கல்வி.. தாமரை.. சாமந்தி - அகரம் அமுதா

Photo by FLY:D on Unsplash

01. கல்வி!!
முனைந்திடின் பெயரோ டேவல்!
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;!
கனிவுடன் ஒற்றை நீக்கின்!
கவிஞனும் குரங்கும் உண்டாம்;!
மனைதனைக் கூடும் சொல்லே!
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;!
உனையெனை சான்றோ னாக!
உயர்த்திடும் கல்வி தாமே!!
02. தாமரை!!
ஏவலே முதலெ ழுத்தாம்;!
எழுத்திதில் கடைத ளைகின்!
காவிய வாலி இல்லாள்;!
கடையிரண் டெழுத்து மானாம்;!
மேவிய இடையை நீக்கி!
விரைந்து ‘கால்’ தனைஒ றுத்தால்!
தாவிலை நிலமாம்; அச்சொல்!
தாமரை என்பேன் கண்டீர்!!
03. சாமந்தி!!
முதலெழுத் திறத்த லாகும்;!
முதல்,கடை இனமே யாகும்;!
முதல்,கடை யிரண்டெ ழுத்தை!
முடிச்சிடின் அமைதி யாகும்;!
முதலற குரங்கே யாகு(ம்;)!
உயர்இரண்டா மெழுத்தி னோடே!
இதன்கடை தளைகின் திங்கள்;!
இச்சொல்சா மந்தி யாமே!!
- அகரம்.அமுதா
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.