விடிந்தும் விடியாத காலைப்பொழுது!
நிலவன்!
இரவுக்காவல் முடித்திருந்தான்...!
விண்வெளிகள்!
வெளிச்சத்தின் வீரியம் குறைத்துக்கொண்டன...!
வானம் அதிசயித்தது!
பகலம் இருட்டைத் தின்றான்!
பகல் மிச்சத்தில் பனித்துளி!
இறகுவாங்கிப் பிறந்தது!
மொட்டுகள்!
புல்வெளி திறந்து!
அந்தரங்கள் காட்டின...!
அல்லி மூடிய சிரிப்பை!
தாமரை தாரைவாங்கிக் கொண்டது...!
காற்று!
எல்லாப்பக்கமும் கலவியோடி!
அயர்ந்துகிடந்தது...!
மரங்களும் செடிகளும் கொடிகளும்!
வேர் நிறுத்தி மெல்ல தலையசைத்தன!
தென்றல் அப்பொழுது தான்!
நந்தவனப் பூக்களின்!
நலம் விசாரித்துத் திரும்ப!
தெருக்களின் நான்கு எல்லையும்!
ஆக்கிரமித்து, தன்!
கட்டுக்குள் வைத்து மணத்தது!
வயல்களில் பாய்ந்து!
வடிகால் வந்த நீர்!
வேர்களின் விசால வரவேற்பை!
வெளியெங்கும் சொன்னது.!
தாளம் தப்பியக் குரலில் தவளை!
தன் இருப்பிடம் சொன்னது பாம்புக்கு!
கோக்கு குளக்கரையோரம்!
குத்தவச்சது மீனுக்கு!
ஏரியில் நரியிடம் முகம்காட்டி!
நண்டு வளைக்குள் போனது!
தாய்மடி முட்டுவதும்!
தள்ளித்துள்ளிக் குதித்தாடிவரும்!
பசுவோடு கன்றுக்குட்டி...!
மார்க்காம்பு கொடுக்க மறுத்தது குட்டிக்கு –ஆடு!
நாய் குரைக்கக் கேட்டு...!
கோழி இறகுக்குள் காத்தது, தன்!
குஞ்சுகளை வல்லூறு வருவதாய்!
சேவல் உரைத்தது செவிலிகளில்...!
கிழக்கே!
கடளைக்குக் களையெடுக்கக் கருப்பாயி வாரேன்னா!!
இருபதாளு வரச்சொல்லு இண்ணிக்கே முடிச்சிடலாம்!
அம்மா –அக்காவுக்கு.!
வாழை குலைதள்ளும் காலம்!
கீழ்கட்டை வெட்டி மண்ணணைக்க ஆள்கூப்பிடு!
அப்பா –அண்ணனுக்கு.!
ஆடிப் பெருக்கை முன்னிட்டு!
அம்மன் கோயில் தேர்த்திருவிழா!
ஊர்ப்பெரியவர்கள் கூடி முடிவு.!
தண்டோராச் செய்தி.!
ஒருவாரத்திற்கு முன்பே!
உறவுகளுக்குச் சொல்லியனுப்பு!
திருவிழாவுக்கு வந்திருந்து!
தின்னு குடிச்சிப் போக...!
தாத்தா - அப்பாவுக்கு.!
விடியும் பொழுது - இது திருச்சி வானொலி நிலையம்!
ஆணித்திங்கள் இருபதாம் நாள்!
வளரும் வேளாண்மை பற்றி!
தஞ்சை மாவட்ட விரிவாக்கப் பணியாளர்!
பஞ்சாயத்து ஒலிபெருக்கி... !
சோறு எழுத்து வர!
சுடலைமுத்துக்கு சொல்லிடுறேன்!
பழஞ்சோறும்!
அடைமாங்காயும் மோரும் மிளகாயும்!
வடக்கு வயலுக்கு வந்தாப் போதும்!
எட்டுரெண்டு பதினாறாளுக்கு!
கரும்புக்கு வடம்பிடிக்க கலப்பை எடுத்துப்போறேன்!
சித்தப்பா - சித்தி!
இந்த பால மட்டும்!
குடிச்சிடடாச் செல்லம்!
பாட்டி – எனக்கு !
அழுது அடம் பிடிச்சா!
பூம்பூம் மாட்டுக் காரன்கிட்ட!
புடிச்சிக் கொடுப்பதாய்!
அத்தை அறைக்குள்ளிருந்து... !
ஈருழவு மழைபொழிஞ்சதால!
கடைமடை வரை நீர்கனத்திருக்கு!
கிராமவாசி உழவரிடம். !
இப்படிச் செல்லமாய் நானிருந்த!
சிறப்பெல்லாம் அக்காலம்...!
சிங்காரமாய் ஊரிருந்த!
பெருமையெல்லாம் அக்காலம்...!
கூட்டாய்க் குடும்பமிருந்த!
குலப்பாசமெல்லாம் அக்காலம்...!
நலமாய் மக்களிருந்த!
நன்னில நாடும் அக்காலம்.!
!
-சின்ன பாரதி