நீ யாராகிலும் இருக்கலாம்!
உன் எண்ணங்கள் ...!
உன் பழக்கங்கள் ...!
உன் கலாச்சாரம் ...!
வேறாயிருக்க கூடும் !!
என் பயணம் முழுவதும் ...!
நீ வேண்டும் !!
உன் ஜாதி , மதம் , மொழி பற்றி!
எனக்குக் கவலையில்லை!
என் பயணம் ...!
உன்னால் இனிமையாக வேண்டும்!
அவ்வளவுதான்!!
எனக்காக நீயும் ...!
உனக்காக நானும் ...!
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !!
காத்திருந்து உணவுண்ணும்!
கண்ணியம் !!
நீ எனக்குமாய் ...!
நான் உனக்குமாய் ...!
தவணை முறை பாதுகாப்புகள் !!
தங்குகின்ற இடம் ...!
யாருக்கும் நிரந்தரமில்லை!!
நட்பு நிரந்தரமாகட்டும் !!
பேச்சு, சிரிப்பு, அன்பு!
எல்லாம் ...!
பொய்யின்றி கடைசிவரை !!
என் பயணத்தின்!
இறுதிவரையிலும் இப்படியே ...!
இனிய துணையாக!
அமைந்துவிட்டால் ...!
அழகாகவே இருக்ககூடும்!
இரயில்பயணமும், வாழ்க்கையும் !!
- ரசிகவ் ஞானியார்!
!
-- !
K.Gnaniyar!
Dubai
ரசிகவ் ஞானியார்