ஒரு கட்டுரையை!
எழுதுவதற்கு நீண்ட நேரம்!
எடுத்துக் கொள்ளுகின்றேன்!
நீயோ புன்னகைத்து!
என்னை வெற்றி!
கொண்டு விடுகின்றாய்!
நானோ அலைகளின்!
தீராத சுழற்ச்சியில்!
கட்டுண்டு அலைகின்றேன்!
கருத்துக்களுக்காகவும்!
கற்பனைகளுக்காவும்!
என்னை நீ!
நாடி வருவதாகச்!
சொல்லிக் கொள்ளுகிறாய்!
ஆனால் நானோ!
சொற்கள் எழுப்புகின்ற!
வெம்மையோடு!
மோதிக் கொள்பவனாகக்!
கொடூரம் கொண்டு!
எகிறுபவனாக இருப்பது!
உனக்கு!
மகிழ்ச்சியை அளிக்கின்றது!
என்னை இலக்கியக்காரனாக!
நீ ஏற்றுக் கொள்ளாததையிட்டு!
எனக்கு எந்தத் துயரமும்!
கிடையாது!
அதற்காக எந்த அபத்தத்தையும்!
என் மீது திணித்து விடாதே!
நான் ஒரு!
அரசியல் விலங்கு தான்!
என்பதில் எனக்கு!
எப்போதுமே!
உடன்பாடு உண்டு!
அப்படியாயின்!
வெறும் விலங்காக!
மட்டுமே!
ஏன் என்னை!
உற்றுப் பார்க்கின்றாய்

பயணம்

சுக. வினோ, சேலம்
வசந்தகாலப் பயணம்!
வார்த்தைகள் வந்த!
வண்ணம் உள்ளன.!
தூக்கங்கள் இருக்கும்!
தடம் தெரியவில்லை.!
உடல் தேவையைக் கருதி!
சிறிது குட்டித் தூக்கத்திற்கு!
அனுமதி தரப்பட்டது.!
தூக்க நேரம் சிறியனவானால்!
சர்..சர்.. ஓசையிலும்!
பாம்..பாம்.. ஓசையிலும்!
தாலாட்டுப் பாடல்கள் அரங்கேறின...!
தூக்கத்திற்கு இடம்தேடும்!
குழந்தை மடியில்!!
கண் திறந்து பார்த்ததும்!
இறங்க வேண்டிய இடம்!!
மற்றக் காட்சிகள் அப்படியே!
இதயத்தில்

வேண்டாமே இந்தப் புகை

அகரம் அமுதா
நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்!
புகைக்கிடங் காதல் புதிர்!!
வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை!
நம்புகையில் வீழும் நலம்!!
நகைப்பூக்கும் வாயில் புகைப்பூக்கக் காணல்!
தகையில்லை வேண்டும் தடை!!
காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்!
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!!
புகையில் சுவைகண்டார் போயொழிய வேறோர்!
பகையில் புகையே பகை!!
சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்!
பொறியைந்தும் பாழாம் புரி!!
பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்!
புற்றுவைக்கும் வேண்டாம் புகை!!
பஞ்சுண்டு எனினும் பரிந்து புகைக்குங்கால்!
நஞ்சுண்டு சாவாய் நலிந்து!!
வெண்குழலை நாள்தோறும் வேண்டிப் புகைத்தக்கால்!
மண்குழியில் வீழ்வாய் மரித்து!!
புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி!
நகைப்பான் எமனும் நயந்து

உனக்கான இருப்பு

ஆர். நிர்ஷன்
உனக்கான!
உனக்கேயான!
இருப்பும் இடமும்!
ஒளியூட்டப்படாமல் இருக்கிறது !!
உன்!
பிரிவினூடான!
ஒவ்வொரு பயணங்களிலும்!
அழத்துடித்து!
அடங்கிப்போகும்!
என்!
மனதையும் மையங்களையும் …!
உன்!
களிப்புகளுக்கிடையில்!
உறைந்து ஊனமாகும்!
என்!
எதிர்பார்ப்புகளையும்!
ஏக்கங்களையும் …!
உன்!
மென்மொழிகளில்!
மௌனம் காக்கும்!
என்!
ஊமை நினைவுகளின்!
அடையாளங்களையும்!
ஆத்மார்த்தங்களையும் …!
!
தவிர்க்கவே எண்ணி!
தருணம் பார்த்து!
தவறாமல் காத்து நின்ற!
பொழுதுகளையும்!
இருத்தலையும் …!
இமைக்கூடங்களில்!
சிறையிருக்கும்!
கடைசிப் பார்வையையும்!
உணர்பாசத்தையும் …!
வார்த்தை கோர்த்து!
எழுதித் திரித்து!
உனக்கான என் இருப்பில்!
வைத்திருக்கிறேன் !!
தனியறையில்!
தவம்கிடக்கின்றன!
என் கவிதைகள்!
காலத்தோடான அத்தனை நினைவுகளையும்!
ஏந்திச் சுமந்தபடி !!
ஒன்றும் வேண்டாம்!
உன்!
கண்களின் வெளிச்சம் கொடு !!
அந்த இருட்டறையில்!
நீள் வெளியாய் நிறைந்திருக்கும்!
வெண்காகிதங்களில்!
உன்!
பெயர்மட்டும் ஜொலிக்கப்பார்க்க!
ஆசை எனக்கு !!
!
-ஆர்.நிர்ஷன்!
இறக்குவானை

இறைவா உன் வெறியாட்டம்.. காலம்

மணிசரவணன், சிங்கப்பூர்
01.!
இறைவா உன் வெறியாட்டம்!
------------------------------------------!
மனிதனின் மறக்க முடியாத!
மகத்தான படைப்பை தந்தவனே!
படைப்பதுபோல் படைத்து பறித்து கொன்றாய் ?!
பச்சை பிள்ளைகள்!
...பால் மாறா குழந்தைகள்!
பாவப்பட்ட பலர்!
பறந்தோடிய சிலர்!
பட்டாம் பூச்சியா!
பரந்த மக்களை!
பரமனே நீ!
படைத்து கொன்றாய்!
சுனாமி சுனாமி!
என்னடா சுனாமி!
நிப்பாட்டு போதும்!
உன் வெறியாட்டம் .என் ஜப்பான் நண்பர்களுக்கு ஆழ்ந்த என் இரங்கல்!
02.!
காலம்!
-------------!
அஞ்சு காசுக்கு ஆறு!
கொளஞ்சி முட்டாய்!
தாத்தா தங்கவேலு முதலி.!
ஆளுக்கு ஒண்ணுனு!
ஆறுபேத்துக்கும்,!
ஆத்தோரம் மணக்காடு!
அதுல பறிச்ச சுன்கன்க்கா!
காட்டுக்குள்ள கள்ளக்கா!
கரையோரம் பயத்தங்கா!
ஆத்தா மாரியம்மாள்!
ஏரியோரம் இலந்த மரம்!
அதுல பறிச்ச இலந்த பலம்!
ஆத்தாளோட அக்கா காமாட்சி!
தெருவோரம் வண்டிக்காரன்!
இய்யம் பித்தளைக்கு!
பேரிச்சம்பழம் அம்மா ராணி ,!
ஆறு நாளைக்கு!
மறுநாளு!
ஆத்தாடி பெரியசந்தை!
ஆளுக்கு ஒரு ஆப்பில்!
அப்பா மணி முதலி!
பிறவே ஊனம்!
அத்த மாமா காசு!
கொடுத்தா!
மறைச்சி கொடுப்பாரு!
சித்தப்பா கலியமூர்த்தி!
ஆருக்கு ஆருமே பாசம்!
அப்பவ தவிர!
அஞ்சும் போச்சு

திருமதி . தொலைக்காட்சி

றஹீமா-கல்முனை
இப்போதெல்லாம்;!
உன்!
வழியனுப்புதல் இல்லாமலேயே!
என் பயணங்கள்!
தொடர்கின்றன.....!
எப்போது வருவேன் ????!
என!
என் மீதான!
காத்திருப்புகள் தொலைந்து!
நெடு நாட்களாயிற்று!
ஒன்பது மணிக்கப்பாலும்..!
இழுபட்டுக் கிடக்கும்!
இரவுச்சாப்பாடு!
பசிக்கிறது என்பேன்!
முக்கியமான கட்டம்!
முடித்து விட்டு வருகிறேன்!
என!
முணுமுணுப்பாய்..!!!!
பெருந்தொல்லை!
என - எரிந்து விழுவாய்!
இன்றேல்;!
திடீர்,மளீர்...எனும்!
உரத்த!
கரண்டிச்சத்தத்தோடு!
உணவு போடுவாய்....!
இதைவிடவும்...!
பட்டினி கிடந்தே!
சாதல் சுகம்...!
அழுவாய்...!
சீரியல் பார்த்தபடியே..!
சீரியசாய் அழுவாய்....!!!!
உசிர் உருகி!
ஊத்துண்டு போகுமெனக்கு....!
எப்போதாவது....!
சுவையாய் சமைத்திருப்பாய்!
இன்றைக்கு!
''பவர் கட்டோ ..''!
என சந்தேகம் வருகிறது...!
பேசிக்கொள்ள!
ஏராளம் இருக்கின்றன,!
தொலைகாட்சியை!
கத்தவிட்டு!
நீ!
மௌனமாகவே இருக்கிறாய்..!!!
எரிச்சல் தாளாமல்!
வார்த்தைகள்!
தடிக்க!
வழக்காடும்போது....!
நீ அழுது....!
முரண்பாடுகளோடு!
முடிந்து விடுகிறது!
நமது பொழுது....!
முரண்பாடுகள்!
இன்றியே நமது!
நாட்கள் சென்றிருக்கும்...;!
பேசாமல்_ஒரு!
தொலைகாட்சிப்பெட்டிகே!
நீ வாழ்கைப்பட்டிருக்கலாம்

பலியாட்டின் கண்கள்

கருணாகரன்
எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்!
ஒரு பரிசு!
உயிரும் குருதியுமாகியது!
இதில்!
கவலைக்கோ வெட்கத்திற்கோ!
இடமில்லை என்றார்கள்!
என்ற போதும்!
நம் நிழலைக் காணுகையில்!
அச்சமாயிருக்கிறது.!
நான் கண்டேன்!
உனது நிழலிலிருந்து குருதி பீறிடுவதை!
எனது நிழலிலிருந்து!
நெருப்பு சுவாலை விடுவதை!
ஒரு வாழையிலையில்!
நமது முகங்கள்!
படைக்கப்பட்டிருந்தன.!
நமது விருந்திற்காகவே!
எனது புன்னகையை நீ தின்றாய்!
உனது சிரிப் பொலியை நான் குடித்தேன்!
பலியாட்டின் மணியொலி!
விருந்தை முடித்து வைத்தது!
நீ விடைபெற்றபோது!
விடுவித்த கையில் பார்த்தாயா!
காயாத குருதியின்!
அச்சமூட்டும் அழகிய கண்களை!
பலியாடு அந்த கண்களில் இருந்து!
நழுவிப் போய்க் கொண்டிருந்ததை!
நாம் கவனிக்கவில்லை!
என்பது இப்போது!
ஞாபகமிருக்கிறது!
-கருணாகரன்

ஆத்மாவின் ஒப்பாரி

இரா.சி. சுந்தரமயில்
நீர் ஊற்ற மறந்த!
என் வீட்டுத்தோட்டம்!
எனக்காக காய்கனிகள்!
தந்த போது!
பாலூட்டிரூபவ் சீராட்டி!
பார்த்துப் பார்த்து!
பக்குவமாய் வளர்த்த!
என் மகனே!
இரண்டாம் நாள்!
பாலுக்குக் கூட காத்திராமல்!
எந்திரத்தில் என்னை எரியூட்டி!
எந்திரமாய்ப் போனாயே…..!
சாம்பல் வாங்க மறந்தாயே…!
“இருக்கும் போது இவன்!
என் பேர் சொல்லும் பிள்ளை!
இறக்கும் போது எனக்கு!
கொள்ளி வைக்கும் பிள்ளை”!
என்றெல்லாம் சொல்லிய!
என் வாய்க்கு!
‘வாக்கரிசி’ போடலையே…..!
நிரந்தரமாய் நான் தூங்க!
அம்மா என்று!
அழக்கூட நேரமின்றி!
அவசரமாய்ப் போனானே…..!
தலைமுடியும் மழிக்கலையே......!
சொட்டு கண்ணீர் வடிக்கலையே....!
“மகனே! இச்சனமே!
நான் உன்னைப் பார்க்க வேண்டும்!
மறுகணம் நான்!
இருப்பேனோ இறப்பேனோ”!
என்று இறுதி மூச்சில்!
நான் தவித்த போது!
“இதோ வருகிறேன்” என்ற நீ!
அருகில் இருந்த ஆயாவிடம்!
“இறந்த பின் சொல்லுங்கள்!
அப்போது வருகிறேன்” என்றாயே.....!
உன்னைப் பிரிந்து சென்ற நான்!
புரியாமல் போனேனே……!
புலம்பவிட்டுப் போனாயே…..!
பந்தல் போடலையே…..!
பச்சைப்பாடை விரிக்கலையே……!
குடம் தண்ணீர் ஊத்தலையே……!
கோடித்துணி போடலையே…….!
உடன்பிறந்தானும் வரவில்லையே…..!
ஊராரும் கூடலையே……!
மின்னலாய் நீ வந்தாய்!
மின்மயானம் கொண்டு சென்றாய்!
கடமையைச் செய்வதாய் நினைத்து!
என்னிடம் கடன்பட்டாயே

மரமாகிப் போங்கள் மனிதர்களே !

ம அருள் ராஜ்
எல்லா மரங்களும்!
கைகளை நீட்டி இருக்கிறது!
எடுப்பதற்கு அல்ல!
கொடுப்பதற்கு!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே!

எந்த மரமும் அடுத்த மரத்தின்!
கிளை உடைப்பதில்லை!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே!
எந்த மரமும் சும்மா இருப்பதில்லை!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !!
தான் உயரே செல்ல செல்ல!
தன் மண்ணின் மிது!
பற்றை அதிகமாக்கி!
கொள்வது மரங்களே!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !!

கோவிலில் வளர்ந்தாலும்!
சர்ச்சில் வளர்ந்தாலும்!
மசூதியில் வளர்த்தாலும்!
மரங்களுக்கு மதம் பிடிப்பதில்லை!
மரம் மரமாகவே இருக்கிறது!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !!
உலகில் முதலில்!
முழு உடல் தானம்!
செய்தது மனிதன் இல்லை!
மரங்களே!
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !!

ஆட்டுக்குட்டிகளின் தேவதை.. அதைப் பற்றிச்

எம்.ரிஷான் ஷெரீப்
01.!
ஆட்டுக்குட்டிகளின் தேவதை!
---------------------------------------------!
ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்!
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது!
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்!
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்!
கூர் சொண்டுக் குருவி!
நிலாக் கிரணங்கள் வீழும்!
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்!
அப் பாடலைக் காவுகின்றது!
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி!
தண்ணீர் தேடிச் சென்றவேளை!
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்!
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்!
களைத்துப் போய் பெருவலி தந்த!
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு!
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி!
வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன!
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்!
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன!
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்!
மந்தைகளின் தேவதை!
முடங்கிப் போயிருக்கிறாள்!
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி!
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்!
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை!
பயணப் பாதைகளிலெல்லாம்!
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்!
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்!
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்!
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்!
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்!
அவளுக்கு எப்போதும்!
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்!
வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு!
தொலைவில் அவள் கண்டாள்!
யானையாய்க் கறுத்த மேகங்கள்!
வானெங்கும் நகர்வதை!
இனி அவள் எழுவாள்!
எல்லா இடர்களைத் தாண்டியும்!
துயருற்ற அவளது பாடலோடு!
விழித்திருக்கும் இசை!
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்!
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...!
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...!
02.!
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை!
---------------------------------------------------!
கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்!
சாவல் குருவிக்கு என்ன திரை!
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்!
அடித்த சாரலில்!
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று!
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே!
பிறகென்ன!
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்!
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட!
நங்கூரங்களின் கயிற்றோடு!
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்!
அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து!
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்!
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி!
உணவு தயாரிக்கும் இளம்பெண்!
நிலவொளியில் புயல் சரிக்க!
போராடி அலையும் பாய்மரக் கப்பல்!
அழிந்த மாளிகை!
அசையாப் பிரேதம்!
அது என் நிலம்தான்!
உன் மொழி வரையும் ஓவியங்களில்!
எல்லாமும் என்னவோர் அழகு!
உண்மைதான்!
மந்தையொன்றை அந்தியில்!
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்!
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்!
நீ சொல்வதைப் போல!
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்!
நெடிதுயர்ந்த மலைகள்!
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன!
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு!
அச்சமின்றி ஓய்வெடுத்தான்!
சொல்!
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா!
என்னைக் கேட்டால்!
வாசப் பூஞ்சோலை!
சுவனத்துப் பேரொளி!
தழையத் தழையப் பட்டாடை!
தாங்கப் பஞ்சுப் பாதணி!
கால் நனைக்கக் கடல்!
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்!
தேவையெனில் அமைதியும்!
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என!
எல்லாமும் இன்பமயம் என்பேன்!
அத்தோடு!
இன்னும் கூட இரவு!
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை!
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்!
என்பதைச் சொல்வேன்!
வேறென்ன கேட்கிறாய்!
இலையுதிர் காலத்து மரத்தின் வலி!
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை