1. உடன்பிறப்பு!
மருத்துவச்சிகளால்!
அறுத்தெறிய முடிவதில்லை!
உடன் பிறந்த!
சாதியின் தொப்புள்க்கொடியை!
!
2. அஃறிணை தேவதைகள்!
பூவிதழ் நெய்த இருக்கைகளில்!
செந்தேன் சிந்தும் விருந்து!
வானவில் தைத்த சிறகுகளில்!
வானில் துய்க்கும் புணர்ச்சி - இவை!
யாவுமடங்கிய வாழ்க்கை!
எட்டுப்பகலுக்குத் தான் என்றாலும்!
பட்டினிச் சாவுகளில்லை!
பட்டாம்பூச்சிகளிடம்!
!
3. முதல் பயணத்தில்…!
துண்டுச்சீட்டு கிழித்து!
மை கசியும் பேனாவில் பெயரெழுதி!
வயிற்றில் இறுக்கிய நூலின்!
வலியைச் சுமந்தபடி!
விரல்களிலிருந்து விடுதலையான!
பட்டாம்பூச்சி பற்றிய!
பால்ய நினைவுகள் பறந்துகொண்டிருந்தன!
என் விமானத்திற்கு மேலே!
!
4. சாவிக்கொத்து!
நகரத்து வீடுகளின்!
சாவிக்கொத்துகள் சொல்லும்!
திருடர்களின் பலம்!
!
5. நிழல்!
நின்றுகொண்டிருக்கும்!
பேருந்திற்கடியில்!
ஓய்வெடுக்கிறது!
ஓடிக் களைத்த!
நாய்!
!
6.அழுக்கு!
வீடு சென்று!
விடுமுறை கழித்து!
கல்லூரி திரும்பிய!
சில நாட்களுக்குள்ளாக!
அழுக்கேறிவிடுகிறது!
அம்மா வெளுத்த!
உடைகளோடு ‘உள்ளமும்’
அ. விஜயபாரதி