அழகு மணல் வெளிகளிலும் பொழி..முகமிழத்தல் !
01.!
அழகு மணல் வெளிகளிலும் பொழி!
-----------------------------------------!
காற்றிறங்கி கடுமின்னல் சேர்த்து!
பொழிகின்ற கார்த்திகையின் கடைசி கன மழையே!
அலையடிக்க கரையேறி!
நண்டூரும் எனதூரின் அழகு மணல் வெளிகளிலும் பொழி.!
ஓங்கி நெடிதுயர்ந்து நிமிரும்!
நீண்ட பனை வெளிமீது நனை.!
இருள் சேர்ந்த ஒரு நாளில்!
ஓங்கியடித்த போர் காற்றில்!
பொலிவிழந்து போனதென் கிராமம்!
நீண்ட தலைமுறையாய் வாழ்ந்தோர்!
இடம்பெயர தனித்து தவித்தெம் பூமி!
உறவுகளை தேடி சலித்து களைத்த மண் களை தீர!
காற்றோடு சேர்ந்து கன மழையாய் ஊற்று.!
அன்னியன் கால் படிந்த தடங்கள் அழித்து!
ஒழுங்கையெல்லாம் ஓடையாய் ஓடு!
மார்கழி பாடல் பாடி தலமுழுகும் குளங்களிலே!
குளிர்நீராய் சேர்!
சங்கோலம் செய்யும் வயல் வெளிகள்!
எம் கோவில் சூரன் போர் செய்யும் திடல்!
மணியாரன் வெளி எல்லாம் வெள்ளமாய் நிறை.!
மழையே தெம்மாங்குப்பாடல் தெவிட்டாத இன்கலைகள்!
திருவிழா கொண்டாட்டம்!
எல்லாம் கண்டு மீண்டும் நிமிரும் எம் தேசம்!
அதுவரைக்கும் பூண்ட சாபம் போக கழுவி!
புது மழையாய் பொழி.!
02.!
முகமிழத்தல்
வேலணையூர்-தாஸ்