வசீகரம்!
தொடர்புடையது தான்!
எல்லாக் காலத்தும் இடத்தும்!
பொருத்தம் பெறுவதில்லை!
இயல்புக்கு மகிழ்ந்தாலும்!
தோலைப் பொசுக்கும்!
வெக்கையும் தேவைப்படுகிறது.!
அறியாமல் நிகழும் மாற்றத்தில்!
விரும்பியவற்றோடும் ஒட்டமுடிவதில்லை.!
நிராசையால் நிரம்பும் மனது!
பார்வையை விஷமாக்குகிறது.!
பதட்டமல்ல!
கண்ணீரின் சிவப்பை விரும்பவில்லை.!
அருகிழுக்கப்படும் கோட்டிலிருந்து!
துகள்கள் பறக்கின்றன.!
வட்டத்துடன் இணையாது!
மேலெழும் புகைச்சுருள்!
மனத்தின்!
உட்கூரைவரை தடம் சுருள!
அதிசயமாய் நிழல்கள்!
நடனமாடுகின்றன.!
பழுது பழுதுதான்!
இயல்பை மீறும் அடையாளங்களில்!
கட்டுப்படுவதைத் தடுக்கிறேன்.!
அதன் மெய்யில்!
விளங்கப்பண்ணும் எதுவும்!
சங்கடப்படுத்துகிறது!
சூழல் கனக்க!
புருவ முடிச்சின் விரிவில்!
சிறுமைப்படுகிறது சொல்.!
இடைப்புகும் எச்சரிப்பை!
உதாசீனப்படுத்தும் உறவில்!
காட்சி தெரிக்கிறது.!
மாறிப்பதியும் கருத்தில்!
எந்நிலை விரிய!
கண்களையும்!
விலக்கி வைக்கிறேன்.!
ஆழ்ந்த சுவாசம் உறங்க வைக்கிறது!
இருப்பிலிருந்தும் அந்நியமாக்குகிறது
ப.குணசுந்தரி தர்மலிங்கம்