வயதுமோ மூன்றில் அன்று!
வந்தவர் கொடுத்த பாலால்!
வினையது பலனும் கண்டு!
விதைத்தவன் பாடல் கேட்டு!
தினமது கேணிக்கட்டில்!
திருவருள் கிட்டும் எண்ணி!
பலனது பாலும் கிட்டா!
பாதியாய் வயதும் போச்சு.!
பூட்டிய கதவை அன்று!
பாட்டிலே திறந்தார் கேட்டு!
பூட்டியே நானும் வீட்டை!
றோட்டிலே நின்று பாட!
கேட்டுமே போவோர் சொன்ன!
கேலிகள் பலவும் கேட்டும்!
நீட்டியே பாடி நானும்!
நிற்கிறேன் மருந்து வாங்க.!
ஆற்றிலே போட்டதெல்லாம்!
குளத்திலே எடுத்தார் கேட்டு!
நேற்றுமே வழியில் போட்ட!
என் பணம் தேடி நானும்!
முற்றுமே கிடைக்கும் எண்ணி!
வங்கியைக் கண்டபோது!
போட்டவன் எனது காட்டும்!
திரும்பியே வரவும் காணோம்.!
நரிகளைப் பரிகளாக்கி!
நற்பலன் பெற்றார் கேட்டு!
மருவியே எனது காரை!
மாற்றிட நினைத்த போது!
சுருதிகள் ஏதுமற்று!
சுத்தமாய் முடக்கம் காண!
கருதியே வேலை செல்லா!
காண்பலன் வேலை போச்சு.!
ஞானத்தைத் தேடி நானும்!
நாட்பல அலைதல் பார்த்தும்!
ஞானமும் என்னைக் காண!
நாணியே ஒதுங்கிக் கொள்ள!
ஓரமாய் தலையிருந்த!
ஒருசில முடியும் போக!
யாருமே தேடா நானும்!
நடக்கிறேன் வல்லை நோக்கி.!
-- த.சு.மணியம்

த.சு.மணியம்