அந்த மழைக்கால இரவில்!
திடீர் உறவின் வருகைக்கு!
வீடு புரண்டு படுத்துக் கொண்டது...!
யாருக்கும் நிற்காத மனிதர்கள்!
எதற்கும் கவலையில்லாமல் அள்ளித் தெளிக்கும்!
வார்த்தை அலங்காரங்களைச் சீரணித்தும்!
மாய உலகில் வாழ்ந்து கொண்டும்!
இரண்டு நாள் வீடு ரெண்டு பட்டது....!
இல்லாமற் போய்விடும் கவலையில்!
கடந்து போன நொடிகளையெல்லாம்!
நொடிநொடியாய் பிரதியெடுக்க!
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக!
புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!!
கண் கலங்கியபடி விடை பெற்றுச்!
சென்ற சில நிமிடங்களில்!
உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்!
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு....!
சமயங்களில் பிரிவு கூட!
விடுதலையாக அர்த்தம்!
செய்து கொள்ளப் படுகின்றன

அருணா