23 வருடங்களாகியும்!
'அது'!
ஒரு கையளவு நீளமே!
வளர்ந்திருந்தது!
அதன் தங்கை!
திருமணத்திற்குத்!
தயாராகிவிட்டாள்.!
அதுவும் பெண்தான்.!
பேசாது.!
நடக்காது!
இன்று பிறந்தாற் போல்தான்.!
இன்றைக்காவது!
கொன்றே விடுவதென!
தீர்மானமாய்!
கழுத்தை நெரிக்கப் போன!
தந்தையைப் பார்த்து!
அது ஏனோ சிரித்து வைத்தது!
சிரிப்பில் சிதறுண்டுபோன தந்தை!
கொலைப்பழி நேராமல்!
திரும்பி விடுகிறார்.!
-ச.முத்துவேல்

முத்துவேல்.ச