வேண்டும் வீரப்பன்கள்
ஜான் பீ. பெனடிக்ட்
செய்தி: வீரப்பன் காட்டில் களைகட்டுகிறது 'ரியல் எஸ்டேட்' தொழில்!
காட்டு வளமே நாட்டு வளம்!
கற்றுத் தருது பள்ளிக்கூடம்!
காட்டை அழித்து நாடாக்குது!
காசு குவிக்கும் வஞ்சகர் கூட்டம்!
அதிரடிப்படை தவிர்த்த அத்தனையும்!
அருகில் வராது ஆண்டு வந்தான்!
ஆடு மாடு விலங்குகள் மேய்ந்திடவும்!
அடுப்பெரிக்க சுள்ளிக்கும் ஆவணம் செய்தான்!
வீரப்பன் வீழ்ந்த விவரம் கேட்டதும்!
வீறுகொண் டெழுந்தன விளம்பரப் பலகைகள்!
ஊட்டி முதுமலை போல் ரிசார்ட் கட்ட!
உகந்த இடம் சத்தியமங்கலம் காடென!
மீசைக்கார வீரப்பனால்!
நாசமானது சந்தனமும் யானையுமே!
நாசக்கார பெரும்புள்ளிகளால்!
மோசம் போச்சு ஒட்டுமொத்த வனவளமே!
களிறுகளைக் கொன்ற கயவனே யாயினும்!
காட்டைக் காத்திட்ட காவலன் அவன்!
வேகமாய் அழியும் காட்டுவளம் காக்க!
வேண்டும் காட்டுக்கொரு வீரப்பன் தானே!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்