சில குறிப்புகள்!
-----------------!
!
நாளெல்லாம்!
ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு!
மாலைக்குள் வாடிப் போகிறது!
பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின்!
பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்!
சில குழந்தைகளும்!
-----!
!
வாயில் முழுதும் செருப்புகள்!
தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம்!
அனாவசியமாக சிரிக்கவில்லை!
கதவைத் திறக்கையிலெல்லாம்!
என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம்!
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்!
ஞாயிற்றுக்கிழமையில் இறந்து போன!
பக்கத்து ஃப்ளாட்டு யாரோ!
சாந்தி அடைந்து கொள்ளட்டும்!
-----!
!
நான்கு நாட்கள்!
கொடியில் கிடந்தும்!
சோகமான பிசுபிசுப்பைத் தருகின்றன!
சூரியனைப் பார்க்காமல்!
உலர பயிற்றுவிக்கப்பட்ட!
துணிமணிகள்!
!
-----!
!
என் பூஜையறைக்கு!
கீழேயும் மேலேயும்!
கழிப்பறைகள் இருக்கலாம்!
கான்க்ரீட் கடவுள்!
காக்க காக்க!
!
-----!
!
தனித்த பெரிய!
சுதந்திரமான வீடுகளில்!
குழந்தைகளின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
உயர்ந்த பெரிய!
அப்பார்ட்மெண்ட்களில்!
பெரியவர்களின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
-எம்.அரவிந்தன்
எம்.அரவிந்தன்