நான்கைந்து நாய்களுக்கு நடுவே!
ஒரு நாயாகவே நானும் பிறந்தேன்!
மற்ற நாய்களைப்போலவே!
முத்தங்கள் பெற்று!
மடிகளிலாடித் !
தாவியபடியே!
நானும் வளர்ந்தேன்!
சொடுக்கொலியென்றால் ஓடிப்போகவும்!
அதட்டுதலென்றால் ஓடிவரவும்!
ஏவினவற்றை எடுத்துவரவும்!
வாக்கிங் போகவும்!
நானும் பழக்கப்படலானேன்!
நாயானவன் நானென்று!
புலரத் தொடங்கியபின்...!
குரைத்துக் குரைத்துக்!
குரைத்துக் குரைத்து...!
பின் கடிக்க முற்பட்டபோதுதான்!
விரட்டி விரட்டியடிக்கப்பட்டேன்...!
பின்னொரு பசிநாளில்!
நன்மதிய நேரத்தில்!
பாதங்கள் தாரொழுக!
எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கையில்தான்,!
நாயானவன் நான் என்றால் - அது!
நாய்களுக்கெல்லாம் இழுக்கென்று!
எண்ணமிடலானேன்...!
அக்கணத்தில்!
இப்பிறவிப் பயனையடைந்து விட்டதுபோல்!
தெருவோடே வீழ்ந்து!
அவசரமாய் இறந்துபோனேன்!
நாயாயிருக்கும்போதே!
!
20090508
ஜதி