தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அறிவியலும் முன்னேற்றமும்

தமிழ்நம்பி
ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி!
ஒழிச்சல் இன்றி!
களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல!
கருவி கண்டோம்!!
குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்!
கொடுப்ப தற்கும்!
எளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்!
இன்று உண்டே! !
உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்!
உங்கள் ஐயம்!
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்!
உழவு செய்ய!
நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க!
நாட்டில் இன்று!
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய!
மண்ணுக் கேற்ற!
பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்!
பூச்சி கொல்ல!
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்!
வந்த திங்கே!!
செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி!
செய்துள் ளாரே!!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்!
நன்மை யுற்றோம்!!
விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே!
வியக்கும் வண்ணம்!
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்!
நோக்கில் ஒன்றி!!
எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்!
எல்லா நோய்க்கும்!
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை!
உணர்ந்தே உள்ளோம்!!
இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்!
இருந்தபோதும்!
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று!
செம்மை கெட்டும்!
ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்!
ஒழிந்து போக!
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற!
நோக்கில் ஆள்வோம்

உடைந்த நட்சத்திரம்

ஆதி பார்த்தீபன்
அந்த !
இருள்தோய்ந்த!
நிலவொளியில் !
விட்டில்களை !
வதம் செய்யும் !
முடிவொன்றை எடுத்திருந்தாய்!
நான் ஜனநாயகம் !
என்பதை உணரா !
சர்வாதிகாரி -நீ !
எனக்கான!
சுதந்திரத்தை !
மறுத்திருந்தாய்!
நமக்கான !
இன்பக் குவளை!
நிரம்பியிருந்தது!
அதிஷ்டங்களை !
பருகிவிட்டு !
துரதிஷ்டங்களை !
விட்டுச்சென்றாய் !
குவளையையும் மிச்சம் !
வைக்கவில்லை நீ !
முத்தம் தருகையில் !
விசேடமாகத் தெரிந்த !
உன் உதடுகளில் !
விஷமம் தடவப் !
பட்டிருந்தது !
மீண்டும் -நடுவானில் !
அந்த !
உடைந்த நட்சத்திரங்கள் !
நமக்கான !
இடைவெளியை !
மின்னியபடி

தீர்ந்து போனது காதல்

பாண்டித்துரை
கவி ஆக்கம்: “பாண்டித்துரை”!
!
திருமணத்திற்க்கு முன்!
எப்போதும் - எனை!
சுற்றும் உன் கண்கள்!
ஆ, தலை வலிக்குது!
என்னடா ஆச்சு என்னை விட!
வலியை நீ உணருகிறாய்!!
மணிக்கணக்காய் பேசுகிறாய்!
மௌனமான என்னிடம்!
எனை பார்த்தபின் உன்விடியல்.!
தேடி வருகிறாய்!
புரியாத மொழி பேசி!
பிறக்கிறாய்!
புதிதாய் தினமும்!
நான்இ நீ என சொல்லி!
இருபத்திநான்கு மணி நேரத்தை!
தினமும் இரட்டிப்பு ஆக்குகிறாய்!
!
திருமணத்திற்க்கு பின்!
உன் கண்கள்!
எதையோ தேடுகிறது!
எனை தவிர்க்க ஓடுகிறது!
மௌனமாக இருக்கிறாய்!
ஆ, தலை வலிக்குது!
காதில் வாங்காதவனாய்!
கண்மூடி கனவு காண்கிறாய்!
தினமும் கோபப் பார்வை!
திராவயமாய் உன் வார்தைகள்!
கடமைக்காக நீ வாங்கிய மல்லி!
காய்ந்து போய் கட்டில்மேல்!
விடிவதும் தெரிவதில்லை!
நீ வீட்டில் இருப்பதும்....!
!
கவி ஆக்கம்: “பாண்டித்துரை”

ஏழை வீட்டுச் செல்லம் நான்

கோகுலன். ஈழம்
ஏழை வீட்டுச்!
செல்லம் நான்.!
ஆசைப்பட்ட இடத்திற்க்கு!
அழைத்துப் போனதில்லை!
என்னை.!
ஒற்றை!
குழந்தை என்பதால்!
உணர்வு பின்னிய!
பாதுகாப்பு எனக்கு.!
அமாவாசைப்!
பின்னிராப்பொழுதில்!
அழுங்குப்பிடியில்!
இழுத்துச்செல்கிறார்கள்.!
நான்!
ஆசைப்பட்ட!
கிளிநொச்சி!
போகிறோம்!
நாங்கள் மட்டுமில்ல!
ஊரே ஓடி வருகுது.!
அமாவாசை இருட்டில்!
அக்கினித்துகழ்கள்!
எறிதலும்!
எரிதலுமாய்!
வீழ்ந்து சிதற.!
ஓடிவந்த தெருவை!
உயிரில்லா!
உறவுகள்!
ஊர்ப்பிணங்களாய்!
சிதறிப் போயின.!
எரிகற்களாய்!
வீழ்கின்றபோது!
நூறுபேராய் இறந்து!
பத்துப்பேராய்!
எழுகின்றோம்.!
இரண்டு பேர்மீது!
இருபதுபேர்!
ஏறி நடக்கிறார்கள்!
சைனாக்காரன் குண்டில்!
அப்பாவை இழந்தேன்!
இரசிய்க்கரன் குண்டில்!
அம்மாவை இழந்தேன்!
நான்...!
இந்தியக்காரன் குண்டில்!
முடமாகிப்போனேன்

உதட்டு வரிகள்

ரா. சொர்ண குமார்
உதட்டு வரிகள்!
கவிதைக்கு!
எத்தனை வரிகள்!
கட்டாயம் இரூக்க வேண்டும் ?!
கேள்விக்கு!
பதில் தெரியவில்லை...!
எண்ணிக்கொள்ளவா!
உன் உதட்டு வரிகளை ?!

என் டெஸ்க்டாப்

துளசி
கொஞ்ச நாள் சேகுவேரா!
அழகு தொப்பியும்!
குறுந்தாடியும்!
கொள்ளை கொண்ட நாள்கள் அவை!
அப்புறம் மாவோ!
கிறுகிறுக்க வைத்தவை!
அழுக்குக் காக்கியும்!
கூர்மைக் கண்ணும்!
கீழை மார்க்சியமும்.!
சிறிது நாள் மார்க்குவெஸ்!
சில நாள்கள் குந்தர் க்ராஸ்!
அப்புறம் சட்டென!
ஒரு நாள் பாரதி!
வீரக்கொம்பூன்றி!
செல்லச் செல்லம்மாளோடு.!
அன்னையும் அரவிந்தரும்!
அலங்கரித்தது!
பின்னொரு நாள்.!
சில நாள் சாமி!
சில நாள் கோயில்!
சில நாள் குடும்பம்!
அலங்கரித்த எவரும்!
அதிக நாள் நீடித்ததில்லை.!
எப்போதும்போல்!
சுகமாய் இருக்கிறது!
சுத்தமாய் இருக்கும்!
டெஸ்க்டாப்

என் இதயம் ஒரு புல்லாங்குழல்

ராம்ப்ரசாத், சென்னை
கண்டம் விட்டு கண்டம் பாயும்!
ஏவுகணைகளை ஓரவிழிப்பார்வைகளாக்கி!
என் மேல் செலுத்துவாய்,!
பார்த்துக்கொண்டிருக்க நான் என்ன!
சோதனைதளமா!!!!
பெண்ணே,!
நீ பறித்துச்சூட மட்டுமே!
மலரச்செய்கிறேன் எனக்குள்!
காதலை...!
உன் பார்வை துளைத்தெடுத்த!
என் இதயத்தில் வாசித்துவிடு!
காதல் இசை...!
உன் நினைவு உதடுகள்!
வாரிக்கும் புல்லாங்குழலாகவாவது!
அது இருந்துவிட்டுப்போகட்டும்....!
- ராம்ப்ரசாத், சென்னை

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்

தமிழ்நம்பி
செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்!
சிறைக்குச் சென்று!
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்!
நனிவாய்ந் தாரே!!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென!
இயம்பி வந்தார்!!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.!
படத்தில், தாளில்!!
கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி!
களிக்கத்தோன்றி!
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்!
கடுகிச் சென்றார்!!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்!
ஆனார் பின்னர்த்!
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்!
தேர்ந்து சென்றார்!!
!
தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்!
திமிர்கொள் ஆட்சிச்!
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;!
சற்றும் சோரா(து)!
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்!
கதிக நாட்கள்!!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!!
சிறப்ப றிந்தார்!!
தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்!
தனியே தோற்றி!
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்!
றியற்றுங் காலைத்!
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்!
தனிய ராக!!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு!
தொகுதி என்றே!!
செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்!
செய்வீர் இன்னே!!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி!
உயர்வைச் செய்வீர்!!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!!
தகைமை காப்பீர்!!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்!
எழுதி பேசி! !
இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி!
இணையி லாதாய்!!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு!
ஏழ்ந்த போது!
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!!
சொல்வ துண்மை!!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்!
சிறையுஞ் சென்றார்!!
பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட!
பெரிய மீசை!
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி!
சிலவும் மீட்டார்!!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்!
சென்ற போதும்!
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை!
ஓம்பக் கண்டோம்!!
!
பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு!
பொலிசெங் கோட்டை!
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி!
திறத்தில் மூண்டு!
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே!
பீடிற் சென்றே!
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்!
சார்பு தந்தார்!!
நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்!
நுட்ப மாக!!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்!
எடுப்பாய்ச் சொல்வார்!!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர் !
சறுக்கல் ஆகும்!!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்!
அகத்தில் கொள்வோம்!!
!
(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)

இழத்தல் இழத்தலாய்

சகாரா
எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்று !
முட்டி மோதி முயன்றாயிற்று இதுவரை !
எதுவும் முடியவில்லை !
எதா£¢த்தமாய் !
தீமூட்ட வருவார்களென்று !
பந்தங்ளைத் தயார்ப்படுத்தினோம்!
இதுவரை !
மூட்ட யாருமில்லை !
தீயாய் !
இதுமட்டுந்தான் இதுமட்டுந்தானென்று !
பொய்மேல் பொய்யாய்ச் சொல்லும்படியாயிற்று !
இதுவரை !
எதுவுமில்லை வாழ்வில் !
மெய்யாய் !
பெரிய்ய சந்தோசத்தை எதிர்பார்த்து!
சின்னச்சின்ன சந்தோசங்களையெல்லாம் !
உதறும்படியாயிற்று இதுவரை !
எந்தச் சந்தோசமுமில்லை !
பெரிதாய்!
!
நன்றி :: !
”-நதிக்கரையில் தொலைந்த மணல்” !
வெளியீடு : பயணம் புதிது !
புலியூர் 639 114 !
கரூர் வட்டம் !
தொலைபேசி :: 04324 - 50292

தாய்மை

ஷீ-நிசி
மறந்தே போனதடா!!!
தலை சுற்றும் வாந்தியும்!
தள்ளாடும் மயக்கங்களுமாய்;!
நான் கடத்தின!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
விரும்பிய உணவுகள்!
எதிரிலே இருந்தும்!
உனக்கு ஒவ்வாது என்பதால்!
உண்ண முடியாத!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நேராக படுத்தால்!
உன்க்கு ஆகாது என்பதால்!
ஒருக்களித்து படுத்தே!
ஒரு பக்கம் முழுவதும்!
வலியினைப் பெற்ற!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தாய்மை அடைந்ததில்!
பயணம் செய்யக்கூடாது -என்று!
என் தாய்வீடு செல்ல முடியாமல்!
பரிதவித்த!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தலைவலி, காய்ச்சல்!
எது வந்தாலும்!
மாத்திரைகள் கூடாது என்பதால்!
நோயோடு பழகி குணமான!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நீ இந்த உலகை!
காண விரும்பி அவதரித்த -அந்த!
வேதனை நிறைந்த!
அந்த நிமிடங்கள்!
மறந்தே போனதடா!!!
என் எல்லா வலிகளும்!
உன் புனிதமான!
இந்தச் சிரிப்பினால்...!
ஷீ-நிசி