முகமில்லாத மனிதன் - தீபச்செல்வன்

Photo by FLY:D on Unsplash

எழுதியவர்:தீபச்செல்வன்!
!
முகமில்லாத மனிதனின்!
புன்னகை!
அந்த இரவுக்குள்!
தொலைந்துகொண்டிருந்தது.!
இது வேறுஒரு செயற்கை இரவு. !
முதலில் இரவை சிறைவைத்தார்கள்!
பிறகு இரவாய் நாளை!
சிறைவைத்தார்கள்!
பிறகு நாட்டை சிறைவைத்தார்கள்!
இந்த செயற்கை இரவு!
காலத்தை படர்ந்து!
விழுங்கிக்கொண்டிருந்தது.!
இனந்தெரியாத துப்பாக்கிகளும்!
வெள்ளை வான்களும் !
இராணுவ முகாம்களும்!
மனிதர்களை இந்த இரவில்!
தேடித்திரிய தொடங்கியது.!
இரவில் முகங்கள் புதைந்தன.!
மரணத்தை ஊதி பெருப்பித்து!
அழுகைகளை நிரப்பி!
இரவால் நாடு செய்தார்கள்.!
இரவின் தெருவில்!
நிதானமற்று எல்லோரும் !
அலையத்தொடங்கினோம்!
அடங்கிப்போய்!
இருட்டில் அடைந்தோம்.!
இரவு இன்னும் ஆக்கிரமித்தது.!
இருட்டில் எழுதி!
இருட்டில் கேட்டு!
இருட்டில் திருகி!
இருட்டாகி போகிறது!
முகங்களும் புன்னகையும்.!
இரவுக்காக ஒருவன் !
அழுதுகொண்டிருந்தான்!
இரவும் அழுதுகொண்டிருந்தது
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.