தூயவள் எனக்கோர்!
தூது விட்டாள்!
கலந்தேன் காதலில்!
காமுறவில்லை !
என் வாசல் அழைத்து!
வாழ்வளித்தேன்!
வசந்த ஊஞ்சலில்!
ஆடுகிறாள் !
வஞ்சியிவள் சொந்தம் என்று!
அந்தி நேரப் பொழுதெல்லாம்!
யார் யாரோ இவளிடத்தில்!
இதழோடு இதழ் சேர்த்து!
இழந் தேன் மது அருந்தி!
இன்ப ராகம் பாடுகிறார்!
யார் இவர்கள் !
நாலு கால் பந்தலிட்டு!
நான் வைத்த மல்லிகையே!
எத்தனை உறவுகள் !
இறக்கை விரிக்கின்றன!
உன்னிடத்தில்!
மலர் செண்டாக நீ இருக்க!
வண்டாக நான் இல்லையென!
வருந்துகிறேன் !
வெள்ளை மலரே – நீ!
என்றும் தூயவளே!
நானும்!
உன் நாளாந்த காதலனே
வல்வை சுஜேன்