தினம்தோறும் !
திரளாக செல்கிறோம்!
திரவியதேசத்திற்கு!
சொல்லித்தான் பிரிகிறோம்!
எங்களின் வீட்டை!
மீண்டு வருவோம் என!
மிதமான நம்பிக்கையில்!
சமுத்திரத்தின் நிச்சலனத்தினூடே!
கரைசேரும் கனவில்!
இருண்மையின் தழுவலில்!
எங்களின் பயணம்!
அலைகளின் விழிம்பில்!
எங்களின் அழுகையின் நீரும்!
இருண்மையின் விலகல்வேண்டி!
தொடர்கிறது!
தொடுவானமாய்!
எங்களின் தாகம்!!
கவிஆக்கம்: நீ தீ
நீதீ