அருகிலிருந்தவர்!
அணு ஒப்பந்தம் பற்றியும்!
ஆட்சி மாற்றம் பற்றியும்!
பக்கம் பக்கமாகப்!
பேசிக் கொண்டிருந்தபொழுது!
கவனத்தை ஈர்த்தது!
கனத்த குரலொன்று.!
பரபரப்பான பேருந்து நிலையத்தில்!
பார்ப்பவர்கள் இடமெல்லாம்!
தண்ணீர் வேண்டுமா!
தண்ணீர் வேண்டுமாவென்றுக்!
கூவிக் கூவி விற்றபடி!
பாவி ஏழைச் சிறுவன்!
பசிக்காக உழைத்தான்.!
கல்வியென்ற ஒன்றை!
கண்டிருப்பானா இவன்?!
அணு ஒப்பந்தமும்!
ஆட்சி மாற்றமும்!
பற்றிய எந்தக் கவலையும்!
மாற்றிடுமா இவன் வாழ்வை?!
புறப்பட்ட பேருந்து மெதுவாக!
பேருந்து நிலையத்தைவிட்டு!
வெளியேறிய பொழுதும்!
விழியகற்றாது பார்த்துக்!
கொண்டே இருந்தேன் அவனை!
கண்கள் அயர்ந்து!
தண்ணீர் தாகத்தில்!
தொண்டை வறண்டு!
மயக்கமுற்று விழுந்தான் என்!
மண்ணின் மைந்தன்.!
- ஒளியவன்
ஒளியவன்