ஊரின் அனைத்து வீடுகளும்!
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன!
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்!
யாரோ ஒரு ஆணிற்காக!
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன!
வயதுக்கேற்றபடி தன் உறவுகளுக்காக!
கொலைகாரன் திருடன்!
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்!
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்!
கொடுங்கோலன் காமவெறியன்!
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்!
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை!
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது!
உடல் தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து!
உயிரும் உணவும் அளித்து!
அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்!
ஆண்கள்!
வீட்டைப் புணர்வதன் மூலம்!
பூமியை வளர்க்கிறார்கள்!
பெண்களையல்ல!
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை!
-மாலதி மைத்ரி (காலச்சுவடு இதழ் 47)
மாலதி மைத்ரி