இவர்கள் புனிதர்கள் - த.சு.மணியம்

Photo by FLY:D on Unsplash

தத்துவம் பத்துமே சொத்தெனக் கூறிடும்!
வித்தகம் பெற்றவர் புத்தகம் வாங்கிட!
உத்தரம் போட்டவர் பத்து நாள் என்றவர்!
சத்திரம் போவென வக்கிரம் பேசுறார்.!
வட்டியும் வாங்குறார் வங்கியில் போடுறார்!
கிட்டிடும் நகையினைக் கிண்டியே தாழ்க்கிறார்!
சட்டியும் பானையும் அடுப்பிலே வைத்திரார்!
தட்டியும் கேட்டபோது விரதமும் என்கிறார்.!
வேட்டியும் சால்வையும் வெள்ளையாய் போடுறார்!
பாட்டியின் சொத்திலும் பாதியைக் கேட்கிறார்!
நீட்டியும் அகட்டியும் பரம்பரை பேசுறார்!
நீட்டிடின் பணமதை குப்பையும் அள்ளுவார்.!
குங்குமப் பொட்டுடன் கோயிலும் நாடுவார்!
சங்குகள் ஊதியே சாதமும் வாங்குவார்!
கும்பிடும் சாமிக்கே நாமமும் போடுவார் !
உண்டியல் போட்டதை நாளிலும் கண்டிரார்.!
படித்தவர் போலவே பாவமும் காட்டுவார்!
எடுத்தவர் பிந்தினால் எரிமலை ஆகுறார்!
முடித்தவர் என்பதால் முற்பணம் கேட்கிறார்!
வடித்தவர் வார்த்தைகள் தியாகிபோல் காட்டுறார்.!
ஊரது போய்வர உண்மையில் விரும்புறார்!
பேரெது கொடுத்தது பட்டியல் கண்டிரார்!
சீரெது சிறப்பெது செய்திகள் அனுப்புறார்!
ஈதொரு பயத்தினால் போவதை வெறுக்கிறார்.!
!
-த.சு.மணியம்!
இலண்டன்
த.சு.மணியம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.