வாகனங்கள் புகைத்தபபடி!
போய்க்கொண்டிருந்தது!
எனக்கு!
ஒரு சிகரட் வேண்டும்!
என்றான் நவராஜ்!
அல்லது!
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது!
வா!
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.!
கடையின் மேல் மாடியிலிருந்து!
நானும் அவனும்!
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்!
கடையின் சமையல் பகுதியும்!
புகைத்தபடியிருந்தது!
அந்த மாடிக்கு செல்லும்!
படிகள்!
சாம்பல் படிகளாகியிருந்தன!
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக!
என்னை நகர் முழுவதும்!
தேடிக்கொண்டு வந்தான்.!
ஒரு நாள் இரவு!
பெட்டிக்கடை ஒன்றிற்கு!
பக்கத்தில்!
நானும் அவனும்!
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.!
அவனின் வீட்டில்!
முழுநாளும் தங்கியிருந்தபோது!
அம்மாவுக்கு தெரியாமல்!
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்!
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.!
நான் உதிர்ந்த சாம்பலுக்காய்!
வருத்தப்பட்டு தேடினேன்!
விழுந்திருந்த ஓவியங்களை!
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்!
சாம்பலை கைகளால் மூடினேன்!
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை!
இறுகப்பிடித்திருந்தான்.!
சைக்கிளின் முன்னாலிருந்தான்!
பொக்கற்றில் கிடக்கும்!
ஒரு சிகரட்டோடு!
அந்த சைக்கிள் நகர மறுத்தது.!
நாளைக்கு நீ போகாதே என்றான்!
என்றாவது நான்!
போயாகவேண்டியிருந்தது!
அன்று முழுக்க அவனின்!
தோளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.!
சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து!
கிடந்தன!
சாம்பல்களோடு!
சிகரட்டின் அடித்துண்டுகள்!
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்!
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.!
நமது வாடிக்கையான தேனீர்கடையின்!
மொட்டைமாடியில்!
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்!
புகைந்தன!
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது!
நான் நிலவைப் பார்த்தேன்!
அதுவும்!
ஒரு சிகரட்டை புகைக்க!
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்!
நமது நகரமெங்கும்.....!
!
-தீபச்செல்வன்!
(எனது உயிர்த்தோழன் நவராஜிற்காக..)
தீபச்செல்வன்