நா காக்க - இமாம்.கவுஸ் மொய்தீன்

Photo by Marek Piwnicki on Unsplash

'அளவுக்கு மீறினால் !
அமிர்தமும் நஞ்சு'!
'அளவோடு இருந்தால்!
வளமோடு வாழலாம்' !
நோயற்ற வாழ்வே!
குறையற்ற செல்வம்'!
போன்ற பொன்மொழிகளை!
நினைவு கொள்ளாததால்!
இன்று !
முப்பது நாற்பதுகளில்!
இருப்போரெல்லாம்!
மருத்துவமனைகளின்!
தொடர் வாசத்தில்!!
சர்க்கரை!
இரத்த அழுத்தம்!
உடற் பருமன்!
நெஞ்சு வலி!
கழுத்து வலி!
முதுகு வலி!
மூட்டு வலி!
உடற் சோர்வு!
நரம்புத் தளர்ச்சியென!
நீண்டு கொண்டே போகும்!
உடலியல் பிரச்சினைகள்!!
காரணம் யாதென!
ஆராய்ந்து பார்ப்பின்!
உணவுக் கட்டுப்பாடும்!
உடற் பயிற்சியின்மையுமே!!
'யாகாவாராயினும் !
நாகாக்க' என!
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே!
சொல்லி வைத்தார்!
பொய்யா மொழிப் புலவர்!!
நாமும் நினைவில் கொள்வோம்!
அவர் 'நாகாக்க' சொன்னது!
சொல்லில் மட்டுமல்ல!
சுவையிலும் தான்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.