எனதந்தப்புரத் தூய்மையின் போது!
கிடைத்தது என் பால்ய கால உடை!
வண்ணமும் வெளுப்புமாய் கிழிசல்களுக்கிடையில்!
செலவழிக்கப்படாத ஒற்றைப் பைசாவையும்!
மிட்டாய் துணுக்குகளையும்!
தோழியின் முனை முறிந்த பென்சிலையும்!
எவருமறியா நள்ளிரவில் வெளிப்பட்ட!
மூத்திரத்தின் வாசத்தையும்!
இன்னும் பலவற்றையும் தாங்கியபடி...........!
தூக்கியெறியுங்கள்!
என்றென் மனைவி சொல்லும் முன்!
பத்திரம் தேடுகின்றேன் இரகசியமாய்!
எல்லாவற்றையும் சுமந்தபடி!
!
-கா.ஆனந்த குமார்

கா.ஆனந்த குமார்