தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெயர் எதற்கு?

சிதம்பரம் நித்யபாரதி
காலையில் முன்முற்றத்து உலாவில்!
செவிப்பட்டது!
'கீக் கீக் கீக்'!
பார்வை பட்டதால்!
உருவம் ஒளிப்பது போல்!
விரைந்தேகினும் தேயாத!
'கீக் கீக் கீக்'!
கணம் இனித்த அமரநிலை!
அடி நாக்குச் சுவையாக...!
'கீக் கீக் கீக்'!
பெயர் எதற்கு?!
- சிதம்பரம் நித்யபாரதி

மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

ந.பரணீதரன்
வார்த்தைகள் விழுங்கி !
பார்வைகள் புதைக்கும் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
இதயத்தினுள்ளே ஒரு !
பூ விழும் உணர்வுகள் தோன்றும் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
இதழ்கள் மூடி புன்னகைத்து !
செவிமடல் சிவக்க நாணி நிற்கும் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
மண்ணின் மார்பில் கோலம்போட்டு !
பாதம் தேய மண்ணை நோக்கி !
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
கண்கள் செருக !
கரங்கள் பிணைய !
இதழ்கள் இணையும் !
முத்தத்தின் போது தோன்றும் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும் !
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க !
தலையை வருடி உறங்க மறுக்கும் !
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
விசையின் மீது கரம்வைத்து !
இருளை வெறித்திருக்கும் !
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
கடலின் மீது தூண்டில் வீசி !
அலையை ரசித்துக்கொண்டே !
தூண்டில் அசையும்வரை காத்திருக்கும் !
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
மண்ணின் மார்பில் முக்குளித்து !
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும் !
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
மலா¢களுடன் பேசிப்பார்த்தேன் !
அர்த்தம் கிடைக்கவில்லை !
நிலவிடம் இரந்து கேட்டேன் !
விடை பகரவில்லை !
உன்னிடம் கேட்கின்றேன் !
மௌனத்தின் அர்த்தம் என்ன ? !
கொலுசினால் பேசுகின்றாய் !
கைவளையல்களால் மொழிகின்றாய் !
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன் !
மௌனத்தினால் கொல்கின்றாயே

விடலைக் குஞ்சுகளா

துரை. மணிகண்டன்
தொப்புள்கொடியாக நம் உறவு!
யார் கண்பட்டதோ!
இன்று சுனாமியால் சிதருண்ட!
குட்டிகுட்டித் தீவுகளாக!
என்று மீண்டும் இணைவோம்!
பிரிந்துபோன மேகங்கள் ஓன்றாய் கூடுவதுபோன்று!
இறைத்தேடச்சென்ற தாய்ப்பறவையினை!
எதிர்பார்த்திருக்கும் விடலைக் குஞ்சுகளாய்....!
இரத்தம் பேசும்!!
காலையில்!
கோழி கூவி எழுந்ததைவிட!
குண்டுகள் கூவி (வெடித்து)!
எழுட்ந்ததுதான் அதிகம்!
ஏன்? எங்களுக்கு மட்டும் இந்த தண்டனை!
இறைவன் கொடுத்த சாபமா!
எங்களுக்கும் இறைவனுக்கும்!
கணக்கு இன்னும் நிலுவையில் உள்ளதா?!
உலக மக்களே ஒன்று கேளுங்கள்!
இறந்தபின் எங்கள் இரத்தம் பேசும்!
பொய்யல்ல உண்மையே....!
!
-துரை.மணிகண்டன்!
(இலங்கை தமிழரிகளின் உள்ளத்திற்காக எழுதப்பட்டது)

நடு நிசி நாய்கள்

ப்ரியன்
*************** !
இரவில் அப்படி இப்படி !
திரும்பி புரண்டுப் !
படுக்கையில் தூக்கம் !
கலைந்து போகும் !
சில நாட்கள்! !
பக்கத்து வீட்டு !
மரம் அசைதலில் !
பேய் கண்டுபிடித்து !
மனம் கிலி கொள்ளும் !
சில நேரம்! !
மாலையெல்லாம் !
அமைதியாய் !
கம்பம் தேடிய !
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்; !
அவ்வப்போது !
குலை நடுங்க வைக்கும்! !
சின்னதொரு வயதில் !
இருட்டியப் பின் கடைக்கு !
செல்லும் நாட்களில் !
தூரத்தில் வரும் அப்பனை !
அடையாளம் காணாமல் !
பேய் வருதென் பயந்து !
பதுங்கியதும்; !
டவுசரைப் பிடித்தப் படி !
துணைக்கு சத்தமாய் !
பாட்டை நடுங்கியபடி !
கத்திச் சென்ற !
நினைவுகளும்; !
மனதில் நின்று ஊஞ்சலாடி !
மெல்லியதாய் புன்னகை !
பூக்கச் செய்யும்! !
அது தொடர்ந்து !
என்னைப் போல !
எதைக் கண்டு !
பயந்து கத்துகின்றனவோ !
இந்நடு நிசி நாய்கள்! - என !
எண்ணும் கணம் !
இன்னும் பயங்கரமாக கத்தி !
பயமுறுத்தி தொலையும்! !
ஆனாலும், !
எந்த நாயும் !
சொல்லியதில்லை என்னிடம் !
இரவில் கத்தும் ரகசியத்தை; !
ஏனோ நானும் !
இதுநாள் வரை கேட்டதில்லை !
அவ்ரகசியத்தை! !
- ப்ரியன்

திருட்டும் தீர்ப்பும்

அமானுஷ்ய புத்ரன்
மனத்தின் சந்து பொந்துகள்!
மலை முகடுகள்!
அங்கெல்லாம்!
ஒளிந்து கொள்ள ஓடுகிறாய்.!
நீயே!
களவாடப்பட்டவன் தான்.!
டி.என்.ஏ யின்!
முறுக்கிழையில்!
அமினோ அமிலங்கள்!
குத்தாட்டமும் குதியாட்டமும்!
போட்டுக்கொண்டதினாலும்!
அதன் இரண்டு உயிர்கள்!
ஏதோ ஒரு நள்ளிருட்டில்!
ஊஞ்சல் ஆடியதினாலும்!
வந்து விழுந்தாய்.!
அந்த மனுஷ புத்திரனின்!
ஜெனடிக் சூத்திரம்!
எங்கிருந்தோ!
எதிலிருந்தோ!
கையாடப்பட்டது தான்.!
பட்டினத்தார் சொன்னாலும்!
ஒன்றுதான்.!
டாக்டர் ஹர்கோபிந்த் கொரானா!
சொன்னாலும் ஒன்றுதான்.!
செல் எனும்!
உயிர்ச்சிற்றறைக்குள்!
ஒளிந்து கொண்டாலும்!
உன் நிழல்!
உன்னை திருடுகிறது.!
உன்னைத்தின்கிறது.!
உன் எலும்பையும் தாண்டி!
உன்னுள்!
விறைத்துக்கொண்டிருக்கும்!
லட்சக்கணக்கான!
ஆண்டுகளின்!
அச்சுப்பதிப்பு எல்லாமே!
அச்சப்பதிப்புகள் தான்.!
அதனால்!
கல் எலும்பு ·பாசில்கள் கூட!
ஏ.கே 47 களை!
கருவுற்று வைத்திருக்கின்றன.!
இந்த இரத்தவெறி!
எத்தனை எத்தனை!
இருபத்தியன்றாம் நூற்றாண்டுகளை!
கவசம் வைத்துக் கொண்டு!
வந்தாலும்!
அது அழிக்கப்பட வேண்டும்.!
அது துடைத்தெறியப்பட வேண்டும்.!
ஏ புதிய மானிடமே!
உன் புதிய சுவாசத்தில்!
அன்பின் சூறாவளிகள்!
சுழற்றி வந்து வீசட்டும்.!
ஆனாலும்!
அந்த திருட்டு சுமை!
உன் மீது!
இன்னும் ஏறியிருக்கிறது.!
உன் முதுகில்!
உன் நெற்றியில்!
கண்ணுக்கு தெரியாத!
அந்த முத்திரை!
நீ பண்ணும் கலவரங்களில்!
களேபரங்களில்!
நன்கு தெரிகிறது.!
புரட்டி புரட்டி படித்துப்பார்க்கலாம்.!
இந்த தம்ளர் இந்த ஓட்டலில் இருந்து!
திருடப்பட்டது.....!
திருடப்பட்ட அந்த வெறி...!
உன்னை நீயே சுரண்டிக்கொள்வது...!
உன்னை நீயே படுகொலை செய்து கொள்வது...!
உனக்கு நீயே பாசாங்கு காட்டிக்கொள்வது...!
உன்னை நீ கனவு கான்பதற்குப்பதில்!
உன்னை நீயே உணவு ஆக்கிக்கொண்டாய்...!
உன் மானுட ஒளிக்கு!
கருவறை கட்ட அடித்தளம் போட்டு!
முகம் தெரியாத!
ஏதோ ஒரு அதிகாரியிடம்!
பிளான் அப்புரூவலும் வாங்கி!
பூசை செய்து சூடம் கொளுத்தி!
நீ கட்டிடம் எழுப்பியபோது!
நீ கண்டாய்..!
ஒரு பொய் நின்றது.!
கள்ளத்தனத்தின் பெரும்பூதம்!
உன் முன் நின்றது.!
உன் கருவறையை!
புனிதமாக்க வந்தவன் என்று!
சொன்னாய்.!
ஆனால்!
வைரக்கல் பதித்து!
சலவைக்கல் விரித்து!
நீ பூவேலை செய்ததெல்லாம்!
உன் கபாலங்களைக்!
குவித்து வைக்கும்!
குடோனுக்குத் தான்.!
எல்லாம் திருடப்பட்டது தான்.!
கொலைவெறியில்!
சூடேறிய வாசகங்கள் எல்லாம்!
திருடப்பட்டது தான்.!
துப்பாக்கிகள் மனிதனை!
திருடிக்கொண்டன.!
எல்லாம் திருடப்பட்டது தான்.!
கடவுள்களும் சைத்தான்களுமே!
அந்த திருட்டு வழக்குக்கு!
கூண்டில் ஏறி!
நின்று கொண்டிருக்கிறார்கள்.!
தீர்ப்புகள்!
எழுதுவதற்கும்!
அவர்களே!
அங்கு அமர்ந்திருக்கிறார்கள்.!
- அமானுஷ்ய புத்ரன்!
23-2-2008

மாவுக் கட்டு

சகாரா
கடுகளவு மின்மினி!
கங்குத் தீயில் திசைகளை அளக்கும்!
கடலளவு மனசிருந்தும்!
கவலை... கவலை... கவலை!
அடேய்...!
சிரிப்பதா!
சீறிச் சினப்பதா ?!
ஒரு புண்ணாக்கும் வேண்டாம்!
கவிதையில்!
கண்ணைக் கசக்குவோம் வா!
!
--------- !!!!! --------------!
சலனம்!
தெரியாத ஊரில்!
தெரிந்தவர் முகத்தை!
தேர்தலில் தேர்வுகளில்!
எப்படியேனும் வெற்றியை!
சலூனில் சுவர்களில்!
கிறங்கடிக்கும் ஆபாசத்தை!
லாட்டரி முடிவுகளில்!
நமது சீட்டின் நம்பரை!
பயண நெரிசலிலும்!
பக்கத்தில் கிளுகிளுப்பை!
சிரிப்போ சீரியஸோ!
சினிமாவின் இடையில் ஒரு சீனை!
அலுவலகப் பெண்டிரின்!
ஆடை விலகலை!
அடுத்தவன் பாக்கெட்டில்!
நம் கைச்செலவுக்கான பணத்தை!
பிரசவ அறையில்!
பிறப்பினில் ஆண்மையை!
பேருந்து நிறுத்தத்தில்!
பெண்மையின் பூரிப்பை!
எதேச்சையாய்த் தேடும்!
எடுபட்டபய மனசு!
நன்றி ::!
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”!
வெளியீடு : பயணம் புதிது!
புலியூர் 639 114!
கரூர் வட்டம்!
தொலைபேசி :: 04324 - 50292

நம்பிக்கை கொள்!..கருவறை எப்படி

கருவி பாலகிருஷ்ணன்
கல்லறையானது? !
01.!
நம்பிக்கை கொள்! !
------------------------!
மனிதா!
மனமும்!
ஒரு விளைநிலந்தான்!
அதில் உன்!
என்னங்களை!
விதைதுவிட்டு!
வியர்வை!
நீரைவிடு !
நிச்சயம்!
முளைவிடும்!
உழைப்பை!
உரமாக இட்டு!
சோம்பல்!
களையகற்று!
நிச்சயம்!
வேர்விடும்!
சூரியன் மறைவது!
காலையில் !
மலர்வோம் என்ற!
நம்பிக்கையில்தானே!
நிலவு தேய்வது!
நிச்சயம்!
வளர்வோம் என்ற!
நம்பிக்கையில்தானே!
வவ்வால்!
தலைகீழாக!
தொங்கினாலும்!
அதன் வாழ்க்கை!
நேராகத்தானே!
இருக்கிறது!
உன் நிழல்!
உன்னைவிட்டு!
நீங்காதபோது!
வெற்றியும் !
உன்னைவிட்டு!
விலகாது!
பறவையின்!
சிறகு அதனை!
வானத்தில்!
பறக்க வைக்கும்!
என்றால்!
நம்பிக்கை!
சிறகு உன்னை!
வாழ்க்கையில்!
சிறக்க வைப்பது!
நிச்சயம். !
02.!
கருவறை எப்படி கல்லறையானது? !
-----------------------------------------!
ஊர் கூடவில்லை!
உலகம் அறியவில்லை!
தப்பு அடிக்கவில்லை!
ஒப்பாரி ஒலிக்கவில்லை!
பிறப்பின் நோக்கமும்!
தெரியவில்லை!
இறப்பும் எதற்க்காக!
புரியவில்லை!
கருவறை குழந்தையின்!
கடைசி கேள்வி!
கருவறை எப்படி!
கல்லறையானது?

கடல் எழுதும் கதை!

வித்யாசாகர்
மனம் போல்!
அழகான -!
நீளமான கடல்.!
கரை ஒதுங்கும்!
அலையின் சில்லென்ற ஈரத்தில்!
கால்வைத்து -!
இதயம் நனைத்துப் பூக்கும்!
நீலப் பூக்களுக்கிடையே..!
கிரீச்!
கிரீர்ச்சென்று கத்தாத, !
பட்டாம்பூச்சிகளாய்!
இறக்கை அடித்துப் பறந்திடாத,!
மாறிமாறி வரும் அலைகளை!
விண்ணைத் தொடும் சந்தோசத்தில்!
தொட்டு தொட்டு - பூரித்த!
கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே.. !
ஒரு கவிதை வேண்டி!
கரை தாண்டி!
மணல்மேட்டில் பதிந்த!
கால்தடங்களை மணல்களில் களைந்துவிட்டு !
அங்குமிங்குமாய் பார்க்கிறேன்!
எனைவிடுத்து அத்தனையும்!
கவிதைகளாய் பூத்துக் கிடந்தன.!
பின் -!
கண்முன் நடமாடும் மனசும்!
அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்!
விரிந்திருக்க -!
எதை எழுதிக் கவிதையென்பேன்???!
எத்தனையோ பேரின் வீட்டில் !
அழுதிடாத அழையும்,!
மனம்விட்டு வெளிவராத சிரிப்பும்,!
பொங்கியெழுந்திடாத -!
கோபத்தையும் சுமந்து தான்!
கடல் -!
இப்படிக் கொந்தளிக்கிறதோ..!
மணலில் புகுந்து மிஞ்சிய!
சிகரெட் துண்டுகளுக்குள்!
புகுந்துள்ள எத்தனையோபேரின் கதைகளை!
கடல் - தன் அலையும் தண்ணீரில்!
எழுதி எழுதி கரைந்து போனதால் தான்!
நீல நிறம் கொண்டு விட்டதோ..!
காதலின் -!
வெற்றியில் ஒதுங்கிக் கொண்டாலும்!
தோல்வியில் பரிசளித்து!
மரணத்தில் முடைந்துக் கொண்ட!
எத்தனை காதலர்களின் பெருமூச்சோ!
இந்த அலைகள்..!
கடலை விற்பவனிலிருந்து!
காதலர்களிடம் குறி சொல்பவளிலிருந்து!
பூ விற்பவள் வரை - தன்!
இல்லாத நாட்குறிப்பில் இருக்கும் விலாசம்!
இந்த கடல்தானே..!
கரைதொட்டு கடல்புகும்!
அலைபோலவே!
ஏதோ ஒன்றை தின்று உறங்கி எழுந்ததில்!
எதையோ தொட்டுவிட்டதாகவே!
ஆசையென்னும் ஆழத்தில் மூழ்கி மூழ்கி!
கூரைவீட்டை தாண்டாத மீனவர்களுக்கு!
எமனும் சிவனும்!
இந்த ஒற்றை கடல் தானோ.. !
கடல் தாண்டி!
விண்வரை பறக்கும் விமானத்திற்கும் !
கரைதாண்டி கடல் புகும்!
கிழிந்தசட்டை பழைய குழம்பிற்குமான!
தீர்ப்பையும் -!
இந்த ஆழக் கடல் -!
என்று வெளியிடக் காத்திருக்கிறதோ..!
எல்லாம் தாண்டி!
தனியே அமர்ந்து -!
கடலையே வெறிக்கும் !
எத்தனையோ பேருக்கு!
இந்த கடலும் காலமும்!
என்ன பதில் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை.!
சற்று நேர அமைதியில்!
சூரியன் சற்று சாய்ந்து!
இருட்டிக் கொள்கையில் -!
இவை எவையையுமே பதிவு செய்யாது!
காகிதத்தை கசக்கி கடலில் வீசிவிட்டு!
கேள்விகளையும் -!
ஏதோ ஒரு கனத்தையும் மனதில் சுமந்தவனாய்!
கரையையும் கடலையும் தாண்டி!
நகர விளக்கின் வெளிச்சத்திற்குள்!
புகுந்துக் கொள்கிறேன்.!
கடல் -!
என்னையும்!
தன் அலைகளிடம் யாரேன்றுக் கேட்டு!
தண்ணீரில் எழுதிக் கொள்ளும் போல்! !

வாழ்தல் என்பது

ரவி (சுவிஸ்)
எனது கண் இறைக்கும் ஒளியை !
ஓர் புள்ளியில் தேக்க !
எனக்கு இஸ்டமில்லை. !
அது படர்வதற்குரியது. !
விரும்பியபோது விரும்பிய இடத்தில் !
ஆடவும் பாடவும் !
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது !
ஒரு குழந்தை - !
என்னைவிட. !
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள். !
தனிமையாய் !
மனம்விட்டு சிரிக்கும் எனை !
பைத்தியமென பார்வையெறிந்து !
கொல்லும் உலகில் !
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன். !
மரணத்தை !
பூச்சாண்டி காட்டி !
பயமுறுத்தும் மதமும் !
எனை வெற்றிகொண்டு நூற்றாண்டுகளாயிற்று. !
வாழ்வின் ஒரு பகுதியே மரணம். !
தடித்த விரல்களால் !
கூனிய முதுகுகளில் !
பிராண்டி எழுதிய விதிமுறைகளில் !
கசியவிடப்பட்டது வாழ்க்கை !
என்றாயிற்று. !
இலேசானவனாய் மிதந்துவிடாமல் !
பாரமேற்றப்பட்டு !
செதுக்கி செதுக்கி அழிக்கப்பட்டவன் நான். !
ஒரு புள்ளி நோக்கி ஓடுவதில் !
இறகுகள் சொடுக !
கிளைவிடாது !
பார்வைகள் நெடுத்துக் கொள்கின்றன - !
அதிகார வெளியைத் தேடி! !
வாழ்தல் என்பது !
ஒப்புவிக்கப்பட்ட பாதையினூடு !
ஒடுங்கிச் செல்வதல்ல !
பரந்து விரிவது அது - !
ஓர் உயிர்ப்பு வெளியாய்

உடன் பிறப்பு

கிளியனூர் இஸ்மத் துபாய்
தாயின் கருவறையில்!
சேய்மையாய் பிறந்த உறவு!
உதிரம் ஒன்றானாலும்!
வாழ்க்கையில்!
உதிரக் கூடாத உறவுகள்!
சகோதரன் சகோதரி…!
ஒன்றாய் பிறந்து!
ஒன்றாய் வளர்ந்து!
ஒன்றாய் வாழ்வதில்!
சிலர்!
ஒற்றுமை இழப்பதேன்…?!
கருத்துக் கலப்பில்!
கரையேராமல்!
குருத்துவம் இழக்கும்!
இவர்களின்!
குருதி உறவுகள்…!
அவசர வாழ்க்கைக்கு!
ஆசைகள் அதிகம்!
அதனால்!
அனைத்து தேவைகளுக்கும்!
ஆசிரியராவது சுயநலம்…!
விட்டுக்கொடுப்பதற்கு!
பொருள் இருந்தாலும்!
உறவை வெட்டுவதற்கு!
பலர்!
பொருளாகிறார்கள்…!
நீயா…? நானா…?!
சுயநலக் களத்தில்!
சூனியனர்களாகும்!
ஒருதாய் வயிற்று பிள்ளைகள்…!
கூடப்பிறந்தவர்களோடு!
கூட்டாக வாழாதபோது!
கூட்டாளிகளுடன் கூடுவதில்!
குணம் நிறக்குமா…?!
பக்கத்து வீட்டுக்காரனை!
மன்னித்து விடும் மனம்!
பாசக்காரனுக்கு அது கொடுப்பது!
மரணதண்டனை…!
பாசமும் அன்பும்!
மதிப்புத் தெரியாதவர்களுக்கு!
மத்தியில்!
மரணமாகிக் கொண்டிருக்கிறது…!
இது!
தாய்பாலின் கலப்படமா…?!
தாரம் தந்த பாடமா..?!
யார் வகுப்பு நடத்தினாலும்!
அங்கு!
பாசம் குருவானால்!
வேசக்கரு களைந்துவிடும்…!
உறவில் உறைந்தவர்கள்!
பலரின்!
உள்ளங்களில் வாழ்கிறார்கள்…!
உறவைத் துறந்தவர்கள்!
தங்களின்!
உள்ளத்தை தொலைக்கிறார்கள்…!
தான் என்ற தலைக்கணம்!
தரையிறங்கினால்!
நாம் என்ற ஒற்றுமை!
தலை சிறக்கும்…