01.!
சம்பவங்கள்!
-------------------!
இரவிலேயே!
நடந்து முடிந்து விடுகின்றன!
முக்கிய நிகழ்வுகள் எதுவும்.!
விழித்த பொழுதோ!
அல்லது விடிந்த வேளையிலேயே!
அறிய முடிகிறது!
நடந்தவைகளை.!
மனைவி எழுப்பி சொல்லியே!
தெரியும்!
முன்னால் முதல்வர்!
எம்,ஜி,ராமச்சந்திரன் மறைவு.!
முன்னால் பிரதமர் ராஜிவின்!
படுகொலையும் அவ்வாறே!
யாரோ கூறியதாக நினைவு.!
அலுவலகத்திலிருந்து வந்த!
அவசர அழைப்பே தெரிய செய்தது!
நடு இரவில் கலைஞர்!
கைது செய்த விவரம்.!
இப்படியே நிகழ்ந்தது!
பின்னர் தெரிந்தது!
எதிர் வீட்டு பாட்டியின்!
இயற்கை மரணம்.!
!
02.!
மெளனி!
-------------!
அதிகாலை ஆறு மணிக்கு!
வீடு தேடி வந்தவர்களுக்காக!
தூக்க்த்தை ரத்து செய்து!
எழுந்தேன்.!
குளிக்கும்போது!
கூப்பிடும் குரல் கேட்டு!
முழுமையாய் குளியாமல்!
வெளியே வருகை.!
சாப்பிடும் வேளை!
சொந்தம் வர!
அரைவயிறு நிரப்பி!
அவசரமாய் முடிப்பு.!
ந்டக்கையிலே!
கடந்து போனவனுக்காக!
கைகளை நீட்டவில்லை.!
பேருந்தில்!
பக்கத்தில் அமர்ந்தவனுக்காக்!
உடல் கால்பாகமய்!
ஒடுக்கப்பட்டது.!
என் பிரச்சனைகளே!
என்னால் தீர்க்கப்படாத நிலையில்!
வந்தவர்கள் சிக்கல்களைக் கேட்க!
மெளனியானேன்.!
எனக்காக வாழ!
எத்தனிக்கும் வேளையிலெல்லாம்!
விட்டுக்கொடுக்க் வேண்டியுள்ளது!
யாருக்காகவோ.!
03.!
பந்தம்!
-------------!
பஞ்சாயத்துக் கூட்டவில்லை!
வேண்டியவற்றை பேசி தீர்த்தோம்!
சரியாக பிரித்துக் கொள்ளப் பட்டது!
உன்னோடு அப்பாவும்!
என்னோடு அம்மாவும்!
பிரிந்து செல்கையில்!
தூரம் கடந்து!
எதேச்சையாக!
திரும்பிப் பார்க்கிறோம்!
ஒரே கணத்தில்!
நீயும் நானும்
பொன்.குமார்