நிற்கின்ற புகைவண்டியிலே!
ஜன்னல் ஓர இருக்கையிலே!
அமரக் கொடுத்து வைக்கையிலே-!
சடாரெனப் பக்கத்து!
இருப்புப் பாதையிலே!
‘தடதட’ சத்தத்துடன்!
பாய்ந்து வரும்!
எதிர்திசை வண்டி!
ஏற்படுத்தும் ஓருணர்வை-!
நாமிருக்கும் வண்டிதான்!
நாலுகால் பாய்ச்சலில்!
நகர்வது போலவே..!
பிடித்த பிரமை!
'மடமட'வென்றே!
விலகிடும் வந்த வேகத்தில்..!
பின்னால் தேய்ந்து!
சன்னமாகிடும் சத்தத்திலும்-!
கண் முன்னால் விரிந்திடும்!
சற்றுமுன் கண்ட!
அதே காட்சியிலும்..!
வாழ்விலும் கூட இதுவே நியதி-!
பிரச்சனை தடதடவென வருகையிலே!
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்!
எடுத்திடலாம் ஓட்டம்!
என்றுதான் மனமது விழையும்..!
நின்று எதிர் கொண்டாலே புரியும்!
நின்ற இடத்திலேயே நாம் இருக்க!
பிரமாண்டமாய் தெரிந்த!
பிரச்சனையது சடுதியில்!
தேய்ந்து பின் மாயமாய்!
மறைந்தே போயிடும்.!
இன்னல் திரையும் விலகி-மிக!
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.!

ராமலக்ஷ்மி