அதிசயப்படவோ!
அல்லது!
ஆச்சரியப்படவோ!
இங்கு...!
ஏதுவுமே இல்லை!
எல்லாம் என்றென்றும்!
வழமைபோலவே.!
தலைகுத்தாக விழுந்த!
பச்சைக்குழந்தைபோல்!
அதர்மத்தின் வாசலில் வைத்து!
மனிதத்தின் அடையாளம்!
உடைக்கப்பட்டிருக்கும்.!
சுயஉரிமைகள்!
பறிக்கப்பட்டிருக்கும்.!
இரத்தத்தின் நிறம் சிவப்பு!
இதை...!
பலதடவைகள்!
உறுதிப்படுத்தியபின்பும்!
மீண்டும் மீண்டும்!
எங்களின்மீது!
இரத்தப் பரிசோதனைகள் தொடரும்...!!
எப்போதும்போலவே!
அப்போதும்...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!
அவர்களுக்கு உன்னைப்பற்றி!
என்ன கவலை..?!
எப்போதுமே...!
அவர்கள் அப்படித்தான்...!!
உன் உணர்வுகள்!
மனிதரால் மதிக்கப்படும்வரை!
மறுக்கப்பட்ட உரிமைகள்!
மறுபடி உருவாகும்வரை!
விழிரெண்டில் விடியல்!
தெரியும் வரை...!
உனக்காக...!
நீதான் போராடவேண்டும்...!!
அப்போதும்கூட...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!!!
!
த.சரீஷ்!
05.07.2006 பாரீஸ்

த.சரீஷ்