இமையிரண்டு காதல்.. அவளாய் போன - காவிரிக்கரையோன்

Photo by Jorge Zapata on Unsplash

இமையிரண்டு காதல் ஒன்று!.. அவளாய் போன அவன்!
!
01.!
இமையிரண்டு காதல் ஒன்று!!
-------------------------------------!
வார்த்தைகளை தேக்கி வைத்ததில் !
உள்ளத்து அணை உடைந்திடுமென்ற !
பயம் லேசாக பற்றிக் கொண்டது,!
உயிர் நிறைக்கும் துயில் களைந்து !
இன்னும் பிரியாமல் இருக்கும் இருளையும்!
நிலவையும் பார்த்துக் கொண்டே சாளரம்!
வழி கண்கள் பயணித்தது,!
சூரியன் வர வர மரியாதை நிமித்தம் !
அதிகம் காட்டி தன் முழு உருவத்தையும்!
வீட்டுக்குள் இழுத்து கொண்டது நிலா,!
எழுந்திருந்த சிலருக்கும், உறக்கக் காதல்!
கொண்ட சிலருக்கும் சூரிய வரவின் அறிவிப்பு !
செய்து கொண்டே இரை தேடி கடந்து செல்கிறது!
முருகனின் கொடிச் சின்னத்து பறவை,!
உறக்கம் கலையாத கண்களும் உறக்கம் !
கலைத்து விடும் கால்களுமாய் அம்மா பால்!
என்று இயந்திரமாய் மிதிவண்டி அழுத்திச்!
சென்றார் ஒரு பால்காரர்,!
இத்தனை வித்தியாசங்களையும் சுவாசித்தாலும்!
என்னால் வித்தியாசப்பட்டு நிற்க முடியாமல் தான்!
போனது, என் கண்ணிமைகள் இரண்டுக்கும் அப்படி ஒரு!
காதல், இறுகப் பற்றிக் கொள்ளத் துடித்தன,!
சரி காதலை பிரித்தப் பாவம் நமக்கெதற்கு என்று!
இமைகளின் தழுவலுக்கு வழி விட்டு கனவு பயணத்துக்கு!
மீண்டும் ஒரு பயணச்சீட்டு பற்றி பறக்க ஆரம்பித்தேன்!!
!
02.!
அவளாய் போன அவன்...!
------------------------------!
முள்ளிருக்கும் ரோஜா எனினும் உன்னைத் !
தள்ளி வைக்கப் போவதில்லை என்ற !
கர்வமுனக்கு,!
செருப்பாயிருந்தாலும் ஒரு முறை பெட்டியினுள் !
அமர்ந்து விட்டதால் எத்தனை முறை !
அழுக்குகளை மிதித்தாலும்!
தேய்மானம் ஆகா தன்மானமுண்டுனக்கு,!
உள்ளுணர்வு அதட்டி சொன்னாலும் பெண்மையின் !
காதலை துணிந்து கேட்கும் தன்னம்பிக்கை!
உண்டு எல்லா ஆணுக்கும்,!
விழுக்காடுகளில் தான் இருக்கிறது வாழ்க்கை!
முறை என்றாலும் பெண்ணியம் உண்டு அதில்!
தெய்வீக அன்புண்டு எல்லா பெண்ணிற்கும்,!
கழிப்பறையில் கூட அவதிப்பட்டு!
நிற்கும் இந்த இனத்திற்கு இந்த உலகத்தில்!
ஏதெனும் அடையாளம் விற்கப்படுகிறதா?
காவிரிக்கரையோன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.