அது ஒரு கனாக்காலம்
இளவரசன்
வாலிப வசந்தம் - மனித !
வாழ்க்கையின் சுகந்தம். !
வர்ணக் கனவுகளின் கலவையில் !
சுதந்திர வானில் சிறகடிக்கும் இனிமை. !
எல்லாமே இன்று ஒரு கனாக்காலம் !
கண்ணெதிரே கலைந்து கொண்டது. !
சொர்க்கத்தில் தலைவாசல் !
என்னும் ஒரு தீவின் பிரசைகளாய் !
முன்னொரு காலமதில் !
மகிழ்ந்திருந்த வேளைதனில் !
ஆட்சியாளர்களின் பதவிப் போட்டியிலும் !
ஆதிக்க வெறியின் உச்சக் கட்டத்தாலும் !
திசைக் கொன்றாய் பிரிந்து போனோம். !
இளமைத் துடிப்பும் !
உதிரத்தின் புத்துணர்வும் !
வருங்காலமதின் அற்புதக் கனவும் !
கண்ணெதிரே கலைந்து போனது. !
வாலிபத் துடிப்பில் !
கன்னியர் பின் காற்தடம் பதித்து !
பூரிப்போடு நடந்த நாட்களை !
இன்னுமே எண்ணியபடி !
துடிக்கிறது பேதை மனது. !
நல்லைக் கந்தனின் திருவிழாவும் !
புனித அந்தோனியாரின் பெருநாளும் !
ஹச்சுப் பெருநாளதனில் நண்பர் வீட்டில் !
“வட்டிலப்பம்” உண்டு களித்த !
நாட்களை நினைந்தபடி இன்னும் !
அழகிய நிலா நாளில் !
கோட்டை முனியப்பர் முன்றலில் !
வறுத்தெடுத்த நிலக்கடலை !
கொறித்தபடி திரிந்த நாட்கள். !
பனி படந்த தேசமதில் !
ஓடுகின்ற கடிகார வேகத்திலும் !
விரைவாய் ஓடுகின்ற எமக்கு !
அது ஒரு கனாக்காலம் !
மீண்டும் அந்த நாட்களை !
எண்ணியும் முடியாதபடி !
முதுமையின் தாக்கம். !
மீண்டும் ஒரு பிறவி என்பதில் !
உடன்பாடு எனக்கில்லை !
ஆனாலும் அந்தக் காலத்திற்காய் !
ஏங்கியபடி இந்த மனிதம்.. !
இளவரசன் (கனடா)