பெரு விருட்சமாய் - ப்ரியன்

Photo by FLY:D on Unsplash

* பெரு விருட்சமாய் *!
என்!
வாழ்வில் பெருவிருட்சமாய்!
எழுந்து நிற்கிறாய் நீ;!
தினம் தினம்!
பூத்து பூத்து!
கால் வேர்களைப்!
பூஜித்தப்படி நான்!!
*!
உனை திட்டிவிடும்!
கணங்களில் - உன்!
விழியோரம் சேரும்!
இரு துளிகளின்!
வெப்பத்தில்!
எரிந்துவிட துணிகிறேன் நான்!!
*!
எதையெதையோ!
கவிதையாக்கும் எனக்கு!
உன்னின் வெட்கத்தை!
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்!
அறிவு எட்டவில்லை இன்னமும்!!
*!
இப்போதுதான் அவிந்த மலராய்!
எப்போதும் முகம் வைக்க!
எப்படி இயலுகிறது உன்னால்?!
முடிந்தால்!
அவ்ரகசியத்தை கொஞ்சம்!
என் வீட்டுதோட்ட மலர்களுக்கும்!
சொல்லித் தாயேன்!!
*!
எனை பூவாக்கி வடிக்கொள்ளேன்!
புதுமலராய் பூத்திருப்பேன்!
எப்போதும்!!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!!
*!
கடற்கரையிலிருந்து!
எழுந்து வந்துவிட்டாலும்!
அங்கேயே அருகருகில் அமர்ந்து!
பேசிக்கொண்டே இருக்கின்றன!
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த!
நம் தடங்கள்!!
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.