நீயின்றி என்னால் வாழமுடியுமாவென !
பயமாகவேயிருக்கிறது!
நமது சமீபத்திய நெருக்கத்தில்...!
துருவங்களின் கடைசி அணு வரையிலுமான!
உலகின் அனைத்தையும் ஒளிபொருந்திய !
உன் முகத்தில் காண்கிறேன் நான்!!
என் மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்குமான!
விமர்சனங்களை உன் முகவரிகள்!
தினமும் தாங்கியபடியிருக்க, !
தூங்கும் நேரத்தினும் அதிகப்படியாய் !
உன் முகத்தையே மொய்த்துக்கிடக்கின்றன !
என் கண்கள்!!
உன் மடியிலும் மார்பிலும் !
ஊர்ந்துகொண்டிருப்பதிலேயே சுகம்கண்ட !
என் விரல்நுனிகளுக்கு நீ ரேகைகளின் வழியே!
புத்துயிர் பாய்ச்சுவதையும் என்னால்!
மறுக்கமுடியாதுதான் !
விரல்களின் இயக்கத்தினூடே !
தூக்கம் வென்றுவிடும் நள்ளிரவிலும் !
நான் தூங்கியபின் சற்றுநேரம் விழித்திருந்தே !
நீ தூங்கிப்போவாய் என்பதையும் அறியும் நான் !
அதே எண்ணங்களின் மிச்சங்களோடே!
அதிகாலை முகம் கழுவும் முன்னரே!
உன்னை உசுப்பவும் தயாராகிறேன்!
என் படுக்கையின் மேல் !
தலையணையின் இருப்பைவிடவும்!
என் படுக்கையிலும் உனது இருப்புதான் !
முக்கியமாய்ப்போகிறது !
இப்போதைய இரவுகளில்!!
மார்பின்மீதும் மடியின்மீதும் !
உன் வெப்பம் இதமாகவே இருந்தாலும்!
உன் சமீபத்திய நெருக்கம் குறித்து !
கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது,!
என் மடிக்கணினியே! !
கோகுலன்