எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும் - முகில் தினகரன்

எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும் - Tamil Poem (தமிழ் கவிதை) by முகில் தினகரன்

Photo by FLY:D on Unsplash

தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…!
வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….!
இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….!
குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!!
ஆம்!!
கன்னித் தமிழும் கணிணித் தமிழும்!
கைகோர்த்து நிற்க, !
அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்!
அரவணைத்து நடக்க,!
சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்!
சம காலத்தைச் செழிப்பாக்கிட,!
சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்!
மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,!
தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்!
தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,!
மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்!
மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,!
கொங்குத் தமிழும் குமரித் தமிழும்!
செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,!
செந்தமிழ் சீர் பெற..!
தனித்தமிழ் தரம் பெற…!
நற்றமிழ் நயம் பெற…!
முத்தமிழ் முழங்கியெழ…!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!..........!
ஆற்றுப் படைகளை!
சேற்றுப் படைகளாக்கி!
அந்தாதிகளைப் பந்தாடி!
ஏலாதிகளை ஏலம் கூவி!
நிகண்டுகளை நிர்வாணமாக்கும்!
சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த!
வித்தைத்தமிழரை விரட்டியடித்து!
வீரத் தமிழரின் விலாசங் கூற!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!..........!
சொல்லை அறிந்து…அதன்!
பொருளை அறிந்து!!
தூய்மை அறிந்து….இடத்!
தன்மை அறிந்து!!
பயனுறுத்தும் பாவலரும்!
நயனுறுத்தும் நாவலரும்!
தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…!
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!............ .!
அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை!
அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!!
அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்!
வார்த்துத் தந்த வள்ளலாரும்!!
எழுதுகோலில் நெருப்பை நிரப்பி!
கனல் கவி கக்கிய பாரதியும்!!
மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.