தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் கண்களில்

சந்திரவதனா
அருவி பாய்ந்தது!
நீ உன் காதலை!
அவளிடம் தெளித்த போது.!
இரவு!
பகலை விழுங்கியது!
காதலை நிராகரித்த!
உன் கடிதம்!
என் சந்தோசத்தை!
விழுங்கியது போல்.!
நெஞ்சில்!
சுரீரென்று வலித்தது!
உன் காதல் அம்பு!
என் நண்பியைத்!
துளைத்த போது

விழி! எழு! தாயே

நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன்- !
இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே! !
எத்தனை புகழ்வளர்த்தாயே - உன் !
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில் !
நெஞ்சினைக் கொள்ளைகொண்டாயே! - முன் !
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை? !
அய்யகோ! இன்றைய நிலவரம்! - மனச் !
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன்? அடடா! !
சூழ்ந்ததே இனமதக் கலவரம்! !
புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப் !
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி !
இத்தனைப் பெருமைகள் இருந்தும் உன்பிள்ளைகள் !
இன்னமும் நலிவுறல் முறையா? - மத !
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால் !
உயிர்ப்பலி யாவதும் சரியா? -இவை !
ஆத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து) !
ஆடுதல் இனியும் காண்கிலையா? !
விடுதலை பெற்றநள்ளிரவிலே மௌனமாய் !
விரதம் இருந்ததேன் காந்தி? - மதப் !
படுகொலை தொடர்வதும் பாரதர் மடிவதும் !
பார்த்துத் தொலைந்ததோ சாந்தி? - இனி !
ஆடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை !
ஆடிப்பதோ இடிப்பதோ தாயே! - ஒரு !
முடிவிலையா?உன் மோனம் கலைந்திடு! !
மூர்க்கமாய் விழி! எழு! தாயே

தொழில்நுட்பம்

முத்தாசென் கண்ணா
செம்பருத்தியா வக்கிறது?!
சிவனக்கு ஆகாதே - என்ற!
கோயில் கிழவியிடம்!
எப்படி சொல்லி புரிய வைப்பது !
இன்று பிரதோஷத்திற்காக!
பரமசிவனுக்குப்!
பாக்கெட் பாலில்தான்!
அபிஷேகம் நடத்தினோம் என்று!
இப்படிக்கு!
முத்தாசென் கண்ணா

வெடிகள் வாங்க‌ வியத்தகு காரணங்க‌ள்

மு. பழனியப்பன்
வெடிகள் வாங்க‌!
வியத்தகு காரணங்க‌ள்!
--------------------------------------!
சொந்தங்கள் மடிய!
தேசநலன் கருதி!
சிறைக் கம்பிகளுக்குப்!
பின்னால் இருந்துப்!
பற்ற வைக்க!
இந்தத் தீபாவளிக்கு!
புஸ்வானத்தைக் கட்டாயம்!
வாங்குங்கள்!
சம்சாரம் முகம் கூடத்!
தெரியாமல்!
மின்சாரம் படுத்தும் பாட்டில்!
மத்தாப்பு கொளுத்த மறந்துவிடாதீர்கள்!
விலைவாசி ஏறி!
பொருளாதாரம் வீழ்ந்து!
வாங்குவோர் சக்தி குறைந்து!
நிற்கும் இந்தவேளையில்!
சாட்டையைக் கொளுத்தி வீசுங்கள்!
அதுவே சரியான தீர்வு!
அணுகுண்டு செய்ய!
அனுமதி நமக்கு இல்லை!
எனவே நாம் வெடிக்கத்!
தக்கது வெங்காய வெடியே!
அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
!
சரவெடிகள்!
மழையில் நனைந்த!
மனிதச் சங்கிலிகள் போல் கலைந்தும்!
கலையாமலும் மோசம் செய்யலாம்.!
தனிவெடியே நல்லது.!
புவி வெப்பம் அதிகமாகும்!
ஒலி மாசு அதிர்ந்து விடும்!
அதனால் புகையில்லா!
ஊதுவத்தியே!
இந்தத் தீபாவளிக்குப் போதும்!
புகைந்தால் அதற்கும்!
அபராதம் கட்ட நேரிடும்!
துப்பாக்கிகள் தேவையில்லை!
அவை இலக்(ங்)கை(யை)க்!
குறிவைத்து விடலாம்.!
சுத்தியல் தேவையில்லை!
அது கட்சிச் சின்னம் ஆகிவிட்டது.!
பொட்டுவெடிகளைப் பொசுக்க!
வெறுங்கல்லே போதும்!
கற்காலம் நோக்கி!
நாம்!
பயணிக்கிறோம்!
என்பதற்கு இதுவே சாட்சி!
வெடிகளை வாங்க!
வியத்தகு காரணங்கள் இவை.!
-மு. பழனியப்பன்!
------------------------------!
M.Palaniappan

தூயவள்

வல்வை சுஜேன்
தூயவள் எனக்கோர்!
தூது விட்டாள்!
கலந்தேன் காதலில்!
காமுறவில்லை !
என் வாசல் அழைத்து!
வாழ்வளித்தேன்!
வசந்த ஊஞ்சலில்!
ஆடுகிறாள் !
வஞ்சியிவள் சொந்தம் என்று!
அந்தி நேரப் பொழுதெல்லாம்!
யார் யாரோ இவளிடத்தில்!
இதழோடு இதழ் சேர்த்து!
இழந் தேன் மது அருந்தி!
இன்ப ராகம் பாடுகிறார்!
யார் இவர்கள் !
நாலு கால் பந்தலிட்டு!
நான் வைத்த மல்லிகையே!
எத்தனை உறவுகள் !
இறக்கை விரிக்கின்றன!
உன்னிடத்தில்!
மலர் செண்டாக நீ இருக்க!
வண்டாக நான் இல்லையென!
வருந்துகிறேன் !
வெள்ளை மலரே – நீ!
என்றும் தூயவளே!
நானும்!
உன் நாளாந்த காதலனே

அது

இளந்திரையன்
சிறு ஒளி !
சிறு துகள் விளக்கம் !
கால காலமான !
காத்திருப்பு !
வழி அளந்த !
விசுபரூபம் !
வரட்சி செழுமை !
வாழ்க்கையாய் !
பிரபஞ்சத்தின் !
கொடியிடைத் !
தொடர்பு !
பொருள் !
அறிந்த !
அறியத் துடிக்கும் !
எத்தனம் !
அறிய முடியாத !
அயர்வு !
மனித வாழ்வு !
மண்டியிட்ட !
கணங்கள் !
வியாபிதமாய் !
அறிந்தும் !
அறியாமலும்... !
-இளந்திரையன்

நிழலின் அருமை

ஜெ.நம்பிராஜன்
ஆட்டு மயிர் வாடையுடன் வந்த !
அழுக்குச் சட்டைச்சிறுவன் !
மேசையைக் கழுவிய தண்ணீரில் சிறிதே !
மேலேயும் தெறிக்கிறான் !
தண்ணீர் தருபவன் !
தன் விரல் அழுக்கையும் !
சேர்த்துத் தருகிறான் !
ஆர்டர் செய்து !
அரை மணி கழித்து வரும் !
இட்லியோ அரைவேக்காடு !
அன்பளிப்பை வாங்க மறுத்த !
சிப்பந்தி சொல்கிறான், !
ஒரு ரூபாய்க்கு !
ஒரு சிகரெட் கூட கிடைக்காது !
மனைவியின் அருமை!
ஓட்டலில் புரியும்!
-ஜெ.நம்பிராஜன்

கலங்கும் பார்வைகள்

நவஜோதி ஜோகரட்னம்
சிவக்கின்ற, கலங்குகின்ற, குழம்புகின்ற!
பார்வைகள் அவை!
ஆகாயத்தின் அலட்சிய விரிவு!
அடிவானத்தை தேடும் அலைவு!
சாம்பல் நிறைந்த சலனம்!
தேடும் நீலமேகம்;!
தேன்நிலவு!
அமைதியற்ற சஞ்சலம்!
இதுவரை சந்திக்காத சத்தங்கள்!
சிலிர்ப்பூட்டி கூச்சலிட வைக்கும்!
கட்டிட உச்சிகள்!
தீவிர வெறியோடு!
இரை உண்ணத் துடிக்கும்!
குளிர்காற்றில் நெளியும் மரங்கள்!
விசைக் காற்றில் பிசுபிசுக்கும் -அவை!
கண்களிலிருந்து குருதி ஒழுகுவதுபோல்!
செந்தணலாய் சிந்தும்!
உணர்வுகள் துடிப்புகள்!
வெறும் சதைத்துணுக்குகளாகும்!
மின்னல்களால் உச்சந்தலை!
வெப்பி வெடிக்கும்!
மரணத்தின் குரூரம்!
மரணத்தின் கொடுமை!
மரணத்தின் மௌனம்!
மரணத்தின் வஞ்சம்!
புகைந்து திணறவைக்கும்!
மரணங்கள் கருகி!
புதுமலர்போல் வாழ்வு!
பிம்பமாய்த் தெரியும்!
நொறுங்கும்!
நரம்புகளின் உட்புறத்தில்!
!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
25.2.2009

முறியடிப்போம் முன்னேறுவோம்

லலிதாசுந்தர்
சூறாவளி சுழலில் மரங்கள்!
துவண்டுபோவதைப் போல்!
பொருளாதார சுழலில் நிறுவனங்கள்!
துவண்டாலும்!
மரங்களின் கிளைகளில் தளிர்கள்!
துளிர்விடும் என்பதற்கு சாட்சி!
வேலைவாய்ப்பு முகாம்கள்.!
வாழ்க்கை சுழற்சியில் இழப்பும் ஏற்பும்!
உறுதி என்பதை உணர்த்தும் சூழல்.!
கல்வியும் திறமையும் மூளையின்!
உயிர்செல்கள்!
புதுபிக்கபுதுபிக்க அபாரசக்தி கொல்லும்.!
துவண்டுபோகமல்!
புதுபித்துக் கொள்வோம்.!
முறிடிப்போம் இந்த!
பொருளாதார சூழலை!
முன்னேறிடுவோம்!
புதியனவற்றை நோக்கி

எது கவிதை ?

நிர்வாணி
கவிதை !!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டதை நீயும் நானும்!
புரிந்துகொள்வது ?!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே!
புரிந்தது ?!
எது கவிதை ?!
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்!
என்னை உறுத்திக் கொண்டால்!
அது கவிதை ?!
எது கவிதை ?!
சொல்லத் தெரியவில்லை!
சொல்ல அனுபவமில்லை!
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்!
நீயும் நானும் இன்றைய இன்பமான!
பொழுதுகளை இரைமீட்போம்