மாறாத சுவடுகளாக!
அங்கும்!
இங்கும்!
சிலசமயங்களில்!
மறக்கமுடியாமல் அகலவிரிந்தாடும்!
துயரங்களாக...!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
அடுத்தது என்ன...?!
என்ற கேள்விக்குறியோடு!
அவர்களின்!
ஆட்டத்தின் போது!
எங்களுக்கு...!
ஏக்கங்கள் கலந்த!
வழமையான காத்திருப்புகள்!
வளர்ந்துகொண்டே செல்கின்றது.!
வீரம்கொண்ட உலக நாடுகளின்!
விளையாட்டு!
சிலவேளைகளில்!
விளையாட்டுத்தனமாகவும்!
பலவேளைகளில்!
கவலைக்குரிய விடயமாகவும்!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
இப்போது நாங்கள்!
நினைப்பதெல்லாம்!
இனி...!
ஆடுகளம் எது என்பதும்!
நடுவர்கள் யார் என்பதும்தான்!
எதிரணியில்!
ஆட்டக்காரர்கள் யார் என்பதில்!
எமக்கு எப்போம்!
சந்தேகம் உண்டாவதே இல்லை...!!
இன்றைய ஆட்டம்!
நல்ல விறுவிறுப்பு என்று!
சொல்லிக்கொண்டே!
தொடர்ந்தும்!
அவன் அதே...!
உலகக்கிண்ண உதைபந்தாட்டம் பற்றி!
பேசிக்கொண்டிருக்கின்றான்.!
நான்...!
மனிதர்களால் ஒருபோதும் ஆடமுடியாத!
மகிந்தரின் சிந்தனைப்படி...!
வங்காலையிலும்!
அல்லைப்பிட்டியிலும் ஆடிய!
அந்த ஆட்டம் பற்றி!
சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்...!!
த.சரீஷ்!
20.06.2006 பாரீஸ்

த.சரீஷ்