நடக்கிறதெல்லாம்!
உறுத்தறது இல்ல.!
எத்தனை காலம் !
கல்லாவும் மண்ணாவும் இருக்கிறது.!
முடியல!
இழந்து போனவர்களின்!
எண்ணக் குவியல்ல!
மூச்சுத்திணறுது!
யாரை முன்னிறுத்திச் சொல்றது!
சமாதானமும்!
விருப்பங்களும்!
முனுமுனுப்புகளும்!
சாட்டுச் சொற்களும்!
பழிவாங்களும்!
இடிபாடுகளின் அழுகிய வாசத்தில்!
நசித்துப் போயிற்று!
நெனப்பு!
இன்னைக்கும் !
பார்வையைத் தெறிக்கிற!
தூசியா இருக்குது!
பதிலுக்குப் பதிலாகவும் இருக்கலாம்!
எப்படிச் சொல்றது!
அடுத்தவன் தகர்க்கும் போது !
தோன்றுகிற அடையாளம்!
இவன் தரைமட்டமாக்கிய போது!
தெரியவில்லை!
வண்ணத்தைக் கொள்ளும் வெண்மை!
இவனின் சமாதானம்!
என்னமோ!
கையையும் காலையும்!
சிதைப்பது போல் துடிக்கிறான்!
அடயாளங்களுக்குள் !
ஒளிந்து கொண்டு!
உணர்வுக்கு மத்தியில்!
அறிவை முன்னிறுத்தியவனை!
மறந்த(இ)வன்!
தசைகளை அழுகவிட்டு!
வெறிக்கும் கூடு!
எதிர்ப்புகள் வந்தாலென்ன !
ஆள் சேர்க்கும் தந்திரம்!
அடுத்தவனுக்கும் தெரியும்!
கல்லும் மண்ணும் !
முன்னதை நினைவுறுத்தும் !
புராதனம்!
இன்று சுயலாபம்!
அவனுக்கும்.!
வாழ்வாகாத!
வாழ்வின் அடையாளங்களை!
நீ வாழ இருத்தி அவமதிக்காதே!
உன் எச்சமின்றி!
வரும் தலைமுறையாவது!
சுயமாய் இயங்கட்டும்!
எதுவாவாவது

ப.குணசுந்தரி தர்மலிங்கம்