அவனை மட்டும் காணவில்லை - ஜோதி - த.ஜெயபால்

Photo by Jorge Zapata on Unsplash

பெற்றோம் வளர்த்தோம்- !
பிள்ளைகளை !
பள்ளி செல்லும் !
அவரழகைப் !
பார்த்து தினம் ரசித்தோம் !
அந்தோ இன்று !
பூ முகம் பார்ப்பதற்கும் !
முகம் தடவி !
பூ முத்தம் சொரிவதற்கும் !
சாம்பல் கூட கிடைக்கவில்லை !
சண்டாளா !
சுடலைமாடா !
சுட்டெரித்தாயோ சுடர்களை !
தங்கத் தாமரை மலர்களை.. !
பூசிக்கொள்ளும் சாம்பலுக்கு !
பூ மழலைகள் தான் கிடைத்தாரா !
காலைமாலை கையெடுத்தோம் !
கஞ்சிக்கு வழி இல்லை ஆனாலும் !
படையலிட்டோம். !
ஆனால் நீயோ !
மழலைகளைக் கொலை செய்தாய் !
மானிடர் வாழ்வைச் சிதையிலிட்டாய் !
மழலைகளின் விழி அழகை !
ஊமையான மொழி அழகை !
பெற்றோரின் கனவை !
கொடுஞ் சிதையில் இட்டெரித்தாய். !
!
சீருடையில் பள்ளி சென்ற !
செப்புக் கை கால் பிள்ளைகள் !
கையசைத்த அழகு !
கரிக்கட்டை ஆனதய்யோ !
எழுதிக் கற்ற பள்ளி அறை !
தலையெழுத்தை எழுதிடுச்சே.. !
!
பள்ளிக்கூட தலைமை !
பார்த்து பார்த்து சொல்லித் தரும் !
ஆசான்கள் பறந்தாரே.. !
யார் மேல் குத்தம் சொல்ல? !
எங்கள் குலம் அழிந்ததைய்யோ.. !
!
கோயில்கள் நிறை கும்பகோணத்தில் !
நீ ஆடிய ஊழிக்கூத்தில் !
அலறி துடித்த குரல் கேட்கலையா !
அழகு எரிகற்கள் !
எரிந்து விழுந்தது தெரியலையா !
எரியும் பூக்கள் உயிர்காக்க !
ஏனோ நீ வரவில்லை !
அணிஅணியாய் அஞ்சலிகள் !
தலைவர்கள் தொண்டர்கள் !
தாய்மாரின் கதறல்கள் !
பெற்றவனின் கூக்குரல்கள் !
பிள்ளைகளைத் தீண்டிய தீ யவனை !
தண்டிக்கும் சாபங்கள் !
உயிர் பிழைத்த பிள்ளைகளின் !
பூக்குவியல் அஞ்சலிகள் !
கவிதைகள் கண்ணீர் ஊர்வலங்கள்.. !
உலகமே கூடியது !
மழைக்காணா குடந்தை நகர் !
மக்கள் கண்ணீரால் நனைந்தது !
அநியாயக்காரன் அவன் !
அவனை மட்டும் காணவில்லை.. !
- ‘ஜோதி’ !
(த.ஜெயபால்) !
--------- !
T.JEYAPAL M.A., B.G.L., DHBM (Homoeopathy) 1258, 16th Street Poompuhar Nagar !
Chennai-600099
ஜோதி - த.ஜெயபால்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.