சிவக்கின்ற, கலங்குகின்ற, குழம்புகின்ற!
பார்வைகள் அவை!
ஆகாயத்தின் அலட்சிய விரிவு!
அடிவானத்தை தேடும் அலைவு!
சாம்பல் நிறைந்த சலனம்!
தேடும் நீலமேகம்;!
தேன்நிலவு!
அமைதியற்ற சஞ்சலம்!
இதுவரை சந்திக்காத சத்தங்கள்!
சிலிர்ப்பூட்டி கூச்சலிட வைக்கும்!
கட்டிட உச்சிகள்!
தீவிர வெறியோடு!
இரை உண்ணத் துடிக்கும்!
குளிர்காற்றில் நெளியும் மரங்கள்!
விசைக் காற்றில் பிசுபிசுக்கும் -அவை!
கண்களிலிருந்து குருதி ஒழுகுவதுபோல்!
செந்தணலாய் சிந்தும்!
உணர்வுகள் துடிப்புகள்!
வெறும் சதைத்துணுக்குகளாகும்!
மின்னல்களால் உச்சந்தலை!
வெப்பி வெடிக்கும்!
மரணத்தின் குரூரம்!
மரணத்தின் கொடுமை!
மரணத்தின் மௌனம்!
மரணத்தின் வஞ்சம்!
புகைந்து திணறவைக்கும்!
மரணங்கள் கருகி!
புதுமலர்போல் வாழ்வு!
பிம்பமாய்த் தெரியும்!
நொறுங்கும்!
நரம்புகளின் உட்புறத்தில்!
!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
25.2.2009

நவஜோதி ஜோகரட்னம்