வான்படையும் காட்டியதே தமிழன் வீரம்!
வந்தனவே வாழ்த்துகளும் நாளும் ஈழம்!
தேன் இனிக்கச் சேதிவர தெருக்கள் எங்கும்!
தெம்மாங்கு பாடியதே தமிழர் வாயும்!
கூன் விழுந்து நா தளர எதிரி வீரம்!
கூடு விட்டுப் பறந்ததுவே உலகு எங்கும்!
கோன் நடத்தும் அராஜகத்தின் முடிவின் காலம்!
கொண்டு வந்து விட்டுடுத்தே தெருவின் ஓரம்.!
மட்டுநகர் வீதீயெங்கும் அகதிக் கோலம்!
மக்களுமோ பட்டினியில் தினமும் வாழ்வும்!
கட்டவிழ்த்து விட்டதுபோல் களத்தில் ஏவும்!
கணக்கடங்கா குண்டுகளால் நீழும் சாவும்!
கிட்டவரா மறவர்படை கிழக்கில் என்றே!
கிறக்கத்தில் வாழுகின்ற பகைவன் வாழ்வும்!
வட்டமிட்டு வான்படைகள் போடும் குண்டால்!
வழி வழியே பிணங்களுடன் தளங்கள் வீழும்.!
ஓடுமட்டும் ஓட விட்டுப் பார்த்திருக்கார்!
ஓர் நாளே அத்தனையும் வழித்தெடுப்பார்!
காடுமட்டும் வீரமென்று கணித்திருப்பார்!
களம் இறங்கின் முடிவெடுக்கா தளம் திரும்பார்!
கேடுகெட்ட கூலிகளைக் கணக்கும் வைப்பார்!
கேள்வியின்றி அவர் தலைகள் கொய்தும் கொள்வார்!
பாடுபட்டுக் கடன் எடுத்து யுத்தம் செய்வோர்!
பார்த்திருக்க உலகினையும் மதியால் வெல்வார்.!
த.சு.மணியம்
த.சு.மணியம்