நீதி தேவதையே உன்னிடம் - சஹ்பி எச். இஸ்மாயில்

Photo by FLY:D on Unsplash

நீதி தேவதையே உன்னிடம் !
சரணடைந்துஇசரணகதியாய் முறையிடுகிறேன்....!
கறுப்புக் கூடுகள்!
காலியாக இருந்த போது!
காக்கிகள் எம்மை கண்டுபிடித்தன.!
ஒரு நூறு கண்ணீர் சிந்தியும்!
இரு நூறு உண்மை சொல்லியும் !
துப்பாக்கி முனைகள் எம்மை !
சிறை பிடித்தன. !
கரைபடிந்த கரங்கள் !
காகிதங்களில் !
எம் தலையலுத்தை!
பொரித்தெடுக்க!
வதைத்தெடுத்த வாக்குமூலமும் !
உதைத்தெடுத்த கையொப்பமும் !
சாட்சியாகின. !
இருண்ட அறை.!
காக்கி நட்சத்திரங்கள் மின்னும் ஒரு இடம்மொன்றில் .!
அவர்கள் காகிதங்களில் அவிழ்த்துவிட்ட !
கதைகள் கட்சிதமாய் நிறைவேறியது. !
கறுப்பு நீல சட்டைக்காரன் கையொப்பமிட்டார். !
எமக்கு எதிரான முதல் தீர்ப்பு வெளிவந்தது சந்தேகநபர்கள்.!
கம்பிகளின் பின்னால்இ!
ஹிருதயத்தை செந்தணலில் வாட்டுவதாய்!
நாகர்தன நொடிகள். !
ஓலைச் சத்தம்!
தேசிய கீதமாய் இசைக்கும்!
பின்னோக்கி கூர்படைத்த !
ஒரு சமூகத்துடன்!
இணைகப்பட்டோம்.!
ஒரு நாள் !
கறுப்பு நீல சட்டைக்காரர் !
மீண்டும் கையளுத்திட்டார். !
நான் விடுவிக்க பட்டோம் !
தவணை சுகந்திரத்தில். !
இறுதியில் ஒரு நாள்!
கறுப்பு நீல சட்டைக்காரர் !
மீண்டும் பேனாவை கிறுக்கினான் !
நாம் நிரபராதி என்றனர். !
சமூக திறந்த வெளி சிறைச்சாலையில் !
நாம் ஆயுள் தண்டனை பெற்ற பின்
சஹ்பி எச். இஸ்மாயில்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.