ஒரு காகம் பல நம்பிக்கை.. கனவுகளின் தொடர்ச்சி!
!
01.!
ஒரு காகம் பல நம்பிக்கை!
---------------------------------!
இரவு கழித்து!
தூங்கிய ஒர் பொழுதில்!
நிர்வாணக்கனவுகளுக்கு!
இடைஞ்சலாய்!
கிணற்றடி வேலியில்தனித்திருந்த!
நரை கலந்த ஓர் கிழட்டு!
காக்கை கத்தி ஆடை!
களையாமலே கனவு!
முடிந்தாயிற்று!
காக்கைகளின் தொன்மையான!
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று!
அதன் அழுகை வந்த திசை பார்த்து!
பழய கதையை!
புதுமையாக சொல்லி முடித்தாள்!
அம்மா!
இனந்தெரியாதோரால்!
இணங்காணப்பட்ட என்!
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய!
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட!
வேலையும் வரப்போவதாக!
ஆரூடம் சொன்னால்!
அம்மா!
பகல் கடத்தி!
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது!
நிறத்தால் தனித்துவம் காடடிய!
அந்த காகம்!
சொண்டு;சொரியத்தான்!
போயிருக்கனும் போல!
மின்சாரக்கம்பியில்!
அதன் இறுதி அத்தியாயம்!
எழுதப்பட்டிருந்தது!
கிணற்றடி வேலியில்!
அதன் சாவை அது முன்னறிவிப்பு!
செய்திருந்தது!
பாவம் அம்மா!
நாளையும் எனக்கு விரசமாய்!
கனவுகள் வரலாம்!
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்!
கிணற்றடி வேலியில்!
ஒன்று சேர்ந்து கத்தலாம்!
இப்போதெல்லாம் அம்மாவின்!
நாட்கள் நம்பிக்கையோடு!
மட்டுமே நகர்கிறது!
!
02.!
கனவுகளின் தொடர்ச்சி!
----------------------------!
நீண்டதொரு பயணத்தின்!
இடைவெளியில் சுயம் பற்றிய!
கனவுகளோடு விழிக்கிறேன்!
இருள் சூழ்ந்து மரணத்தின்!
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும்ம பிரம்மைக்குள்!
மனது மூழ்கிப்போனது!
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை!
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்!
நீளுகிறது இந்த இரயிலை போல!
போகுமிடமோ வந்து விட்டது!
கனவுகள் மடடுமே தொடர்கிறது!
இந்த உலகமும் ரயில்!
பயணமும் ஒன்றுதான்!
இறுதியில் பயணச்சீட்டுக்கூட!
மிஞ்சுவதில்லை
முஹம்மட் மஜிஸ்