பெருவிசும்பின் தொன்மையின்கீழ் !
மரத்தூரிகைகள் உலையும் காற்றில் !
மரணத்தின் கேள்வியை விட !
மரணித்தவர்களின் கேள்விகள் வலுக்கின்றன... !
கையறு நிலையின் காலம் !
அதோ என் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. !
இவ்வெளியோ மண்ணோ எனதல்ல. !
நான் உங்களைக் கேட்க விரும்புவதெல்லாம்: !
என் கால் நனைத்த என்கடலின் மண்துகள்கள் !
தட்டிப்பிரிந்த அக்கடைசி நாளில் !
கடல் என்னைப்பார்த்துச் சிரித்ததா? !
ஐப்பசி 2002 !
-தேவஅபிரா puvanendran@home.nl !
**** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன
தேவஅபிரா