தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

குமுறலாய் நாளும்

துர்கா
சமகால சந்தர்பங்கள் சூறையாடப்பட்டன!
தேவைக்காக எத்தனை எத்தனையோ வேடம்!
காட்சி மாற்றம் மிருகத்தின் செயல்பாடாய்!
உருப்பெற....!
தூக்கி எறியப்பட்ட பெண்மை!!
கொழுந்துவிட்டு எறிகிறது மனமென்ற!
வெளியில்...!
'பாவம்' என்ற வார்த்தையில் எல்லோரின்!
அனுதாபமும்!
யாருக்காக எதற்காக வாழ்கிறோம்..!
பெண் என்ற வேடத்தில் அனைவருக்கும்!
காட்சிப் பொருளாய் மாறி!
குப்பைக்குழியில் செல்லூபடியாகும்!
மதிப்போடு...!
துரத்தி அடிக்கப்பட்ட மனிதாபிமானம்!!
விஷக்கண்களால் நாளும் உயிர்கொள்ளும்!
பாவிகளுக்கு இடையில் எத்தனை முறை!
தான்...!
எனது பெண்மையை சாகடிப்பது

ஓட்டை.. உறைத்தல்.. சிரிப்பு

சத்ய சுகன்யா சிவகுமார்
01.!
ஓட்டை!
------------!
சட்டையில் ஓர் ஓட்டை என!
விசிறும் மகனைப் பார்க்கையில்!
நினைவுக்கு வருகின்றது!
ஒட்டையில் சட்டையாய் திரிந்த என் இளமை!!
!
02!
உறைத்தல்!
-------------!
ஏண்டா பொறந்த என்ற!
தந்தையின் திட்டு உறைக்கின்றது!
துறவியான பின்!!
!
03.!
சிரிப்பு!
---------!
அது என்ன!!
காந்தியின் சிரிப்பை சேகரிக்க!
இவ்வளவு பக்தர்கள்!
திருடினாலும் பரவாயில்லையென!
(காந்தியின்) சிரிப்பை திருடும் திருடர்கள்!
அந்த புன்சிரிப்புக்குப் பொன்னும் உண்டென!
மதிப்பு கண்டு விற்கும் வணிகர்கள்!
காந்தியின் பொக்கை வாய்ச் சிரிப்பை!
கடவுளர்க்கென சேகரிக்கும் குழந்தை பக்தர்கள்!
இவர்கள் பக்குவமிலா பித்தர்கள்!
ஆகா!!
காந்தியின் சிரிப்புக்கு இவ்வளவு மதிப்பா!!
ஆம்!!
அதில் ரிசர்வு பேங்க் கவர்னரின் கையொப்பம் இருக்கிறதே

உயிரின் தேடல்

புதியமாதவி, மும்பை
============= !
நானில்லாத நாட்களில் !
என் தெருவில் !
எதைத் தேடி !
உன் உயிர் !
கையில் வீளக்குடன் !
கால்வலிக்க நடக்கிறது? !
பூட்டியக் கதவுகள் !
உடைந்த சன்னல் கண்ணாடிகள் !
து£சி அடைந்த முற்றம் !
எப்போதோ நான் வரைந்த !
செம்மண் கோலம் !
உடைந்த திண்ணை !
உயரமாய் வளர்ந்த தென்னை !
இன்னும் அறுந்து விழாமல் !
காற்றில் ஆடும் ஊஞ்சல்.. !
தேடிப்பார்.. !
இதில் எங்காவது !
ஒளிந்துகொண்டிருக்கும் !
உனக்கான என் அடையாளம். !
!
******* !
!
எப்போதாவது !
எனக்குள் உன் நினைவுகள் !
மனக்குகையின் இருட்டில் !
எட்டிப்பார்க்கும் சூரியக்கதிர்களாய். !
இப்போது !
நீ எப்படி இருப்பாய்? !
தாடி மீசையுடன் !
கதர்ச்சட்டையில் !
தோள்களில் தொங்கும் !
ஜோல்னாபையுடனா? !
வெள்ளை உடையில் !
பளீர் சிரிப்பில் !
கையில் மின்னும் !
கடிகாரச் செயினுடன் !
அலைபேசியின் !
ஆங்கில உச்சரிப்பிலா? !
கரைவேட்டியும் !
கசங்கிய துண்டும் !
கற்களின் விரல்களில் !
கரகர தொண்டை !
மேடையில் முழங்கும் !
தமிழனின் குரலாய்.. !
நீ இப்போது !
எப்படி இருப்பாய்? !
எப்படி இருந்தாலும் !
உன்னை - !
என்னில் இன்னும் !
எரிந்து கொண்டிருக்கும் !
உன்னை- !
என்னால் காணமுடியுமா? !
திருட்டு மாங்காயை !
கடித்துக் கொடுத்தபோது !
எச்சில்படாத !
நம் இதயம் !
மூளைவளர்ச்சியில் !
முடமாகிப் போனது !
எப்படி? !
!
அன்புடன், !
புதியமாதவி, !
மும்பை

நாம் இப்பொழுது

பாஷா
என்ன செய்துகொண்டிருப்பாய் நீ !
நீ நடந்த வீதிகளின் !
ஒவ்வொரு அங்குலத்திலும் !
உன் நினைவுகளை !
நான் சேகரித்துகொண்டிருக்கும்பொழுது! !
யாருடைய தோள்களில் !
நீ சாய்ந்திருப்பாய் !
என் மனம்,மெய்,உயிரெல்லாம் நீயெ என !
தொடங்கும் உன் பழைய கவிதை படிக்கும்பொழுது! !
எந்த குடையின் கீழ் !
ஒதுங்கியிருப்பாய் !
யாருமற்ற பாலையில் !
தொடர்ந்து விழும் சாரல் !
உன் நினைவை என்மேல் !
தெளிக்கும்பொழுது! !
புணர்ச்சியின் எத்தனையாவது !
தளத்தில் நீ நிற்பாய் !
காமம் தலைக்கேறி நான் !
கட்டிய மனைவியின் !
கரம் பற்றும்பொழுது! !
உன் குழந்தைக்கு என்ன !
கதை நீ சொல்லிகொண்டிருப்பாய் !
கானல் நீரான நம் காதலை !
என் ஒரு மாத குழந்தைக்கு சொல்கையில்

நல்லதோர் வீணை செய்தே

பாரதி ஜேர்மனி
அமைதி பார்த்த உன் முகத்தில் !
அள்ளித் தெளித்த சோகங்கள் !
அகத்தை மறைத்தாலும்..... !
அழகுக் கண்ணில் துயரங்கள். !
மயிலே உன் சிறகை ஒடித்தவர் யார்...? !
குயிலே உன் குரலை உடைத்தவர் யார்..? !
மௌனத்தின் மடியில் உன் முகம் புதைத்ததேன்..? !
மலரினும் மென்மை என்றுன் பலத்தை எரித்ததாலா..? !
தேன் நீ ! என்று சொல்லிச் சொல்லியே ... !
உனைத் தேளாய்க் கொட்டினாலும்... !
மான் நீயென வர்ணனை செய்ததால் மருண்டு நின்றாயோ..? !
விளக்கினை எடுத்து வை. வெளிச்சம் உன் வாழ்வில் என்பார். !
விட்டில் பூச்சியாய் நினைத்துனை விழுத்திடும்.... !
வேதனை பார்த்தாயா? !
மலராய் இருந்து கசங்கியே...நீயும்... !
மண்ணுக்குள் வீழ்வாயோ? !
மானாய்இருந்து நரிகளின் வாயிலே ... !
இரையாகி மாள்வாயோ? !
புயலாய் எழுந்து புரட்சிப் பூக்கள் தூவிடப்பறப்பாயா? !
புலியாய் எழுந்து புதுயுகம் படைத்திடும்... !
புதுமைகள் மறந்தாயா? !
விட்டில் பூச்சியாய் தினம் வீணாய்ப் போகும்உன் !
வாழ்வும் ஒரு வாழ்வா? !
கட்டிலும்தொட்டிலும் வாழ்க்கையல்ல... இனி !
கண்களைத் திறப்பாயா?. !
!
பாரதி ஜேர்மனி

மாயவனத்தின் வரிகளுக்குள் கடல்

ரசூல்
ஹெச்.ஜி.ரசூல்!
மழையாகவோ நதியாகவோ!
அருவி மாலையாகவோ!
பிரபஞ்சம் முழுதும் உருகிவழிய!
ஒரு மாயவனத்தின்!
வரிகளுக்குள் கடல்.!
* *!
உன் இசை நதியில் மிதந்துவந்ததொரு!
குழந்தை!
உடல்சுழி உயிர்தொட்டு!
கன்னத்தில் முத்தமிட்டு!
பின் திரும்பிச் செல்கிறது!
மற்றுமொரு பூவாய்.!
* *!
குரலைத் திருடியது யாரோ!
பாட மறுத்தது பொம்மை ஒன்று.!
* *!
வீட்டிற்குள் நடந்த பூகம்பத்தை!
அக்கறையோடு விசாரிக்கிறது!
முற்றத்தில் நட்டுவைத்த ரோஜாச் செடி

ஏன் எனக்கில்லை?.. தூய்மை.. எங்களுக்கு

சேயோன் யாழ்வேந்தன்
01.!
ஏன் எனக்கில்லை?!
-----------------------------------!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வால் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாள் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாழ்வில்லை!
02.!
தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன்!
----------------------------------------------!
ஒட்டடைக்குச்சியால்!
உங்கள் தலையில் படிந்துள்ள!
பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்!
துடைப்பத்தால் பெருக்கி!
மனசின் குப்பைகளை!
வெளியே தள்ளுங்கள்!
ரத்த வாடை போகும்வரை!
கைகளை நன்றாகக்!
கழுவிக்கொள்ளுங்கள்!
ரத்தக்கறை படிந்த ஆடைகளை!
சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு!
ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்!
03.!
எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்!
------------------------------------------------!
சரக்கு ரயில் என்பது!
மதுபானங்கள் ஏற்றி வரும்!
ரயிலல்ல!
ஆண்டிமனி என்றோர்!
உலோகம் இருந்தாலும்!
கோயில் மணி பித்தளையால்தான்!
செய்யப்படுகிறது!
!
மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்!
மோடி மேஜிக் என்பதும்!
வேறு வேறு!
இந்தியாவின் ‘கேபிட்டல்’!
வெளிநாடுகளில் இருந்தாலும்!
‘புதுடெல்லி’ என்பதுதான்!
சரியான விடை!
நாட்டைத் தூய்மையாக்க!
நாம் யாரும்!
சுத்தமானவர்களாக இருக்கவேண்டியதில்லை!
எங்களுக்கு விடை தெரிந்த!
இது போன்ற!
பொது அறிவுக் கேள்விகள்!
எந்தப் போட்டித் தேர்விலும் கேட்கப்படுவதில்லை

எழுதச் சொல்கிறது

நட்சத்திரன் செவ்விந்தியன்
மஞ்சட் பூக்காடுகளில் பூத்த மப்பில் !
கிழக்கிலிருந்து கொழும்புக்கு !
இந்தப் பிரிவுப் பயணம் !
மழை பெய்து ஓய்ந்து !
நான் மனசார இழைப்பாறிய கொஞ்சக் காலம் !
வாழ்வு கொடுத்த ஊர் !
உன்னைப் பிரிந்து கொண்டிருக்கிறேன் !
இந்தப் பயணம் தருகிற போதை !
எழுதச் சொல்கிறது !
இழந்த வாழ்வையும் வாழ்வின் கவிதையையும் !
கவிதையின் போதையையும் !
எழுதச் சொல்கிறது !
பிரிவில் பூக்கிற ஒரு துயரம் இதில் இல்லை !
வெண்மணல் கொடுக்கிற நதியும் !
காடுகளும் கூட !
என்னோடு தொடர்ந்து வருகிறது !
மீண்டும் மீண்டும் நகரங்களை நோக்கிப் போனாலும் !
நகரங்களை அவாவிய என் கனவுகள் போயிற்று !
நகர வாழ்வும் போயிற்று !
அழிந்துபோன நாகரீகங்களைப்போல !
அந்த வாழ்வு அப்படியே இருப்பினும் !
அங்கிருந்தபோது எனக்கு எழுத முடியவில்லை !
மனசார வாழவும் கிடைக்கவில்லை !
--நட்சத்திரன் செவ்விந்தியன் !
(1996) !
நன்றி: ’எப்போதாவது ஒருநாள்’ !
தாமரைச் செல்வி பதிப்பகம்

காத்திருந்த காதல்

ரிஷ்வன்
பார்த்த நாள் முதலாய்!
பேச துடித்தேன்!
பேசிய நாள் முதலாய்!
பழக தவித்தேன்!
பழகிய நாள் முதலாய்!
பார்வையில் ஏங்கினேன் !
உன் சம்மதம் பெற....!
ஒவ்வொரு முறையும் !
வெவ்வேறு விதமாய் வினவி!
உந்தன் மறுமொழி கேட்க!
எந்தன் உள்ளம்!
ஏங்கிய நாட்கள்!
எழுத்தில் எழுத முடியாத!
கண்ணீர் காவியங்கள்...!
மௌனமே உன் பதிலாய் !
பார்வையே என் வழியாய் !
பயணப்பட்டு.......!
காலத்தின் கோலமாய்!
காட்சிகள் மாறி!
சதியின் துணையோடு!
விதியின் மதியால்!
வெவ்வேறு திக்கில்!
விலகினோம்.....!
விடை தெரியாத விடுகதையாய் !
விளங்காமல் என் வாழ்வை!
திசை தெரியாத மையிருட்டில் !
தெளிவில்லா பாதையில்!
முடிவில்லா பயணமாய்...!
காலசுழச்சியில் !
வாழ்வை தொலைத்த!
இருவரும் ஒருவழியாய் !
ஒருவிழாவில் !
ஒன்றாய் கலந்தொமே....!
திசை மாறிய பறைவைகளாய்!
திசை மாறி சென்று!
உருமாறி இப்பொழுது....!
அன்று பார்த்த !
அதே நிலவாய் !
இன்றும் நீ....!
பார்வைகள் கலந்தோம் !
யார்வரவையோ எதிர்பார்ப்பதாய்!
என்னை பார்த்தாய்....!
அதே பார்வை!
அதே மௌனம்!
என் கண்கள் பனித்தது....!
ஒருவழியாய் விழாமுடிய!
எதிரெதிர் திசையில் நடக்கையில்!
என் விழிகள் உன்மீது...!
உன் விழியில் நீர்த்துளி!
உன்னுள் இன்னும் நான்!
இருப்பதை உணர்த்துவதாய்

பிரிவு

லலிதாசுந்தர்
தேக அழகை விட!
உள்ளத்தின் அழகு சிறந்தது என!
- ரசிக்க வைப்பது!
கண்கள் பேசும் மொழியை விட!
உள்ளங்கள் உரசிக்கொள்ளும் மொழி!
இனிமையானது என!
- உணர வைப்பது!
உடலின் வேதியியல் மாற்றங்களை விட!
உள்ளங்களின் வேதியியல் மாற்றங்களை!
சுகமானது என!
- புரிய வைப்பது!
ஐம்புலன்களை அடக்குவது கடினம் என!
வள்ளுவன் வரிகளை ஞாபகபடுத்துவது!
உண்மை காதலின் பிரிவு.!
-- லலிதாசுந்தர்