மாசாய்… வழியில்... நல்ல தாய் - செண்பக ஜெகதீசன்

Photo by Tengyart on Unsplash

மாசாய்…!
காசிருந்தால் ஒருபேச்சு, !
இல்லையெனில் ஒருபேச்சு, !
இந்த மனிதனுக்கு என்னாச்சு, !
இவன் கண்டுபிடித்தான் காசு. !
இது ஆகிவிட்டது !
இனத்துக்கே மாசு…!!
இந்தக் கடையில்…!
காசினி என்பது !
காலதேவன் நடத்தும் !
கள்ளுக் கடைதான், !
இங்கு !
ஓசியில் குடிக்கவும் !
காசுமிகக் குறைவாய்க் கொடுத்து !
ஆசை மிகுதியில் !
அதிகம் குடிக்கவும் !
காத்திருப்பவர்கள்தான் - !
மனிதர்கள்…! !
கற்றாலும்…!
கற்றுக்கொள்ள !
கலாசாலைகள் இல்லாமலே !
கற்றுக்கொள்கின்றன, !
காட்டு மிருகங்கள் !
அதனதன் !
கலைகளை மட்டும், !
கலைபல !
கற்கிறான் மனிதன் !
கலாசாலையில், !
ஆனாலும் !
கற்காலத்தைத்தான் !
காட்டுகிறது அவன் பண்பு…! !
கல்லாய்…!
கல்லில் வடித்த சிலையினிலே !
மனிதன் !
கடவுளைக் காட்டுகிறான், !
கடவுள் படைத்த மனிதன் !
ஏனோ !
கல்லாய் மாறிவிட்டான்…!!
வழியில்...!
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடியில் பார்த்தபோது !
கண்டது -!
களவாடப்பட்டது !
என் !
இளமைதான்...!!
அந்தநாள்…!
காலையில் !
கண்விழித்து எழுந்தால்தான் !
மனிதனுக்கு அது !
மறுநாள், !
அல்லது அது !
அவன் நினைவு நாள்…!!
நல்ல தாய்.!
நல்லதாய் !
நாகரீகமானதாய் !
தாகம் தீர்ப்பதாய் !
தரித்திரம் போக்குவதாய் !
சரித்திரம் படைப்பதாய் !
சாதாரணமாய் இல்லாததாய் !
வேதனை தீர்ப்பதாய் !
வெற்றியைத் தருவதாய் !
சுற்றம் சேர்ப்பதாய் !
சூழ்ச்சி அறுப்பதாய் !
வாழ்த்தி நிற்பதாய் !
வரம்பல தருவதாய் !
சிரமம் குறைப்பதாய் !
சீரெலாம் செய்வதாய் !
பாரெலாம் உயர்வதாய் !
பலனை எதிர்பாராததாய் !
உலகுக்கு உதவுவதாய் !
உயிரைத் தருவதாய் !
உள்ளவள் தாய் - !
உன்னைப் பெற்ற தாய்...!!
!
--செண்பக ஜெகதீசன்…!
()
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.