கவிதை !!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டதை நீயும் நானும்!
புரிந்துகொள்வது ?!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே!
புரிந்தது ?!
எது கவிதை ?!
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்!
என்னை உறுத்திக் கொண்டால்!
அது கவிதை ?!
எது கவிதை ?!
சொல்லத் தெரியவில்லை!
சொல்ல அனுபவமில்லை!
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்!
நீயும் நானும் இன்றைய இன்பமான!
பொழுதுகளை இரைமீட்போம்

நிர்வாணி